வெறும் ஜாதிக்காய்.. கழுத்து சுளுக்கை அசால்ட்டா விரட்டும் டிப்ஸ்.. அந்த தலைகாணியை தூக்கி போட்டுருங்க
சென்னை: கழுத்துப் பிடிப்பு அல்லது கழுத்து சுளுக்கு ஏற்பட்டுவிட்டால் இதை அலட்சியப்படுத்தவே கூடாது என்கிறார்கள்.. இதன் அறிகுறி என்ன? கழுத்து பிடிப்பு ஏன் ஏற்படுகிறது? நிவாரணம் என்ன தெரியுமா?
கழுத்து சுளுக்கு ஏற்பட எத்தனையோ காரணங்கள் இருக்கலாம்.. நாம் முறையாக தூங்காவிட்டாலும் இப்படி கழுத்து பிடிப்பு வந்துவிடும்.

முதுகு பகுதி: உட்கார்ந்தபடியே வேலை பார்க்கும் நபர்கள், குறிப்பாக, ஐடி ஊழியர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், மற்றும் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்க்கும் யாராக இருந்தாலும், அவர்களுக்கு கழுத்து வலி, கழுத்து பிடிப்பு ஏற்பட்டுவிடுவது இயல்பான ஒன்றுதான்.. கழுத்து பகுதி என்றாலும், முதுகுப்பகுதியின் மேல் பகுதியில், சதைப்பிடிப்புகள் தோன்றிவிடும்.
அதேபோல, தலையில், அல்லது கழுத்து பகுதிகளில் காயம் ஏற்பட்டிருந்தாலும் கழுத்து வலி ஏற்படலாம்.. நீண்ட நேரம் குனிந்திருந்தாலும் வலி ஏற்படலாம்.. வயது காரணமாக ஏற்படும் எலும்புத் தேய்மானத்தினாலும், கழுத்து வலி ஏற்படலாம். இப்படி வலி ஏற்பட்டால், சில சமயம் மூச்சு விட முடியாமல் சிரமம் வந்துவிடும்.. சில சமயம் எதையும் சாப்பிடக்கூட முடியாது.
கழுத்து வலி: இந்த கழுத்து வலியோ, அல்லது கழுத்து சுளுக்கோ ஏற்பட்டால், வெந்நீரில் அல்லது ஐஸ் கட்டிகளை வைத்து ஒத்தடம் தரலாம்.. ஐஸ் கட்டிகளை ஒரு துணியில் சுற்றி, குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் வலி ஏற்பட்ட இடத்தில் வைத்து ஒத்தடம் தரலாம்..
தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடமாவது உடற்பயிற்சி செய்தால், கழுத்து வலிகள் ஏற்படாது. டென்ஷன், கோபம், பதற்றம், மன அழுத்தம் இல்லாமல் அமைதியான மனநிலையில் வேலை பார்க்க வேண்டும். இதற்கு யோகாவும், தியானமும் கட்டாயம் உதவுகின்றன.
என்ன செய்யலாம்: ஒரே நிலையில் கழுத்தை வைத்திருக்காமல், மாறி மாறி அசைத்து கொண்டேயிருக்க வேண்டும்.. தசைகளுக்கு இறுக்கம் தருவதுபோல செயல்களை செய்ய வேண்டும்.. நேராக நிமிர்ந்து உட்கார்ந்து பணிபுரிய வேண்டும். முதுகு வளைந்தவாறு உட்கார்ந்தால், நிறைய பிரச்சனைகள் வந்துவிடும். ஒரே ஒரு தலைகாணியை வைத்து படுத்தாலே போதும். கடினமான தலைகாணியாக இருந்தால், அதை உடனே மாற்றிவிட வேண்டும்.
அதேபோல, கழுத்தில் சுளுக்கு ஏற்பட்டுவிட்டால், இதற்கு ஜாதிக்காய் உதவுகிறது.. ஜாதிக்காயை உடைத்து சிறிதளவு பாலுடன் சேர்த்து அரைக்க வேண்டும். இதை கொதிக்க வைத்து, சுளுக்கு உள்ள இடத்தில் மெதுவாக தடவி பற்றுப்போட்டால் சுளுக்கு சரியாகிவிடும். இப்படி 3 நாட்கள் செய்து வர சுளுக்கு சரியாகிவிடும்.
கல் உப்பு: அல்லது கல் உப்பு + பூண்டு இரண்டையும் இடித்து பொடித்து, சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் பற்று போடலாம்.. முருங்கை பட்டையுடன் சிறிது பெருங்காயம், கடுகு, சுக்கு சேர்த்து அரைத்து, சூடு செய்து பற்று போடலாம்..!!
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications