இவங்கெல்லாம் இளநீர் குடிக்கக்கூடாது.. வெறும் வயிற்றில் இளநீர் குடித்தால் என்னாகும் தெரியுமா? சூப்பர்
சென்னை: இளநீரில் உள்ள நன்மைகள் என்னென்ன தெரியுமா? வெறும் வயிற்றில் தேங்காய் தண்ணீர் குடிக்கலாமா? சர்க்கரை நோயாளிகள் இளநீர் குடிக்கலாமா?
இளநீரில், வைட்டமின்கள், மினரல்கள், எலக்டோலைட்டுகள் போன்றவை நிறைந்துள்ளன.. தினமும் காலையில் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்தால், நம்முடைய உடலின் எலெக்ரோலைட்டுகள் சீராகின்றன..

காரணம், வெயில், வியர்வையால் நம்முடைய உடலில் உள்ள எனர்ஜி முழுவதுமாக போய்விடும். இதுபோன்ற சமயத்தில், இளநீர் கைகொடுத்து உதவுகின்றன. இயற்கையாகவே நீர் சத்தை அதிகரிக்கும் பானம் இந்த இளநீராகும்.. எந்தவித ரசாயனமும் இல்லை என்பது இதன் சிறப்பம்சமாகும்.. தினமும் ஒரு இளநீரை குடித்து வருவது, உடலில் நீர் சத்துக்களை தக்கவைக்கும்.
அதுவும், காலையில் வெறும் வயிற்றில் இளநீர் குடித்து வருவது, வயிறு பிரச்சினைகளை தீர்க்கிறது. வயிற்றில் அல்சர் இருந்தாலும் தொற்று இருந்தாலும் அதை குணப்படுத்துகிறது. குடலில் உள்ள தொற்றுகளையும் நீக்குகிறது. உடலை புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்கிறது.
மலச்சிக்கல்: உடலில் ஜீரணமாகாமல் தேவையில்லாத உணவு பொருட்கள் இருந்தால் அவற்றையும் வெளியேற்றுகிறது.. மலச்சிக்கலை தீர்க்கிறது.. குடலில் உள்ள நச்சுகளை முறிக்கிறது.. ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்க செய்கிறது.
முக்கியமாக, இளநீரில் பொட்டாசியம் அடங்கியிருப்பதால், சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. உடலில் உள்ள தேவையற்ற தண்ணீரை வெளியேற்றி சிறுநீரக கற்களை உருவாவதை தடுக்கிறது. அவ்வளவு ஏன்? சிறுநீரக கற்கள் இருந்தாலும், அவைகளை உடைத்து வெளியேற்றும் தன்மை, இந்த இளநீருக்கு இருக்கிறதாம். சிறுநீரக பாதையிலுள்ள தொற்றுகள், நச்சுக்கள் நீங்குவதாகவும் சொல்கிறார்கள்.
உடல் எடை: உடல் எடை குறைய வேண்டும் என்று முயற்சிப்பவர்களுக்கு இளநீர் மிகச்சிறந்த சாய்ஸ் ஆகும்.. காரணம், குறைந்த அளவு கலோரி இருப்பதால் உணவுக்கு முன்பே இளநீரை எடுத்து கொண்டால் கூடுதல் பலன் கிடைக்கும். தித்திப்பு பானமாக இருந்தாலும்கூட, உடலில் கொழுப்புக்கள் சேராது.. எனவே, உடல்எடை குறைக்க தேங்காய் தண்ணீர் மிகவும் நல்லது.. பசி உணர்வும் எடுக்காது.. அதாவது, தொடர்ந்து 60 நாட்கள் இளநீர் குடித்து வருபவர்களின் உடல் எடை குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
சர்க்கரை நோயாளிகளும் இளநீர் குடிக்கலாம். காரணம், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை இளநீர் கட்டுப்படுத்துகிறது... பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் C, எல் ஆர்ஜினைன் போன்றவை இருப்பதால் இன்சுலின் சுரப்பையும் அதிகரிக்க செய்கிறது..
ஆய்வுகள்: எவ்வளவு பெரிய இளநீராக இருந்தாலும், அதிகபட்சமாக 250 ML சர்க்கரைதான் அதில் இருக்குமாம்.. அதனால், அதாவது, தேங்காய் தண்ணீரை தொடர்ந்து 7 நாட்கள் குடித்து வந்தால், நோயெதிர்ப்பு மண்டலமும் வலிமை பெறுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
காய்ச்சல், சளி, இருமல் இருந்தாலும் இளநீர் குடிக்கலாம்.. இன்னும் சொல்லப்போனால், வைரஸ்களை அழிக்கும் திறன் இந்த தேங்காய் தண்ணீருக்கு உண்டு.. ரத்தத்தை சுத்தப்படுத்துவதில் இளநீருக்கு நிறைய பங்கு உள்ளது.. அனீமியா பிரச்சனை உள்ளவர்களுக்கும் சிறந்த தீர்வாக இருக்கின்றது.
கர்ப்பிணி பெண்கள்: குறிப்பாக, கர்ப்பிணி பெண்கள் தினமும் இளநீரை குடித்து வந்தால், கரு வளர்ச்சிக்கு உதவும்.. இளநீர் குடித்து வருபவர்களுக்கு மூளை புத்துணர்ச்சியுடன் இருக்கிறதாம்.. நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளும் முன்கூட்டியே தடுக்கப்படுகிறதாம்.. இளநீரிலுள்ள கால்சியம் எலும்புகளின் வளர்ச்சிக்கும் உதவுவதாகவும் உள்ளது.
நார்ச்சத்து, நீர்ச்சத்து நிறைந்த இந்த தேங்காய் தண்ணீர், கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு ஏற்ற பானமாக உள்ளதால், மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று இளநீர் குடிப்பது நல்லது. தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியையும் அதிகரித்து தைராய்டு சுரப்பிகள், சிறப்பாக செயல்பட இந்த இளநீர் உதவுகிறது.. உயர் ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த தேங்காய் தண்ணீர் அருமருந்தாகும்.
தவிர்க்கலாம்: ஆனால், சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் இளநீர் குடிக்கக்கூடாதாம்.. பொட்டாசியம் மற்றும் சோடியம் அதிகம் எடுத்துக் கொள்ளக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளவர்கள், நீர் அதிகம் எடுத்துக்கொள்ளக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளவர்கள், கால் நீர் கோர்த்து வீக்கம் பிரச்சனை உள்ளவர்கள், இதயப்பிரச்னை உள்ளவர்கள், இளநீர் அருந்துவதை தவிர்க்க வேண்டுமாம்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி!












Click it and Unblock the Notifications