தொப்பையை குறைக்கணுமா? 2 ஸ்பூன் இந்த விதை சாப்பிட்டாலே போதும்.. எப்படினு பாருங்க.. அல்ட்டிமேட் டிப்ஸ்
சென்னை: உடல் எடையை குறைக்க எத்தனையோ விதமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.. அதில் பெரும்பாலானோர் கையில் எடுக்கும் டிப்ஸ் சியா விதைகள்தான்.
எடை இழப்புக்கு சியா விதைகளைபோல நன்மை தரக்கூடியது வேறில்லை.. காரணம், சியா விதைகளில் கலோரிகள் மிகவும் குறைவு.. 100 கிராம் சியா விதைகளில் 486 கிராம் கலோரிகளும், 16.5 கிராம் புரதம், 42 கிராம் கார்போஹைட்ரேட், 3 கிராம் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், 30 கிராம் ஆரோக்கியமான கொழுப்பு போன்றவை நிறைந்துள்ளன.

உடல் எடை: நிறைய நார்ச்சத்து நிறைந்திருப்பதால்தான், காலை உணவிலேயே இந்த சியா விதைகளை பயன்படுத்துகிறார்கள். நார்ச்சத்து அதிகம் என்பதால், செரிமானம் எளிதாகிறது.. அஜீரணம் நீங்குகிறது.. உடலிலுள்ள கழிவுகளும், நச்சுக்களும் நீங்குகின்றன.. குடல் பாதுகாப்பும் காக்கப்படுகிறது.. ரத்தத்தில் குளுக்கோஸ் வெளியீட்டையும் தாமதப்படுத்துகிறது..
உடலின் வளர்சிதை மாற்றத்திற்கும் உதவுகிறது. வயிறு நிரம்பிய உணர்வை இந்த விதைகள் தருவதால், உடல் எடையை குறைக்க பேருதவி புரிகிறது..
எப்படி பயன்படுத்தலாம்: சாலட்கள் உட்பட எந்த உணவு பொருளிலும் கலந்து சியா விதைகளை பயன்படுத்தலாம்.. ஆனால், உடல்எடையை குறைக்க முயற்சிப்பவர்கள், 1 டம்ளர் தண்ணீரில் 1 ஸ்பூன் சியா விதைகளை போட்டு, இரவு முழுவதும் ஊறவைத்துவிட வேண்டும்.. காலையில் வெறும் வயிற்றில் இதை குடித்து வந்தாலே, உடல் எடையில் மாற்றம் தெரிய ஆரம்பிக்கும்.
தேவைப்பட்டால், இதில் எலுமிச்சம் சாறு சிறிது சேர்த்து கொள்ளலாம். இந்த விதையில், மக்னீசியம், டிரிப்டோபான் அமிலம் உள்ளதால், தூக்கமின்மை பிரச்சனையை போக்குகிறது.
உடல் எடை: சியா விதைகளை போலவே, உடல் எடையை குறைக்க பயன்படுவது சப்ஜா விதைகள்.. சப்ஜா விதையிலும் நார்ச்சத்துக்கள் உள்ளன.. சிலர் இவை இரண்டையுமே ஒரே விதை என்று நினைப்பார்கள்.. பார்ப்பதற்கு ஒரே மாதிரி தெரிந்தாலும், இரண்டுமே வேறு வேறு விதைகள்.. சியா விதைகள் சாம்பல், பழுப்பு, வெள்ளை, கருப்பு கலரில், பெரிய முட்டை வடிவத்தில் இருக்கும்.. சப்ஜா விதைகளோ முழுக்க முழுக்க கருப்பு நிறத்தில், சிறிய வட்டமாக இருக்கும்.
இரண்டு விதைகளுமே கிட்டத்தட்ட ஒரேவிதமான நன்மையை தரக்கூடியவை என்றாலும், சியா விதைகள் எடையை குறைப்பதில் சற்று அதிகமான பயனை கொண்டிருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.
ஆரோக்கியம்: எவ்வளவுதான உடல் எடை குறைப்பதில், இதுபோன்ற விதைகள் உதவுகிறது என்றாலும், முழுக்க முழுக்க பலன்தராது.. முறையான உடற்பயிற்சி, நிறைய தண்ணீர், போதுமான தூக்கம், சத்தான உணவு, மகிழ்ச்சியான மனநிலை போன்றவையே உடல் எடையை தீர்மானிக்கின்றன என்பதை மறந்துவிடக்கூடாது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications