கறிவேப்பிலை.. அப்பறம் கறிவேப்பிலையின் ஈர்க்கு.. அடடே இது தெரியாம போச்சே.. காப்பாற்றும் "கண்ணாத்தாள்"
சென்னை: கறிவேப்பிலையில் இரும்புச்சத்து அதிகம் என்பது அறிந்த ஒன்றுதான்.. அதேசமயம், கண்ணாத்தாள் என்று இந்த கறிவேப்பிலையை அழைக்க காரணம் என்ன தெரியுமா?
சித்த மருத்துவத்தில், கறிவேப்பிலைக்கென்று ஸ்பெஷல் இடம் இருக்கிறது.. மிகச்சிறந்த எதிர்ப்பு சக்தியாக திகழ்வதுடன், சர்க்கரை நோயாளிகளின் வரப்பிரசாதமாக உள்ளது இந்த கறிவேப்பிலை.

கறிவேப்பிலை: கறிவேப்பிலையை உணவில் சேர்த்து கொள்வதால், உடலில் தேவையற்ற கொழுப்பும் சேராது... ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது.. ஜீரண சக்தியை அதிகப்படுத்துகிறது.. இருதய நோய் உள்ளவர்கள்கூட, இந்த கறிவேப்பிலையை அதிகமாக உணவில் பயன்படுத்த வேண்டும் என்று டாக்டர்களே சொல்கிறார்கள்..
அஜீரணம்: வெறும் வயிற்றில் 20 கறிவேப்பிலை மென்று தின்று வந்தால், வயிறு சுத்தமாகும்.. அஜீரண கோளாறு நீங்கும்.. தேவையற்ற கொழுப்புகள் கரைந்து ஓடும்.. ரத்தம் விருத்தியாகும்.. ரத்த சிவப்பணுக்களின் அளவும் அதிகரிக்கும்.. நல்ல கொழுப்புக்களை அதிகரிக்க உதவும்.. தோலின் நிறம் பொலிவாகும்..
இளநரை தடுக்கப்படும். பார்வை கோளாறுகளை நிங்கும். கண் பார்வையை அதிகரிக்க, உணவில் சேர்த்துக்கொள்ள கூறும் லிஸ்ட்டில் முதல் இடத்தில் இருப்பது பீட்டா கரோட்டின்தான். இது பெரும்பாலும் கேரட்டில் உள்ளதால்தான், கேரட் சாப்பிட்டால் கண்களுக்கு நல்லது என்பார்கள். கேரட்டை போலவே, அதே அளவு பீட்டா கரோட்டின் இந்த கறிவேப்பிலையிலும் இருக்கிறதாம். அதனால்தான் சில கிராமங்களில் "கண்ணாத்தாள்" என்று கறிவேப்பிலையை அழைப்பார்கள்.
சுண்டைக்காய்: பித்தத்தை நீக்கும் இந்த கறிவேப்பிலைக்கு உண்டு.. இந்த கறிவேப்பிலையுடன், சுண்டைக்காய் வற்றல், மாதுளை ஓடு, மாம்பருப்பு போன்றவற்றை சமமாக வைத்து தூள் செய்து, தினமும் அரை ஸ்பூன் மோரில் கலந்து குடித்து வந்தால் பித்தம் நீங்கும்.. செரிமானமும் சீராகும். ஆனால், கறிவேப்பிலையை துவையல் செய்தாலோ, அல்லது சட்னி, கஷாயம் எது செய்தாலும், கறிவேப்பிலை ஈர்க்கையும் சேர்த்து பயன்படுத்த சொல்கிறார்கள்.
கறிவேப்பிலையை உருவி அதன் காம்பை கீழே போடாமல் பயன்படுத்தினால், கூடுதல் சத்துக்கள் கிடைக்குமாம்.. கறிவேப்பிலையுடன் அதன் ஈர்க்கு, இஞ்சி, பூண்டு, மிளகு, மஞ்சள், பெருங்காயம், உப்பு சேர்த்து சூப் போலவும் வைத்து குடித்தால் ரத்த சோகை நீங்கும்.
கஷாயம்: அல்லது கறிவேப்பிலையுடன் கொய்யா இலையும், நித்யகல்யாணி இலையையும் சேர்த்து கொதிக்க வைத்து கஷாயம் போல வைத்து குடித்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும் என்கிறார்கள். நீரிழிவு முதல் இருதய நோய் வரை ஆபத்துகளை அண்டவிடாமல் செய்யும் தன்மை, இந்த கறிவேப்பிலைக்கு உண்டு..!!
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications