மொச்சை கொட்டை.. பெண்களின் வரப்பிரசாதம்.. மொச்சை பயிறு சாப்பிட்டாலே போதும்.. ஆயுசை கூட்டும் அற்புதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உடல் எடை மெலியவும், உடல் எடையை சீராக வைத்திருக்கவும் உதவும் மிக முக்கியமான பயிறு, மொச்சை கொட்டை.. அதனால்தான், நம்முடைய முன்னோர்கள் வீடுகளில் தவறாமல் இந்த பயிரை பயன்படுத்தி வந்தனர்.

10,000 வருடங்களுக்கு மேலாக, பல நோய்களை குணப்படுத்தும் மருந்தாகவும் இந்த மொச்சை திகழ்ந்து வருகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

Do you know the health Benefits of Mochai Kottai and Mochai Payaru is the Best for women

சத்துக்கள்: தியமின், வைட்டமின் C, A, K, B6, தாமிரம், செலினியம், இரும்புச்சத்து, நியசின், ரிபோஃப்ளவின், கோலின், சோடியம், செலினியம், துத்தநாகம், பொட்டாசியம், மக்னீசியம் இப்படி ஏகப்பட்ட சத்துக்கள் அடங்கியிருக்கின்றன.

நார்ச்சத்து நிறைந்த இந்த பயிறு, உடல் எடையை குறைப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.. இந்த நார்ச்­சத்­துக்­கள் ரத்த சர்க்­கரை அளவை கட்­டுப்­பாட்­டில் வைக்க தூண்டுகின்றன. நிறைவுற்ற கொழுப்புகள் என எதுவுமே இதில் கிடையாது.. ஏகப்பட்ட புரோட்டீன்கள் இதில் உள்ளதால், எடையை குறைப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது..

வரப்பிரசாதம்: மொச்சை பயிறு - பெண்களின் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். பெண்களுக்கு தேவையான அத்தனை மருத்துவ குணங்களும் இந்த பயிறில் உள்ளது.. கர்ப்ப காலங்களில் இந்த பயிறுகளை சமைத்து தருவார்கள்.

காரணம், கருச்சிதைவு, முன்கூட்டியே பிறப்பு, குறைந்த எடையுடன் குழந்தை பிறத்தல், கருவில் வளரும் குழந்தைகளுக்கு ஏற்படும் முதுகெலும்பு முழுமையற்ற வளர்ச்சி, மூளையின் பகுதிகளில் ஏற்படும் முழுமையற்ற வளர்ச்சி போன்ற முக்கிய பிறப்பு குறைப்பாடுகளை இந்த மொச்சை பயிறு தடுக்கிறது.

கர்ப்பிணிகள்: அதேசமயம், அதிகமாக மொச்சை சாப்பிட்டாலும், குழந்தைக்கு ரத்த சோகை ஏற்படும் என்று ஆய்வுகள் சொல்கின்றன. அதனால், கர்ப்பிணிகள், மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று, இந்த மொச்சை பயிறை சாப்பிடலாம்.

பொதுவாக, பெண்களுக்கு ரத்த சோகை பிரச்சனை அதிகமாகவே ஏற்படும்.. உதிரப்போக்கு அதிகமாக இருந்தாலும், இந்த பிரச்சனை ஏற்படும்.. ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்கள், இந்த மொச்சை பயிறை சாப்பிட்டால், இரும்புச்சத்து குறைபாடு நீங்கும்.. ரத்த சிவப்­ப­ணுக்­கள் அதிகமாக உற்­பத்தி செய்ய உதவுகிறது.. இதனால், உடல் சோர்வும் நீங்குகிறது..

உடல் சூட்டை தணித்து, குளிர்ச்சியை தரக்கூடிய இந்த பயிறுகள் செரிமானத்தை தூண்டக்கூடியது.. இதனால் அஜீரணம் நீங்கி, மலச்சிக்கலும் தீரும்.. காய்ச்சலை கட்டுப்படுத்தக்கூடியது. கொலஸ்ட்­ரால் அளவை இந்த பயிறு குறைப்பதால், இதய நோய்கள் வராமல் காக்கப்படுகிறது.

புற்றுநோய் எதிர்ப்பு: இந்த பயிறில் உள்ள அமினோ அமிலம் நல்ல மனநிலையை அதிகரிக்க செய்து, மன அழுத்தத்தை தடுக்கிறது.. பெருங்குடல் பகுதியில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனங்களையும், மார்பக புற்றுநோயை தடுப்பதாகவும் சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது.. ஆண்களின் தாடி வளர்ச்சிக்கு இந்த பயிறு உதவி புரிகின்றது.

சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள், சிறுநீகரத்தில் கல் இருப்பவர்கள், வாதம் மற்றும், தோல் தொடர்பான நோய் உள்ளவர்கள் இதை தவிர்க்கலாம்.. மற்றபடி கர்ப்பிணிகள், இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், குழந்தைகள் என அனைவருமே இதை சாப்பிடலாம்.

யார் யார் தவிர்க்கலாம்: இதன் க்ளைகமிக் குறியீடு குறைவாக இருப்பதன் காரணத்தால், ரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது.மொச்சை பயறை அடிக்கடி சாப்பிட்டு வருவதால், சர்க்கரை நோய் வருவதையும் தவிர்க்கலாம். மொச்சையை சாப்பிட்டால் வாயுத்தொல்லை ஏற்படும் என்பதால், இதை பலரும் சாப்பிடுவதில்லை. ஆனால், மொச்சையை வேகவைக்கும்போதே, சிறிது இஞ்சி, பூண்டு சேர்த்து சமைத்தால் இந்த பிரச்சனை ஏற்படாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+