ஆரஞ்சு பழம்.. தலைமுடிக்கு ஆரஞ்சு பழத்தோல் போதும்.. ஆரஞ்சு பழத்தை யாரெல்லாம் சாப்பிட கூடாது தெரியுமா?
சென்னை: ஆரஞ்சு பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? ஆரஞ்சு தோல்களை நாம் எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?
ஆரஞ்சு பழத்தை பொறுத்தவரை, இதிலுள்ள வைட்டமின் C மிகச்சிறந்த சத்துக்களாக திகழ்கிறது.. நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதால், புற்றுநோய் ஏற்படாமல் தடுப்பதில் ஆரஞ்சு பழத்துக்கு முக்கிய பங்கு உள்ளது. தினமும் 1 ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு வந்தாலே, பெண்களுக்கு 50 சதவீதம் புற்றுநோய் வரும் ஆபத்து குறைந்துவிடுகிறதாம்.

இதயம்: இதேபோல, இதயத்திற்கு நன்மை தரக்கூடிய பழங்களில் ஆரஞ்சு அபரிமிதமாகவே உதவுகிறது.. இதனால், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களை அண்டவிடாமல் தடுக்கிறது. இப்பழத்திலுள்ள பொட்டாசியம் சத்துக்கள், ரத்த அழுத்தத்தினை கட்டுக்குள் வைக்க தூண்டுகிறது.
கொழுப்பை குறைக்க இப்பழம் உதவுகிறது. அத்துடன் உடலிலுள்ள தேவையற்ற கலோரிகளையும் எரிக்க உதவுகிறது.. எனவே டயட்டில் இருப்பவர்களும், உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களும் ஆரஞ்சு பழத்தை விட்டுவிடக்கூடாது.
கலோரிகள்: பெண்களுக்கு பரவலாக ஏற்படும் ரத்த சோகையை விரட்டுகிறது இந்த ஆரஞ்சு.. அதிலும் கர்ப்பிணிகள் தவறாமல் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பது நன்மை தரும்.. காரணம், கர்ப்பத்திலுள்ள குழந்தைகளும் தோல் ஆரோக்கியம், கண் பார்வை ஆரோக்கியம் பெறுவதற்கு இந்த ஆரஞ்சு பழம் தூண்டுகோலாகிறது..
குளிர்ச்சி தரக்கூடிய இந்த பழம், உடலிலுள்ள உஷ்ணத்தை விரட்டியடிக்கக் கூடியது.. உடல் சூடு, சிறுநீர்கடுப்பு, மூல வியாதி போன்ற உஷ்ண கோளாறுகளை தவிர்க்க ஆரஞ்சு பழங்கள் உதவுகின்றன.. சிறுநீர் கோளாறுகள் இருப்பவர்கள், இரவு தூங்கும்முன்பு, அரை டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் குடித்தாலே நிவாரணம் கிடைத்துவிடும்.
தலைமுடி: ஆரஞ்சு பழத்தில் பொட்டாசியம் சத்துக்கள் அதிகமாக இருப்பதால், ரத்த அழுத்தத்தினை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.. முடி கொட்டுதலை தடுத்து நிறுத்துவதுடன், முடி வளரவும் வழி வகுக்கும்... பல்வலியால் அவதிப்படுபவர்கள், ஆரஞ்சு பழம் சாப்பிட்டால் வலி குறையும்.. தலைமுடி உதிர்வது அதிகமாக இருந்தால், தினம் 1 ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வரலாம்.. முடி கொட்டுதலை தடுத்து நிறுத்துவதுடன், முடி வளரவும் இது வழி வகுக்கக் செய்யும்..
நார்ச்சத்து நிறைந்த இந்த ஆரஞ்சு பழம், செரிமானத்துக்கு தூண்டுகிறது. குளிர்காலத்தில் மந்தமான சருமம், வறண்ட கூந்தல் இப்படியான பிரச்சனைகள் இருந்தாலும், ஆரஞ்சு பழமே நமக்கு பயன்படுகிறது.. மூட்டு வலி, உடம்பில் அதிக உப்பு சத்து போன்ற உபாதைகளுக்கு இந்த ஆரஞ்சு பழமே கைகொடுக்கிறது..
சூப்பர் மருந்து: ஆரஞ்சு தோலிலும் பல நன்மைகள் உள்ளன.. இந்த தோலை காயவைத்து, பவுடர் செய்து வைத்து கொண்டால் போதும். பல பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படும்..
குறிப்பாக, உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பவர்கள், இந்த பவுடரை சுடுநீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம்.. இதனால் வாந்தி, நெஞ்செரிச்சல், பித்தம் போன்ற தொந்தரவும் நீங்குகிறது.. சீரான செரிமானமும் நடைபெறும். நன்றாக பசியும் எடுக்கும். சளி, இருமல், போன்ற சுவாச கோளாறுகள் இருந்தால், அப்போதும் இந்த பவுடர் கை கொடுத்து உதவும்..
நெஞ்செரிச்சல்: இதற்கெல்லாம் காரணம், இந்த ஆரஞ்சு தோலில் பாலிபினால்கள் நிறைய உள்ளன.. தோல் புற்றுநோயை எதிர்த்து போராட உதவுவதே இந்த பாலிபினால்கள்தான்.. எனவே, நம்முடைய சருமத்துக்கு கவசம் போல ஆரஞ்சு தோல் உதவுகிறது எனலாம்.
அதனால்தான், ஆரஞ்சு தோல் பவுடரை, சருமத்துக்கு பேக் போல போடுவார்கள்.. இதனால், இறந்த செல்களை நீக்கி, சருமம் பளபளப்பாகவும், பொலிவாகவும் திகழும். பருக்கள், மருக்கள், மங்குகள் இருந்தாலும் நீங்கிவிடும்..
கண்களுக்கு கீழே கருவளையம் இருந்தாலும் சரி, சருமத்தில் சுருக்கம் இருந்தாலும் சரி, எண்ணெய் பசை இருந்தாலும்சரி, மொத்தத்துக்கும் இந்த ஆரஞ்சு தோல் பவுடர்தான் மருந்தாகிறது. எனவே, ஆரஞ்சு பழ தோலை காயவைத்து, பொடி செய்து, உடலுக்கு பூசி குளித்தும் வரலாம். அல்லது இந்த பொடியில் சிறிது தயிர் சேர்த்து முகத்துக்கும், கழுத்து, கைகளுக்கும் தேய்த்தும் வரலாம்.
தவிர்க்கலாம்: ஆரஞ்சு பழங்கள், சிட்ரஸ் வகையை சேர்ந்தவை என்பதால், உணவுக்கு பிறகுதான் ஆரஞ்சு சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றில் அமிலம் உண்டாக்கிவிடும். எனவே, இந்த ஆரஞ்சுபழத்தை அசிடிட்டி, அஜீரண பிரச்சனை இருப்பவர்கள், வயிறு தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்கள் தவிர்க்கலாம்.. மார்பு மற்றும் வயிற்றில் எரியும் உணர்வை அதிகரிக்கும். இருமல் உள்ளவர்களும் இதை தவிர்க்கலாம்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications