வெறும் வயிற்றில் "இது" சாப்பிடாதீங்க.. 5 விதை, ஒரு பூ போதும்.. இவ்ளோ நாளா தெரியாம போச்சே.. அற்புதம்
சென்னை: வெறும் வயிற்றில் காலையில், நாம் என்ன சாப்பிடுகிறோமோ, அதுதான் அன்றைய நாள் முழுவதும், புத்துணர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் நம்முடைய உடலுக்கு தருகிறது. அந்தவகையில், வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்? என்ன சாப்பிடகூடாது?
நைட் முழுவதும் தூங்கி எழுவதால், கிட்டத்தட்ட 8 மணி நேரமாவது வயிறு காலியாக இருக்கிறது.. அப்போது வயிறு எரிச்சலை உண்டுபண்ணிவிடும் உணவுகளை சாப்பிடக்கூடாது.. அஜீரணம், நெஞ்செரிச்சல் தரும் உணவுகளையும் சாப்பிடக்கூடாது..

காபின்: முக்கியமாக, இனிப்பு சாப்பிடக்கூடாது. காரணம், இந்த காபியில் உள்ள "காபின்" ஹைட்ரோக்ளோரிக் அமிலத்தை சுரக்க செய்துவிடும்.. இதனால், அஜீரணம், குமட்டல் போன்ற தொந்தரவுகள் வரலாம்.. பித்தம் அதிகரித்துவிடும்..
அதேபோல, சிட்ரஸ் வகை பழங்கள், குறிப்பாக, எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லிக்காய், திராட்சை போன்ற பழங்களை தவிர்க்க வேண்டும்.. இதுவும் நெஞ்செரிச்சலையும், வயிறு எரிச்சலையும் உண்டுபண்ணிவிடும்.. அதிக மசாலாக்களை தவிர்க்க வேண்டும்.. எண்ணெய், இஞ்சி, பூண்டு, மிளகாய், போன்றவை நிறைந்த உணவை தவிர்க்க வேண்டும்.
புளிப்பு உணவுகள்: மிகவும் புளிப்பு உணவுகளான எலுமிச்சை, புளி, தக்காளி போன்றவைகளையும் தவிர்க்க வேண்டும்.. கூல்டிரிங்க்ஸ் குடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.. வாழைப்பழம், எண்ணெயில் பொரித்த உணவுகள், சிக்கன், மட்டன், மீன் போன்ற இறைச்சியை தவிர்க்க வேண்டும். வெறும் வயிற்றில் இளநீர் குடிக்கவே கூடாது...
அப்படியானால், வெறும் வயிற்றில் என்னதான் சாப்பிடலாம்? குளிர்ந்த நீரை குடிக்கலாம்.. தண்ணீரை போன்ற அருமருந்து வேறு இருக்க முடியாது.. பிறகு, எளிதில் சக்தி தரக்கூடியதும், எளிதில் ஜீரணமாகக்கூடியதுமான பானங்கள் அல்லது உணவுகளை எடுத்து கொள்ளலாம். வெறும் வயிற்றில் நீராகராம் குடிக்கலாம்.. நீச்சத்தண்ணி என்பார்கள்.. மீந்துபோன இந்த பழைய சோறுதான், சீனாவிலும் பாரம்பரிய சாப்பாடு.
வெந்தய தண்ணீர்: அதேபோல, வெந்தயத்தை முந்திய நாள் இரவே தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், செரிமானத்திற்கு நல்லது மற்றும் உடலில் சேரும் நச்சுக்களை இது வெளியேற்றும். ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இந்த வெந்தயத்தில் டீ போட்டுக்குடிக்கலாம்..

அதுபோலவே, சீரகத்தண்ணீர் அல்லது சீரகத்தில் டீ போட்டுக் குடிக்கலாம்.. சீரகத் தண்ணீர் அஜீரணக்கோளாறுகளை நீக்கி, உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது.. வேப்பம் பூக்களை ஒரு கைப்பிடி எடுத்து, நீரில் ஊற வைத்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டாலும் நல்ல பலன் தரும்.
குழந்தைகள்: கேழ்வரகு, சோயா, பாதாம் போன்ற ஏதாவது ஒரு தானியத்தை முளைக்கட்டி அரைத்து, பால் எடுத்து கஞ்சி காய்ச்சி, வெல்லம், ஏலப்பொடி, நாட்டுச்சர்க்கரை அல்லது பனைவெல்லம் கலந்து குழந்தைகளுக்கு தரலாம்.
உளுந்தங்கஞ்சியை காய்ச்சி குடிப்பதால், இளம்பெண்களுக்கு வலு கிடைக்கும்.. தேங்காய்ப் பாலை வெறும் வயிற்றில் குடித்தால், அல்சர் போன்ற வயிற்றுப்புண், வாய்ப்புண் நீங்கும்... டயட்டில் இருப்பவர்கள் காய்கறிகளை வேக வைத்து சாப்பிடுவதைவிட, சூப் மட்டுமே வைத்து மிளகு சேர்த்து குடிக்கலாம்.. கேரட், முள்ளங்கி, வெள்ளரியாக இருந்தால் பச்சையாகவே சாப்பிடலாம்.. முளைக்கட்டிய பயறு வகைகள் ஏதாவது ஒன்றை காலையிலேயே எடுத்துக்கொள்ளலாம்..
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications