ஆரஞ்சு பழத்தின் ஆச்சரியம்..ஆரஞ்சு தோல் மாதிரியே, விதைகளிலும் அதிசயம்.. தலைமுடி வளர ஆரஞ்சு விதை ஆயில்
சென்னை: ஆரஞ்சு பழத்தை போலவே, ஆரஞ்சு பழ விதைகளிலும் ஏகப்பட்ட நன்மைகள் ஒளிந்திருக்கின்றன.. ஆரஞ்சு விதைகள் தரும் பலன்கள் என்னென்ன தெரியுமா?
பெரும்பாலும் பழங்களின் விதைகளில் ஊட்டச்சத்து பல நிறைந்திருக்கின்றன.. இது ஆரோக்கியத்தை அதிகரிக்க தூண்டுகோலாகிறது.. விதைகளில் நுண்ணுயிர் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு, நீரிழிவு எதிர்ப்பு, அல்சைமர் எதிர்ப்பு மற்றும் டையூரிடிக் பண்புகளும் உள்ளன.

வைட்டமின்கள்: நாம் பழங்களுடன் அதன் விதைகளை சாப்பிடும்போது, அவை சமநிலைப்படுத்தும் தின்பண்டங்களாக செயல்படுகின்றன. இதனால், வைட்டமின் A, E, சரியாக உறிஞ்சுவதுடன், உடலில் சர்க்கரை அளவு அதிகரிப்பதையும் தடுக்கிறது. அந்தவகையில், ஆரஞ்சு பழ விதைகளில், பழத்தைவிட அதிக நன்மை இருக்கின்றன..
விதைகள்: சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்களாக இந்த விதைகள் திகழ்கின்றன.. இதனால், உடலை புத்துணர்ச்சியுடனும் சுறுசுறுப்பாகவும் வைத்து கொள்ள முடியும்... உடலிலுள்ள நச்சுக்களை நீக்க இந்த விதைகள் துணைபுரிகின்றன.
அதனால், எப்போதுமே பழத்துடன் விதைகளையும் சேர்த்து சாப்பிடலாம். அல்லது விதைகளை தனியாக பிரித்து வைத்து, பவுடராக்கி சாலட் போன்றவற்றில் பயன்படுத்தலாம். அல்லது ஆரஞ்சு ஜூஸ் தயாரிக்கும்போது, அதில் விதைகளோ அல்லது பவுடரையோ சேர்த்து கொள்ளலாம்.

ஆரஞ்சு விதைகள்: ஆரஞ்சு விதைகளில் வைட்டமின்C, B6, மெக்னீசியம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் , நார்ச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. அதனால்தான், இந்த விதைகளிலிருந்து எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.. இந்த எண்ணெய் தலைமுடி வளர்ச்சிக்கு பேருதவி புரிகிறது.. வறண்ட முடி உடையவர்களுக்கு இந்த ஆரஞ்சு எண்ணெய் வரப்பிரசாதமாகும். தலைமுடியும் அடர்த்தியாக வளர துவங்கும்.
இந்த விதைகளிலிருக்கும், பயோஃப்ளவனாய்டுகள் போன்ற சத்துக்கள் உள்தால், உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றன. இதனால் தலைமுடி உறுதியாவதுடன், பலவீனமான தலைமுடியையும் வலுவாக்குகிறது.
இந்த எண்ணெய்யை, தேங்காய் எண்ணெயுடன் கலந்து தலைக்கு தேய்த்து வந்தால், கூடுதல் பலன் கிடைக்கும். அதேபோல, இந்த விதைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், சருமத்துக்கு பேருதவி புரிகின்றன..
ஆரஞ்சு ஆயில்: ஆரஞ்சு எண்ணெய் இல்லாவிட்டாலும்கூட, வெறும் ஆரஞ்சு விதைகளை அரைத்து தலைக்கு கண்டிஷனராக பயன்படுத்தலாம்... அல்லது இந்த விதைகளை உலர்த்தி அரைத்து பவுடராக்கி வைத்து கொண்டால், ஹேர் பேக்காகவும் பயன்படுத்தலாம். இந்த எண்ணெய்யில் மணம் கமழும் வாசனை வருவதால், சிலர் கேக், கூல்டிரிங்ஸ் செய்ய பயன்படுத்துவார்கள்.. சிலர் வீடுகளை சுத்தம் செய்யவும் வாசனைக்காக பயன்படுத்தவார்கள்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications