தேங்கியிருக்கும் கொழுப்பு குறைய.. பெண்களுக்கு சுகப்பிரசவம் நடக்க.. அடடே இப்படி ஒரு மூலிகையா.. அருமை
சென்னை: எவ்வளவுதான் ஆங்கில மருத்துவம் நடையில் இருந்தாலும், இயற்கை மூலிகையின் முக்கியத்துவம் எப்போதும் குறைவதில்லை.. சளி இருமலில் ஆரம்பித்து இதயநோய் வரையிலும், ஆயுள் வரை நம்மை ஆரோக்கியமாக வைத்திருப்பதும், இயற்கை மூலிகை மருத்துவம் தான். அதில் ஒன்றுதான் இந்த பழம்பாசி செடிகள்.
தமிழகத்தில் ஏராளமாக கொட்டிக்கிடக்கும் மூலிகை செல்வங்களுள் ஒன்று இந்த பழம்பாசி செடி.. நிலத்துத்தி என்றும் இதனை சொல்வார்கள்.. இதன் மகத்துவம் அதிகம் என்பதால்தான், தமிழகத்தில் இந்த மூலிகையை பல மாநிலங்களிலிருந்தும் தேடி வருகிறார்கள்.,

இந்த செடி மட்டுமல்லாமல், இந்த பழம்பாசி செடியின் வேர், பழம்பாசி இலை என அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தவை இந்த பழம்பாசி.. பெண்களின் பிரசவ காலத்திலும், பிரசவம் முடிந்தபிறகும்கூட கொடுக்கப்படும் கஷாயங்களில் பழம்பாசி வேரின் பங்கு அபாரமானது.
கஷாயங்கள்: இந்த செடியின் வேர்களை பறித்து, தகுந்த மருத்துவ சாலைகளுக்கு அனுப்பி வைப்பதால், அங்கு முறைப்படி கஷாயமாக தயாராகிறது.. இந்த கஷாயங்கள் மருத்துவ சாலைகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, மெடிக்கல் ஷாப்களில் விற்கப்படுகிறது. பெரும்பாலும், உடல் சூட்டை தணிக்க பயன்படும் மூலிகை இதுவாகும்..
கருவுற்ற பெண்கள் சுகப்பிரசவம் நடப்பதற்கு இந்த மூலிகையில் லேகியங்களை செய்து தருவார்கள்.. அதாவது, நடகாய லேகியம், தசமூலாரிஷ்டம், ஜிரகரிஷ்டம் போன்ற சித்த, ஆயுர்வேத மூலிகை மருந்துகளில் முக்கிய மூலிகையாக, இந்த பழம்பாசி மூலிகைதான் முக்கிய மூலப்பொருளாக சேர்க்கப்படுகிறது.
நேரடியாக இந்த செடியை பயன்படுத்த முடியாது... ஆனால், பழம்பாசி வேர்கள் மஞ்சள் காமாலைக்கு சிறந்த மருந்தாகிறது. நரம்புத்தளர்ச்சி, வலிப்பு வியாதிகளையும் குணமாக்கக்கூடியது..
ரத்த அழுத்தம்: அதுமட்டுமல்லாமல், ரத்த அழுத்த பாதிப்புகளையும் தீர்க்கக்கூடியது.. அனீமியா பிரச்சனை இருப்பவர்களுக்கு கை கொடுத்து உதவக்கூடிய மருந்து இதுவாஊகம்.. சுவாச கோளறுகள், சளி, இருமல், போனற் தொந்தரவுகளை மட்டுமல்லாமல் மூல பாதிப்புகளையும் குணமாக்கும் தன்மை கொண்டது இந்த பழம்பாசி.
எனவேதான் பெண்களுக்கு தொந்தரவை ஏற்படுத்தும் வெள்ளைப்படுதல் பாதிப்புகளை சரிசெய்ய இதனை மருந்தாக பயன்படுத்துகிறார்கள்... பழம்பாசி இலைகளை பறித்து நன்றாக சுத்தம் செய்து, சீரகம் சேர்த்து அரைத்து மோரில் கலந்து தினமும் காலையில் காபி டீ குடிப்பதற்கு முன்பு குடித்துவந்தாலே வெள்ளைப் படுதல் பாதிப்பு சரியாகிவிடுமாம்.
உடல் எடை: உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு கை கொடுத்து உதவுகிறது இந்த பச்சைநிற மூலிகைச்செடி. பழம்பாசியை உலர்த்தி இடித்து தூளாக்கி, அதை தினமும் மோரில் கலந்து 2 வேளை சாப்பிட்டு வந்தாலே, ஊளைச்சதைகள் கரைய துவங்குமாம்.. நரம்புத்தளர்ச்சி பிரச்சனை இருந்தாலும் நீங்கிவிடும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications