வெறும் மருதாணி இலை.. காலில் பித்த வெடிப்பை போக்க இந்த எண்ணெய்யே போதும்.. பாத வெடிப்புகளுக்கு மஞ்சள்
சென்னை: பாதங்களை வைத்தே ஒருவரின் ஆரோக்கியம் கணக்கிடப்பட்டுவிடும். எனினும், பித்தவெடிப்பு, பாத வெடிப்புகள் போன்றவைகளை எவ்வாறு நீக்குவது? நகச்சுத்தம் எந்த வகையில் நமக்கு அவசியமாகிறது?
நகச்சுத்தம் இருந்தாலே, மற்ற சுத்தங்கள் தானாகவே வந்துவிடும் என்பார்கள்.. வாரம் ஒருமுறையாவது நகங்களை சுத்தமாக வெட்டிவிட வேண்டும்..

பாத வெடிப்புகள்: நக இடுக்கிலுள்ள அழுக்குகளையும், உடனுக்குடன் நீக்கிவிடவேண்டும். சுத்தமான செருப்புகளை அணிவதுடன், கால்களில் சிறு காயங்கள் ஏற்பட்டாலும், அது நகசொத்தையாக மாறிவிடும். அதனால், உடனுக்குடன் காயங்களை குணப்படுத்திவிட வேண்டும். பாதவெடிப்புகளை எளிய முறையிலேயே குணப்படுத்திவிடலாம்.. நம்மிடம் கைவசம் உள்ள ஒருசில மருத்துவ குறிப்புகள்தான் இவையெல்லாம்:
- அகலமான பாத்திரத்தில், பொறுக்கும் அளவுக்கு வெந்நீரை ஊற்றி, அத்துடன் எலுமிச்சம் சாறு கலக்க வேண்டும். பிறகு, இந்த தண்ணீரில் 15, அல்லது 20 நிமிடங்கள் பாதங்களை ஊறவைத்துவிட்டு, அதற்கு பிறகு, அழுக்குகளை சுத்தம் செய்யலாம். இதனால், வெடிப்புகளும் நீங்க தொடங்கும். கிருமிகளும் அழியும். அல்லது வெந்நீருடன் கல் உப்பு சேர்த்தும் பயன்படுத்தலாம்.
எண்ணெய்கள்: - தேங்காய் எண்ணெய் எந்த காலத்திற்கும், எந்த காயத்திற்கும் சிறந்ததாகும்.. தேங்காய் எண்ணெய்யை தினமும் காலில் தடவி உலர வைப்பதன் மூலம், காலில் ஈரப்பதத்தை அதிகரிக்கச் செய்ய முடியும்.. இதனால் காலில் தேங்கி கிடக்கும் பாக்டீரியாக்களும் அழியும்
- அல்லது விளக்கெண்ணெய்யுடன் மஞ்சள் தூளை கலந்து தேய்க்கலாம்.. அல்லது நல்லெண்ணெய்யுடன் மஞ்சள் தூளை குழைத்து தேய்த்து வரலாம்.. அல்லது விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் இந்த 3 எண்ணைய்யுடனும், மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல தடவி வந்தால் போதும்.
- வேப்பிலை, மஞ்சள், சுண்ணாம்பு இந்த மூன்றையும் விளக்கெண்ணெய் சேர்த்து தடவி வந்தாலும் பித்த வெடிப்பு நீங்கும். அல்லது வேப்ப எண்ணெயில், மஞ்சள் பொடியையும் சேர்த்து கலந்து பேஸ்ட் போல் குழைத்து பித்த வெடிப்புகளில் தடவினால், வெடிப்பு முழுவதும் அகலும்
மருதாணி இலைகள்: - மருதாணி போடுவதன் மூலம், இந்த வெடிப்புகள் நீங்கும்.. மருதாணி இலைகளுடன் கிழங்கு மஞ்சளையும் சேர்த்து அரைத்து தூங்க செல்வதற்கு முன்பு, வெடிப்புகளில் தடவி வந்தாலே போதும். நிவாரணம் கிடைக்கும். இப்படி வாரம் 2 முறையாவது செய்து வரலாம். வெறும் மருதாணி இலைகளை அரைத்து பூசினாலும் பித்த வெடிப்பு நீங்கும்..
2 டீஸ்பூன் அரிசி மாவு, தேன், ஆப்பிள் சீடர் வினிகர் இந்த மூன்றையும் பேஸ்ட் போல குழைத்து தடவி வந்தாலும் தீர்வு கிடைக்கும். பாதங்களுக்கு தேன் மிகவும் நல்லது.. சிறந்த ஆண்டிபயாடிக் என்பதால், கிருமிகள், தொற்றுகள் நீங்கும். அத்துடன் பாதங்களும் ஈரப்பதத்துடன் இருக்கும்- அதேபோல, கிளிசரின் 1 ஸ்பூன், ரோஸ் வாட்டர் 1 ஸ்பூன், எலுமிச்சம் சாறு 1 ஸ்பூன் என மூன்றையும் கலந்து பாதங்களில் தேய்த்து வரலாம்.
ஈரப்பதம்: - தேன் அல்லது ஆலிவ் எண்ணெயை இவைகளுடன் கற்றாழையையும் சேர்த்து தடவி வரலாம்... கற்றாழை ஜெல்கள் எப்போதுமே ஈரப்பதத்தை சருமத்துக்கு தரக்கூடியவை. பப்பாளி பழ துண்டுகள், அல்லது வாழைப்பழத்துண்டுகள் இவைகளை வைத்தும், பாதத்தை தேய்த்து வந்தால், பித்த வெடிப்பு குணமாகும். இவைகளுடன் பித்த சூட்டை குறைக்கும் வகையில், இனிப்பு, கசப்பு, துவர்ப்பு நிறைந்த உணவுகளையும் எடுத்து கொள்ள வேண்டும்.












Click it and Unblock the Notifications