கொத்து கொத்தா ராஜகனி.. அக்கு அக்கா உதிரும் தலைமுடிக்கு.. நெல்லிக்காய் சோறு + நெல்லிக்காய் சாறு.. செம
சென்னை: கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதா? நரைமுடி அதிகமாக இருக்கிறதா? நெல்லிக்காய் மட்டும் போதும்.. தலைமுடியின் வளர்ச்சி நிச்சயம் அதிகரிக்கும்..
ரத்த சோகை உள்ளவர்கள், இரும்புச்சத்து நிறைந்த நெல்லிக்காயை சாப்பிட வேண்டும்.. ரத்த ஓட்டம் சீராக இருந்தாலே, தலைமுடி உதிர்வு இருக்காது.. அதனால்தான் தலைமுடிக்கு தயாரிக்கும் ஷாம்புகள், எண்ணெய்களில் இந்த நெல்லிக்காயை மூலப்பொருட்களாக அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

பொடுகு தொல்லை: தலையிலுள்ள பொடுகை நீக்குவதில், நெல்லிக்காய் சாறுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. ஒருவேளை பொடுகு அதிகமாக இருந்தால், எலுமிச்சை சாறு, நெல்லிக்காய் சாறு இரண்டையும் சமஅளவு எடுத்து தலைக்கு தேய்த்து வந்தாலும் பொடுகு காணாமல் போகும்.
வழக்கமாக தலைக்கு தேய்க்கும் தேங்காய் எண்ணெய்களில் இந்த நெல்லிக்காய்களையும் வெட்டிப்போட்டு எண்ணெய் காய்ச்சி பயன்படுத்துவார்கள்.. இது தலைமுடிக்கு அபரிமிதமான புரோட்டீன் சத்துக்களை தரக்கூடியது. தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக, எள் எண்ணெய்யுடன் நெல்லிக்காய் சாறு, வெட்டிவேர் கலந்து நன்றாக காய்ச்சி, ஆறவைத்து, தலைக்கு தேய்த்து வந்தால், கூடுதல் நன்மைகள் கிடைக்கும்..
வறண்ட கூந்தல் : ஒருவேளை உங்களுக்கு வறண்ட கூந்தலாக இருந்தால், எள் எண்ணெய்க்கு பதிலாக, பாதாம் எண்ணையில், நெல்லிக்காய் சாறு கலந்து காய்ச்சி, பயன்படுத்தலாம்.. இதனால் கூடுதல் சத்துக்கள் தலைமுடிக்கு கிடைக்கிறது. வாரம் 2 முறை இந்த பாதாம் எண்ணெய்யை தேய்த்து வந்தால் போதும்.
வளரும் பிள்ளைகளுக்கு, நெல்லிக்காயை கொடுத்து பழக வேண்டும்.. இந்த சுவையை அவர்கள் விரும்பாவிட்டால், இனிப்பு வடிவில், லட்டு வடிவில் செய்து தரலாம்.
வளரும் குழந்தைகள்: முக்கியமாக குழந்தைகளுக்கு நெல்லிக்காய் சோறு தருவதால், தலைமுடி வலுவாகும்.. நெல்லிக்காயின் கொட்டைகளை நீக்கி குறைவாக தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்துகொள்ள வேண்டும். ஒரு வாணலில் சிறிது நெய் ஊற்றி, நான்கைந்து மிளகு போட்டு தாளித்து, அரைத்த நெல்லிக்காய் விழுதை கொட்டி, வடித்த சோற்றையும், உப்பையும் சேர்த்து கிளறினால், நெல்லிக்காய் சோறு ரெடி.
அதேபோல, நெல்லிக்காய்களை நன்றாக கழுவி அதை இட்லி தட்டில் 10 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுத்து கொள்ள வேண்டும். பிறகு அதனை ஆறவைத்து, துருவிக் கொள்ள வேண்டும்.
துருவிய நெல்லிக்காய்: ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி, பாதாம், பாதாம், பருப்புகளை சேர்த்து வறுக்க வேண்டும். இதில், துருவிய நெல்லிக்காயும் சேர்த்து வதக்கி, சிறிது நாட்டுச்சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் கிளறிவிடவேண்டும்.
இறுதியில், ஏலக்காய், சுக்கு சேர்த்து இறக்கிவிட வேண்டும். தேவைக்கேற்ப நெய், நட்ஸ்களை சேர்த்து கொள்ளலாம். இந்த கலவை சூடாக இருக்கும்போது, லட்டு போல பிடித்து வைத்து கொள்ள வேண்டும். தினமும், இதில் ஒன்று சாப்பிட்டு வந்தாலே தலைமுடி அபாரமாக வளர்ச்சி பெறுமாம். வளரும் பிள்ளைகளுக்கு சத்தான நெல்லிக்காய் லட்டு இதுவாகும். இதனால், ரத்தசோகையும் நீங்கி, நோய் எதிர்ப்பு சக்தியும் பிள்ளைகளுக்கு அதிகரிக்கும்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications