ஊளி மீன்.. இரவிலும் கண்கள் பளிச்னு தெரியணுமா? இந்த பழம் போதுமே.. கண் பார்வையை கூர்மையாக்கும் உணவுகள்
சென்னை: பார்வையில் கோளாறுகள் ஏற்படாதவாறு, தடுக்கக்கூடிய பழங்கள், காய்கறிகள் என்னென்ன தெரியுமா? எந்தவகையில், சத்தான காய்கறிகள் கண் பார்வையை கூர்மையாக்குகின்றன?
கண் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் நம்மை அண்டவிடாமல் காக்க செய்வது வைட்டமின் A, E, A, C போன்ற சத்துக்களாகும்.. இதில், வைட்டமின் C என்பது, ஆரஞ்சு, எலுமிச்சம், பப்பாளி, கொய்யா, மாம்பழம், ஸ்ட்ராபெர்ரி, அன்னாசி போன்றவற்றில் உள்ளன. இந்த சத்துக்கள் கண்களின் ரத்த நாளங்களுக்குள் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்ய உதவுகிறது..

வைட்டமின் E: வைட்டமின் E சத்துக்களை பொறுத்தவரை, சூரியகாந்தி எண்ணெய், பாதாம், நல்லெண்ணெய், பப்பாளியில் நிறைய உள்ளதால், இவைகள் கண்புரையை வளரவிடாமல் தடுக்க உதவுகின்றன. இதில் பாதாம் சற்று கூடுதலான பலனை தருகிறது. காரணம், பாதாமில் வைட்டமின் E, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்குவதுடன், கண்புரையின் தீவிரத்தையும் குறைக்கிறது.
வைட்டமின் A சத்துக்களை பொறுத்தவரை கேரட், தக்காளி, தர்பூசணி, , கீரைகள், ப்ரோக்கோலி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்றவற்றில் உள்ளன. இந்த சத்துக்கள்துன், இரவு நேரத்திலும் நம்முடைய பார்வையை கூர்மையாக தெரிய உதவுகிறது. இதில் புராக்கோலியில் சற்று அதிகமாகவே சத்து நிறைந்துள்ளது.
கேரட்: இவைகளில் கண்களுக்கு பெஸ்ட் வைட்டமின A நிறைந்த கேரட் ஆகும்.. பீட்டா கரோட்டினும், லூடீன் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட்டும் கேரட்டில் உள்ளதால், விழித்திரை உள்ளிட்ட கண்பார்வைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. இதனால் மஸ்குலர் சிதைவுக்கான ஆபத்தும் குறைகிறது. நம் கண்களிலுள்ள கார்னியாவுக்கு, தேவைப்படுவது இந்த வைட்டமின் A சத்துக்கள்தான் என்பதை மறந்துவிடக்கூடாது. இது அனைத்தையுமே அரை கப் கேரட் சரிசெய்துவிடும்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு, முட்டை இவைகளிலும் வைட்டமின் A அதிகமாக உள்ளது. இதில் முட்டையை பொறுத்தவரை, வெள்ளை கருவில் புரோட்டீன் சத்தும், மஞ்சள் கருவில் கொலாஜனும் அடங்கியிருக்கின்றன. இவைகள்தான், கண்களுக்கு கீழே சுருக்கங்களை வராமல் தடுக்கின்றன.
பாதாம் பருப்புகள்: பாதாம் பருப்புகளை பொறுத்தவரை வைட்டமின் E அதிகமாக இருப்பதால், கண்களின் ஆரோக்கியமான திசுக்களை சேதப்படுத்தும் நிலையற்ற மூலக்கூறுகளிலிருந்து காக்கின்றன.. எனவே தினமும் பாதாம் பருப்பு நான்கைந்து இரவில் ஊறவைத்து மறுநாள் காலையில் சாப்பிட்டால் போதும்.
புரோட்டீன் நிறைந்த கோழிக்கறி, பால், ராஜ்மா, வேர்க்கடலை, பீன்ஸ், சியா விதைகள், ஆளி விதைகளை உணவில் சேர்த்து கொள்வதால், விழித்திரை பிரச்சனைகள் நம்மை அண்டாது.. செல்கள் சேதம் அடையாமல் தடுத்து நிறுத்தவும் இந்த உணவுகள் புரோட்டீன் உணவுகள் உதவுகின்றன.
சியா விதைகள்: அதேபோல, கேரட், பப்பாளி, குடைமிளகாய், சிவப்பு நிற காய்கறி, மாம்பழம், அவகேடா போன்ற மஞ்சள் நிற காய்கறி, பழங்களை தவிர்க்கக்கூடாது.
அதேபோல, கண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க வேண்டுமானால், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன்களை சாப்பிட வேண்டும்.. குறிப்பாக கண்களி்ல் ஏற்படும் மாஸ்குலர் சிதைவை தடுக்க மீன்கள் உதவுகின்றன.. இதற்கு ஒமேகா 3 அதிகமுள்ள சால்மன், கானாங்கெளுத்தி, நெத்திலி, மத்தி போன்ற மீன்களை சாப்பிடலாம்.
ஊளி மீன்கள்: மீன் வகைகளிலே குறைவான கொழுப்பு சத்துள்ள ஊளி மீன்களும் சிறந்ததாகும். ஊளி மீன்களை சாப்பிட்டு வருபவர்களுக்கு கண் சம்பந்தமான எந்த பிரச்சனைகளும் வருவதில்லையாம்..!!
பார்வை கோளாறு, அல்லது பார்வை மங்கலாக இருப்பவர்கள், வெங்காயப்பூவை கசக்கி, அதிலிருந்து 2 சொட்டு, காலை, மாலை என 3 நாட்களுக்கு கண்களில் விட்டு வந்தால் மங்கலான பார்வை சரியாகும்.. இத்தனை மருத்துவ சக்தி வாய்ந்த வெங்காய பூக்களை சமையலில் ஏதாவது ஒரு வகையில் சேர்த்து கொள்வது மிகுந்த ஆரோக்கியமாகும்.












Click it and Unblock the Notifications