கொத்து கொத்தா காய்க்குது அத்திக்காய்.. சரசரன்னு வெயிட் குறையுது.. மூலநோயை விரட்ட அற்புத அத்திப்பழம்
சென்னை: பீட்ரூட் இலைகள் எந்த அளவுக்கு உதவுகிறதோ, அதுபோலவே ஏகப்பட்ட நன்மைகளை கொண்டிருக்கிறது அத்திப்பழ இலைகள். ஆனால், அத்திப்பழத்தை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாமா?
அத்திப்பழத்தில், ஏகப்பட்ட இரும்புசத்து, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், தயாமின், நார்சத்து, வைட்டமின் C,A,K,E, போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. மற்ற பழங்களைவிடவும், 2 முதல் 4 மடங்கு அதிகமான சத்துக்கள் இந்த பழத்தில் உள்ளது ஆச்சரியமான விஷயம்.. குறிப்பாக, இரும்புச்சத்து நிறையவே உள்ளன.

எலும்புகள்: காசியம் நிறைந்த இந்த பழத்தை சாப்பிட்டால், எலும்புகளும், பற்களும் வலுப்படுகின்றன.. எலும்புகளின் அடர்த்தி தன்மை அதிகமாக்கி, மூட்டு வலி, முதுகு வலி, என எலும்பு சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு உண்டாகும்.. மூட்டு வலி, முதுகு வலி போன்றவற்றுக்கு அத்திப்பழம் நிவாரணமாகிறது.
இந்த பழம்தை நீரில் ஊறவைத்து சாப்பிட்டாலோ அல்லது காய்ந்த அத்திப்பழத்தை நேரடியாக சாப்பிட்டாலோ தவறில்லை.. அதே அளவுக்கு பலன்கள் கிடைத்துவிடும்..
எனவே, தினமும் ஊறவைத்த 3 அத்திப்பழங்களை சாப்பிட்டாலே பல நோய்கள் ஓடிவிடும். ரத்த சோகை குணமாக வேண்டுமானால், தினமும் 3-5 அத்திப்பழங்களை தண்ணீரில் ஊறவைத்து, காலையில் இந்த தண்ணீருடன் சேர்த்து பழத்தையும் சாப்பிட்டு வரலாம். இதனால், புதிய ரத்தத்தை உற்பத்திசெய்து, ரத்த சோகையை முற்றிலும் குணமாகிவிடும்.
மலச்சிக்கல்: மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு இந்த பழம் ஒரு வரப்பிரசாதமாக உள்ளது.. குடலை சுத்தப்படுத்தி, ஆசனவாய் வெடிப்பு, மூலவியாதி வராமல் தடுத்து நிறுத்துவதில், இந்த பழத்திற்கு பெரும்பங்கு இருக்கிறது.. அதனால்தான், மூலநோய் உள்ளவர்கள், இந்த அத்தி பழத்தை சாறு பிழிந்து, தேன் கலந்து சாப்பிட்டால் மூல நோய் குணமாகும்.
அதுமட்டுமல்ல, ஆசனவாய் வெடிப்பு, மற்றும் மூலவியாதி வராமல் தடுத்து, எந்த சிரமமும் இல்லாமல் எளிதில் மலத்தை வெளியேற்றிவிடும். தினமும் உணவிற்குப் பிறகு 5 பழங்களை இரவில் சாப்பிட்டு வந்தால், பெரும்பலன் கிடைக்கும்..
உடல் எடை: உடல் எடை குறைக்க நினைப்பவர்கள், இந்த பழத்தை ஊறவைத்து சாப்பிட்டுவந்தால், பலன் கிடைக்கும்.. பசி உணர்வும் தெரியாது. ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களும் சரி, நீரிழிவு நோய் இருப்பவர்களும் சரி, இந்த அத்திப்பழத்தை அடிக்கடி சாப்பிடலாம்.
ஆனால், இந்த பழத்தில் தித்திப்பு தன்மை இருப்பதால், சர்க்கரை நோயாளிகள், காய்ந்த பழத்தை நேரடியாக சாப்பிடுவதை தவிர்த்துவிட்டு, பச்சையான அத்திக்காயை சமையலில் சேர்த்து கொள்ளலாம். இந்த காய்களை பொரியல், கூட்டு போல செய்து சாப்பிடலாம். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க, இதிலுள்ள நார்ச்சத்து உதவி புரிகின்றன.
ஈறுகள்: ஈறுகள் பலவீனமடைந்து சீழ்பிடித்துவிட்டால், அல்லது ஈறுகளில் வலி இருந்தால், இந்த பழத்தின் இலைகளே மருந்தாகின்றன.. அத்திமர இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளித்துவந்தாலே, ஈறுகள் பலப்படும்.. பல் வலியும் குறையும். வாய் சுத்தமும் பாதுகாக்கப்டும். அத்திர மர இலைகளை வெயிலில் உலர வைத்து, பவுடர் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டால் பித்தம் நீங்கிவிடும்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications