ஊமத்தங்காய்.. விஷத்தையே முறிக்கும் விஷம்.. உயிரை காக்கும் ஊமத்தை.. மலைப்பை தரும் ஊமத்தம் செடி.. வாவ்
சென்னை: விஷத்தையே முறிக்கக்கூடிய இன்னொரு விஷம்தான் ஊமத்தைச்செடி.. இந்த செடி தரும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா?
ஊமத்தங்காயை, ஊமத்தை, உன்மத்தம் என்றெல்லாம் சொல்வார்கள். டிட்டோ வெற்றிலை மாதிரியே காணப்படும் இந்த ஊமத்தம் இலைகள்.. இந்த செடியின் வேர், இலை, பூக்கள், விதை என அத்தனையுமே மருத்துவ பலன்கள் நிறைந்தவை. இதன் காய்கள் முட்களுடன் காணப்படும்..

சித்த பிரமை: உன்மத்தம் என்றால் ஆவேசமான மனநிலை, பைத்தியம் என்பது போல அர்த்தமாம்.. அதாவது, சித்த பிரமை கோளாறுகளையும் தீர்க்கக்கூடிய இந்த ஊமத்தங்காய்..
இந்த இலைகளை அடுப்பில் இட்டு, விளக்கெண்ணை தடவி வதக்க வேண்டும்.. பிறகு, இலைகளை உடம்பில் எங்கு வலி உள்ளதோ, அங்கு வைத்து கட்டினால், வலிகள், வீக்கங்கள் குறையும்.. கைகால் மூட்டு வலிகள், மூட்டு வீக்கம், போன்றவற்றுக்கும், இந்த ஊமத்தை இலைகளை இப்படி ஒத்தடம் தருவதற்கு பயன்படுத்தலாம்.
இலைகள்: இந்த இலையின் பொடிகள் கடைகளில் விற்கப்படுகிறது.. இந்த நல்லெண்ணையில் சேர்த்து காய்ச்சி, தலைக்கு தேய்த்து மசாஜ் செய்து குளித்து வரலாம்.. இதனால், தலையிலுள்ள அரிப்பு, புண்கள், பொடுகு, பேன் தொல்லை நீங்கும்..
பெண்களுக்கு பிரசவ நேரத்தில் தரப்படும் மயக்க மருந்துகளில், மூலப்பொருளாக இந்த ஊமத்தங்காய் பயன்படுகிறது.. தாய்ப்பால் கட்டிக்கொண்டு வலி ஏற்பட்டாலும், இந்த இலைகள் தீர்வாகின்றன.. உடலில் அடிபட்டு நெறிகட்டி, உயிர்போகும் அளவுக்கு வலியை தந்துவிடும். அதற்கும் இந்த இலைகள் உதவுகின்றன..
கட்டிகள்: வேனல் கட்டிகளை கரைக்கவும், இந்த ஊமத்தை இலைகள் உதவுகின்றன. இந்த இலைகளுடன், சிறிது வெண்ணெய் சேர்த்து அரைத்து, கட்டிகளின் மீது தடவிவந்தாலே, விரைவில் மறைந்துவிடும்.
அல்லது இந்த இலையை விழுதாக அரைத்து, அதே அளவுக்கு அரிசி மாவு சேர்த்து வீக்கங்கள், கட்டிகள் மீது பற்று போல போடலாம். தேள், பூரான், வண்டு கடித்துவிட்டால், ஊமத்தை இலைகளுடன், சிறிது மஞ்சள் தூள் அரைத்து பற்று போல போடவேண்டும். இதனால், பூச்சிக்கடியால் ஏற்பட்ட வீக்கம் கரைந்துவிடும்.
ஊமத்தங்காய்: ரணங்களை ஆற்றுவதற்கு இந்த ஊமத்தங்காய் உதவுகிறது.. இந்த காயை நெருப்பில் வாட்டி விழுதாக அரைத்து, புண்கள் மற்றும் காயங்களில் தடவி வந்தால், எளிதில் ஆறிவிடும்.. தூக்கத்தை தூண்டக்கூடிய இந்த ஊமத்தங்காய்.. நரம்புகளை பலப்படுத்தக்கூடியது.. வாத நோய்களைக் கட்டுப்படுத்தக்கூடியது..
ஊமத்தை விதைகள் மூலநோயை குணமாக்க உதவுகின்றன.. இந்த விதைகளை தூள் செய்து, நெய்யில் கலந்து, மூலத்தின் நுனியில் தடவிவந்தால், மூல வியாதிகள் குணமாகும். அலர்ஜியால் உடலில் தடிப்பு, சொறி சிரங்கு போன்ற சரும வியாதிகள் ஏற்பட்டால், ஊமத்தை விதையுடன் சாமந்தி பூக்களையும் சேர்த்து அரைத்து பூசிவரலாம்.
சித்த பிரமை: இந்த ஊமத்தை பூக்களை, இரவு நேரத்தில், குளிக்கும் நீரில் போட்டுவைத்துவிட்டு, மறுநாள் காலை, அந்த தண்ணீரில் உள்ள மலர்களால் தலையை தேய்த்து குளிக்க செய்வார்களாம். இப்படி தொடர்ந்து செய்யும்போது, சித்த பிரமை நீங்கி, இயல்பு நிலைக்கு வருவார்களாம்.


Click it and Unblock the Notifications
