ஒரே கிழங்கில் ஓராயிரம் அதிசயம்.. தண்ணீர்விட்டான் கிழங்கு.. பலபல பயனை பெண்ணுக்கு தரும் சூப்பர் பவுடர்
சென்னை: பெண்களுக்கு இயற்கை அளித்த வரப்பிரசாதம் என்றால் அது தண்ணீர் விட்டான் கிழங்குதான்.. எப்படி தெரியுமா?
மிகவும் குளிர்ச்சியான இந்த தண்ணீர் விட்டான் கிழங்கு, நாட்டு மருந்து கடைகளில் பவுடர் வடிவில் கிடைக்கும்.. தித்திப்பு சுவையுடன் இருக்கும்.. முழுக்க முழுக்க மருத்துவ குணங்களை கொண்ட கிழங்கு என்பதால், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இந்த கிழங்கு பயிரிடப்பட்டு வருகிறது. அபரிமிதமான நார்ச்சத்து உள்ளது இந்த தண்ணீர்விட்டான் கிழங்கு..

உடல் எடை: எனவே, உடல் எடையை குறைக்க பெரிதும் துணை புரிகிறது.. இதயம், எலும்புகள், சிறுநீரகம், நரம்புகள் இயக்கத்தை மேம்படுத்துவதுடன், எலும்பு, மார்பகம், பெருங்குடல், குரல்வளை, நுரையீரல் ஆகிய பகுதிகளில் ஏற்படும் புற்றுநோயை எதிர்த்து போராடுவதிலும் இந்த தண்ணீர்விட்டான் கிழங்குக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது.
சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளுக்கு இந்த கிழங்கு தீர்வு தருகிறது.. ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. தண்ணீர் விட்டான் கிழங்கை, பாலில் சேர்த்து அரைத்து காயவைத்து, பொடியாக்கி கொள்ள வேண்டும். இந்த பொடியை தினமும் 2 வேளை சாப்பிட்டுவந்தாலே நீரிழிவு நோயும் குணமாகுமாம். இந்த கிழங்குடன், திரிகடம் சேர்த்து, தினமும் 2 கிராம் பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டால் எப்பேர்ப்பட்ட காய்ச்சலும் ஓடிவிடும்.
மருத்துவ குணம்: இந்த கிழங்கின் பவுடரை தூளாக்கி தினமும் 1 ஸ்பூன் வீதம், 2 வேளை, ஒரு மாதம் வரை தொடர்ந்து பாலுடன் சேர்த்து குடித்து வந்தால், விந்தணுக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.. இப்படி ஏகப்பட்ட மருத்துவ குணம், இந்த தண்ணீர்விட்டான் கிழங்கில் இருந்தாலும் டாக்டரிடம் ஆலோசனை பெற்று எடுத்து கொள்வதே சிறந்தது.
அனைத்தையும்விட, பெண்களுக்கு பேருதவி புரியக்கூடியது இந்த கிழங்குகள்.. தாய்ப்பால் நன்றாக சுரக்க வேண்டுமென்றால், இந்த மூலிகையைதான் முன்னோர்கள் தருவார்களாம்.. அதேபோல, மாதவிடாய் நேரங்களில் அதிகப்படியான உதிரப்போக்கை கட்டுப்படுத்த, கை கொடுப்பது இந்த கிழங்குதான்.
தண்ணீர்விட்டான் கிழங்கு: 4 ஸ்பூன் தண்ணீர் விட்டான் கிழங்கு ஜூஸ் போல தயாரித்து, அதில், 2 ஸ்பூன் தேன் கலந்து குடித்தால், உதிரப்போக்கு உடனடியாக கட்டுப்படும்.அதேபோல, வெள்ளைப்படுதல் அதிகமிருக்கும்போது, தண்ணீர்விட்டான் கிழங்கை உணவில் அதிகம் சேர்த்து கொள்ளலாம்.. இந்த மூலிகை ஹார்மோன் சமநிலையின்மையை சீராக்குகிறது.
அதுமட்டுமல்ல, கர்ப்பப்பையிலுள்ள நீர்கட்டிகளின் சிகிச்சைக்கும், இந்த தண்ணீர் விட்டான் கிழங்கு பயன்படுத்தப்படுகிறது...இந்த கிழங்கில், ஸ்டெராய்டல் சபோனின்கள், கிளைகோசைடுகள், ஆல்கலாய்டுகள், பாலிசாக்கரைடுகள், மியூசிலேஜ்கள் உட்பட 50 க்கும் மேற்பட்ட சேர்மங்கள் நிறைந்திருப்பதால், இனப்பெருக்கத்திற்கு தூண்டுகோலாகின்றன.. இதிலுள்ள பயோ ஆக்டிவ் கூறுகள், பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
வரப்பிரசாதம்: சுருக்கமாக சொல்லப்போனால், ஹார்மோன்களை சமநிலைப்படுத்தவும், கருப்பையை பராமரிக்கவும், புதிய நீர்க்கட்டிகளின் வளர்ச்சியை தடுக்கவும், அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்தவும், வெள்ளைப்படுதலை நீக்கவும் இந்த தண்ணீர்விட்டான் கிழங்கு அருமருந்தாகின்றன..

அதேபோல, பருவமடைந்து பெண்கள் சிலர் ரத்தசோகையுடன், உடல் மெலிந்து காணப்படுவார்கள்.. மார்பக வளர்ச்சியில்லாமல் ஆரோக்கிய குறைபாடு கொண்டவர்களாகவும் காணப்படுவார்கள். இவர்களுக்கு தண்ணீர்விட்டான் கிழங்கு சேர்ந்த மருந்துகள் கைகொடுத் உதவுகின்றன.
கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு ரத்தவிருத்திக்கு இந்த மருந்துதான் தரப்படுகிறது.. கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சியையும் இந்த தண்ணீர்விட்டான் கிழங்கு ஊக்குவிக்கிறதாம்.
டாக்டர் ஆலோசனை: இப்படி ஏகப்பட்ட மருத்துவ குணம், இந்த தண்ணீர்விட்டான் கிழங்கில் இருந்தாலும் டாக்டரிடம் ஆலோசனை பெற்று எடுத்து கொள்வதே சிறந்தது.. இப்படி ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த தண்ணீர்விட்டான் கிழங்கினை, டாக்டர்களின் முறையான ஆலோசனையை பெற்று மருந்தாக உட்கொண்டு பலன் பெறலாம்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications