சீதாப்பழ கொட்டை.. சீத்தாப்பழம் போலவே சீத்தாப்பழ விதைகள்.. இப்படி செய்தாலே, தலையிலுள்ள பேன் ஓடிருமாமே
சென்னை: சீதாப்பழத்தை போலவே, சீத்தாப்பழ கொட்டைகளும் மிகுந்த பலனை தருகின்றன.. அந்தவகையில், சீதா பழ விதைகள் தரும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
சீதாப்பழத்தில் ஊட்டச்சத்தும், கனிமச்சத்தும், வைட்டமின் B, மக்னீசியம், வைட்டமின் C, நார்ச்சத்து, இரும்புச்சத்து போன்றவை நிறைந்துள்ளன.. மூட்டு வலி, முழங்கால் வலி உள்ளவர்களுக்கும், ஆர்த்ரைட்டீஸ் பிரச்சனை இருப்பவர்களுக்கும் சீதாப்பழம் தீர்வை தருகிறது..

எலும்புகளை உறுதிப்படுத்தக்கூடிய அளவுக்கு கால்சியம் இந்த சீதாப்பழத்தில் உள்ளது.. இது கலோரி நிறைந்த பழம் என்பதால், உடல் பலம்பெற இந்த பழத்தை சாப்பிடலாம்.
பாதிப்புகள்: சீதாப்பழத்துடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிட்டு வந்தாலே, கொலஸ்ட்ரால் உடலில் தங்காது.. டெங்கு, வைரஸ் காய்ச்சல் பாதிப்புகளுக்கு ஆளாகியிருப்பவர்கள், விரைந்து குணமாகி வருவதற்கு இந்த பழம் கை கொடுக்கிறது..
மேலும், மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டத்தையும் சீராக்கி, ரத்த சோகை பிரச்சனையையும் தீர்ரக்கிறது. மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பயங்கர நோய்களை அண்டவிடாமல் காப்பதுடன், சருமத்துக்கும் கவசம் போல உள்ளது இந்த பழம்.
ஆண்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்த சீதாப்பழங்கள், நச்சுக்களை வெளியேற்றி, குடல் குடல் பாதுகாப்பை தரக்கூடியது.. அல்சர் பிரச்சனைக்கும், ஆஸ்துமா பிரச்சனைக்கும் தீர்வாக மட்டுமல்லாமல், கண்பார்வை கூர்மை பெறவும், சீதாப்பழங்கள் உதவுகின்றன. இந்த பழத்தில் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவாக உள்ளதால், சர்க்கரை நோய் உள்ளவர்கள் சீதாப்பழத்தை சாப்பிடலாம். ஆனால், காயாக இருக்கும்போது சாப்பிட்டால் கூடுதல் பலன்.
சீத்தாபழங்கள் தரும் நன்மைகள் இவ்வாறிருந்தாலும், அதைவிட நன்மைகளை தருவது சீத்தாபழங்களின் கொட்டைகள்தானாம். இதன் கொட்டைகளில் ஃபேட்டி ஆசிட் அதிகம் இருப்பதால் அவை எரிவாயுவை உற்பத்தி செய்கின்றன.
பூச்சிகள்: பெரும்பாலும் சீத்தாபழ கொட்டைகளை, அரைத்து பவுடராக்கி பயன்படுத்துகிறார்கள்.. சீதாபழ விதைகளை மிக்ஸியில் தூள் செய்து, வைத்து கொள்ள வேண்டும. வீட்டிற்குள்ளோ அல்லது தோட்டத்திலோ பூச்சிகள் நிறைந்திருக்கும் இடங்களில் இந்த பவுடரை தெளித்தாலே போதும். மொத்த பூச்சிகளும் பறந்துவிடும்.. எறும்பு, கரப்பான்பூச்சி, பல்லி, கொசு போன்ற தொல்லைகள் இருந்தாலும், இந்த பவுடரை 2 நாள் தொடர்ந்து தூவினால் போதும்.. தீர்வு கிடைக்கும்.
அபார்ஷன்கள் செய்யும் அளவுக்கு, சீதாப்பழ கொட்டைகளுக்கு, தன்மை உள்ளதாம்.. அதனால்தான், கருக்கலைப்பு மருந்துகளில் இந்த சீதாபழ விதைகளை பயன்படுத்துகிறார்கள். இந்த சீதாப்பழ கொட்டைகளை விழுதுபோல அரைத்து தலையில் தடவி குளித்து வந்தால், பேன் தொல்லை முழுமையாக நீங்கிவிடும்..
அதேபோல, மீன் பிடிக்கவும் இந்த கொட்டைகளின் பவுடர் பயன்படுத்தப்படுகிறது. காரணம், இந்த கொட்டையில் ஒருவிதமான நச்சு உள்ளதால், மீன்களுக்கு ஒவ்வாததாக உள்ளதுடன், அவை வெளியே தானாகவே வலையில் சிக்கி கொள்ளுமாம்.
பார்வை இழப்பு: சீதாப்பழக்கொட்டைகளுடன், வேப்பங்கொட்டைகளும் சேர்த்து தயாரிக்கப்படும் பூச்சிக்கொல்லிகள், சக்திவாய்ந்த நச்சு பூச்சிக்கொல்லியாக கருதப்படுகிறது.. இது இயற்கையான மருந்து என்பதுடன், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கக்கூடியது.. ஆனால், இந்த பவுடரை கண்களில் பட்டுவிட்டால், பார்வை இழப்பே ஏற்பட்டுவிடுமாம். அதனால், கவனமாக கையாள வேண்டும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications