கற்பூரவள்ளி கலக்குதே.. தினமும் 1 கற்பூர வாழை போதும்.. எண்ணற்ற பலன்களை தரும் தேன் வாழைப்பழம்
சென்னை: வாழைப்பழங்கள் தினமும் ஒன்றையாவது சாப்பிட சொல்லி உணவு நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.. அந்தவகையில், தினம் 1 கற்பூரவள்ளியை சாப்பிட்டால், அதனால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன தெரியுமா?
தண்ணீர் குறைவாகக் குடிப்பதாலும், நார்ச்சத்து குறைவுள்ள உணவுகளை அதிகமாக சாப்பிடுவதாலும் ஏற்படக்கூடிய முதன்மையான பிரச்சனை மலச்சிக்கல் ஆகும். அசைவ உணவுகளில் நார்ச்சத்துகள் இல்லாததால், அசைவ உணவுகளை சாப்பிட்டாலும், பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும். அதில், வாழைப்பழங்கள் தவிர்க்க முடியாதவை.

கற்பூரவள்ளி வாழைப்பழத்தை பொறுத்தவரை, தேன் போல தித்திப்பாக இருக்கும். அதனாலேயே இதை தேன் வாழை என்பார்கள்.. வைட்டமின் A, B6, C என நிறைவான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன.. இதிலுள்ள மக்னீசியமும், பொட்டாசியமும் நமக்கு தேவையான சத்துக்களாகும்.
உடல் எடை: அதேபோல, இந்த பழத்திலுள்ள பொட்டாசியம், சோடியம் , நார்ச்சத்து, வைட்டமின் B6 நம்முடைய வயிற்றை எப்போதும் நிறைவாக வைத்திருக்கிறது. இதனால் நீண்ட நேரத்திற்கு பசிக்காமல் இருப்பதுடன், உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும்..
நார்ச்சத்து நிறைந்த கற்பூர வாழைகள், நமக்கு தேவையான ஆற்றலையும் தந்துவிடுகின்றன. இதனால், தசை மற்றும் எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படுகிறது. இந்த கற்பூர வாழையின் தோல், கருத்துவிட்டாலும்கூட, அதன் விதையில் ருசியும், சத்துக்களும் நிறைந்தே காணப்படும்.
எலும்புகள்: செரட்டோனின், நார் எபினெஃப்ரின் சத்துக்கள் அடங்கியிருப்பதால், ஜீரணம் எளிதாகி, பசியை தூண்டுகிறது.. மாங்கனீசு, மெக்னீசியம் நிறைய உள்ளால், எலும்புகளுக்கும், பற்களுக்கும் உறுதியை தருகிறது. கற்பூர வாழைப்பழங்கள், ரத்த அணுக்கள் உற்பத்தியில் மிகப்பெரிய பங்கினை வகிக்கிறது. எனவே, அனீமியாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இந்த பழத்தை தவறாமல் சாப்பிடலாம்.
கம்ப்யூட்டரில் நீண்ட நேரம் கண்விழித்து வேலை பார்ப்பவர்களுக்கு இந்த பழம் அருமையான மருந்தாகும்.. உஷ்ணத்தினால், கண்களில் நீர் வடிவது, சிறுசிறு கட்டி உருவாகுவது, போன்ற தொந்தரவுகள் இருந்தாலும், கற்பூரவள்ளி சாப்பிட்டாலே போதும், கண்களுக்கு குளிர்ச்சி கிடைக்கும்.
சருமத்துக்கு பாதுகாப்பை தரக்கூடியது இந்த பழம். எனவே, சொறி, சிரங்குகள், புண்கள், அரிப்பு, தடிமன் போன்ற தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்தால், கற்பூரவள்ளி அதற்கு கை கொடுத்து உதவுகிறது.. புண்கள், ரணங்கள் இருந்தாலும், சீக்கிரம் ஆறிவிடும்.
அதுமட்டுமல்ல, கவனச்சிதறல், தூக்கமின்மை பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள், கற்பூரவள்ளி பழத்தை சாப்பிட்டு நிவாரணம் தேடலாம்.. மூளையின் ஆற்றலையும் இது அதிகரிக்க உதவுகிறது.. காலை உணவுடன் ஒரே ஒரு கற்பூரவள்ளி பழத்தையும் சேர்த்து சாப்பிட்டால் நாள் முழுவதும் ஆற்றலும் உற்சாகமும் கிடைக்கும். உடல் சோர்வும் நாளெல்லாம் அண்டாமல் இருக்கும்.
இரட்டிப்பு பலன்: இந்த கற்பூரவள்ளி வாழைப்பழத்தின் தோலைகூட வீணாக்க வேண்டாம்.. அதை குட்டி, குட்டியாக வெட்டி மூன்று நாட்கள் தண்ணீரில் ஊறவைத்து செடிகளுக்கு உரமாகவும் பயன்படுத்தினால், பலன் இரட்டிப்பாகும்.
காலை உணவு: எத்தனையோ பேர், நேரமின்மை, உணவுக்கட்டுப்பாடு, இப்படி எத்தனையோ காரணங்களுக்காக காலை நேரத்தில் சாப்பிடுவதை தவிர்க்க நேரிடுகிறது.. காலை நேர உணவை தவிர்ப்பவர்களுக்கு இந்த கற்பூரவள்ளியே போதும் என்கிறார்கள். காலையில் இந்த பழத்தை சாப்பிடும்போது, அன்றைய தினமும் முழுவதும் சுறுசுறுப்பும், புத்துணர்ச்சியுடன் இருப்பதுடன், அன்றைய நாளுக்கு தேவையான ஆற்றலும் கிடைத்துவிடுகிறது.. அந்தவகையில், இயற்கை பொக்கிஷம்தான் கற்பூரவள்ளி வாழை.












Click it and Unblock the Notifications