முருங்கை விதை.. வியப்பூட்டும் சப்ஜா விதை.. சல்லுனு வெயிட் குறையும்.. 2 விதையையும் இப்படி சாப்பிடுங்க
சென்னை: விதைகள் எப்போதுமே நம்முடைய உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பவை. சம்பந்தப்பட்ட மரத்தின் மொத்த சத்துக்களை உள்ளடக்கியிருப்பதே அதன் விதைகள் என்பதை மறுக்க முடியாது. அதில் மிக முக்கியமானதுதான், சப்ஜா விதைகள் & முருங்கை விதைகள்.
சப்ஜா விதைகள் & முருங்கை விதைகள் இரண்டுமே பல்வேறு மருத்துவ நன்மைகளை தருகின்றன என்றாலும், உடல் எடையை குறைப்பதில் இவைகளுக்கு பெரும் பங்கு உள்ளது.

முருங்கை விதை: முருங்கையில், பொட்டாசியமானது, வாழைப்பழத்தை விடவும் அதிகமாக உள்ளது.. இதிலுள்ள புரோட்டின், முட்டைக்கு இணையாக உள்ளது.. இதிலுள்ள கால்சியமானது, பசும்பாலைவிட, 4 மடங்கு அதிகமாக உள்ளது.. இதிலுள்ள வைட்டமின் C சத்தானது, ஆரஞ்சுப் பழத்தைவிட அதிகமாக உள்ளது..
மற்ற அனைத்து கீரைகளில் இருப்பதைவிட, இந்த முருங்கைக்கீரையில் ஏகப்பட்ட இரும்புச் சத்துக்கள் உள்ளன. அதனால்தான் இந்த முருங்கையை, இயற்கையின் சஞ்சீவி என்கிறார்கள்.
எலும்புகள் பலம்: எலும்புகள் வலிமையடைய செய்யவும், மூலநோய் உள்ளவர்கள், சளி பிரச்சனை பாதிப்பு உள்ளவர்கள், ரத்தசோகை, வயிற்றில் புழு பிரச்சனை உள்ளவர்கள், கணையம், கல்லீரலில் வீக்கம் உள்ளவர்கள், ரத்த சர்க்கரை பிரச்சனை உள்ளவர்கள், மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள், மூலநோய் பாதிப்பு உள்ளவர்கள், என அனைவருக்குமே இந்த முருங்கை பெரும் பலன் தருகிறது.உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு மட்டுமல்ல, சர்க்கரை நோயாளிகளுக்கும் இந்த விதைகள் மிகவும் நன்மைதரக்கூடியது.. இதிலுள்ள அதிக அளவிலான நார்ச்சத்து, ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பை தடுக்கிறது. ஒரு ஸ்பூன் சப்ஜா விதையில் 7 கிராம் நார்ச்சத்து இருக்கிறதாம்.. அதனால்தான், எடை இழப்புக்கு மிகச்சிறந்த உணவாக இது பார்க்கப்படுகிறது. அத்துடன் பசியையும் கட்டுப்படுத்தக்கூடியது இந்த சப்ஜா விதைகள்.
எப்படி பயன்படுத்தலாம்: சப்ஜா விதைகள் எப்போதுமே தண்ணீரில் ஊறவைத்து பயன்படுத்த வேண்டும்... 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊற வைத்தபிறகு, சாப்பிடலாம். எலுமிச்சை ஜூஸ், பலூடா அல்லது மற்ற பிரெஷ் ஜூஸ்களில் சேர்த்து இந்த விதைகளை சாப்பிடலாம்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications