வயிறு கொழுப்பு கரையணுமா? ஒரு கைப்பிடி பூண்டு போதுமே.. புற்றுநோயே ஓடிவிடும்.. வெள்ளைப் பூண்டு அதிசயம்
சென்னை: நம்முடைய உடலிலுள்ள கொழுப்பைக் கரைக்கக்கூடிய மிக முக்கியமான பொருள் வெள்ளைப்பூண்டு.. இந்த பூண்டு தரும் மருத்துவ உண்மைகள் என்னென்ன தெரியுமா?
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதிலும், ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் செயல்பாட்டை அதிகரிக்க செய்வதிலும் வெள்ளைப்பூண்டுகளின் பங்கு அதிகமானது. இதற்கு காரணம்,அலிசின் என்ற ஆன்டிஆக்சிடன்ட் என்ற பொருள் பூண்டில் அடங்கியிருப்பதுதான். பூண்டுகளில் சல்பர் உள்ளதால், நோய்களை எதிர்த்து போரிட தூண்டுகோலாகிறது.

ரத்தவிருத்தி: ரத்த சோகை, ரத்த அழுத்தம், போன்ற பிரச்சனைகளை சரிசெய்ய, பூண்டு பேருதவி செய்கிறது.. ஹீமோகுளோபின் பிரச்சனை உள்ளவர்கள், உணவில் நிறைய பூண்டு சேர்த்து கொள்ளலாம்.. இதனால் ரத்த அழுத்தமும் கட்டுக்குள் வரும்.. ரத்த சர்க்கரையும் கட்டுக்குள் வரும்..
அவ்வளவு ஏன்? பசும்பாலில் வெள்ளைப் பூண்டு தட்டிப்போட்டு காய்ச்சி குடித்து வருவதால், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற அபாயகரமான நோய்கள் நம்மை நெருங்காது.. அல்லது வெறுமனே ஒரு டீஸ்பூன் நசுக்கிய பூண்டு சாப்பிட்டு வந்தாலும், இதய நோய் அபாயம் குறைவதாக சொல்கிறார்கள்.. கால்சியம் நிறைந்திருப்பதால், பற்களுக்கும், எலும்புகளுக்கும் பலம் தருகிறது.
அஜீரணம்: செரிமான பிரச்சனை இருந்தால், அதற்கும் பூண்டு கைகொடுக்கிறது. அதனால்தான், அசைவ உணவுகளில் பூண்டு அதிகமாக சேர்க்கப்படுகிறது.. இதனால், ஜீரண சக்தியும் எளிதாகும்.. உடலில் உள்ள கழிவுப்பொருட்கள், நச்சுப்பொருட்கள் வெளியேறிவிடும்.. இது எடைஇழப்புக்கு உறுதுணையாகிறது..
உடல் எடை அதிகமாக இருப்பவர்கள், ஊளைச்சதை உள்ளவர்கள், தினமும் 5 பூண்டு பற்களை, பனங்கற்கண்டுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், தொப்பை கரைய துவங்குமாம். அல்லது உடல் எடையை குறைப்பதற்கென்றே பூண்டு சாறு தயாரிக்கலாம்.. எப்படி தெரியுமா? இஞ்சி ஒரு துண்டு, ஒருகைப்பிடி பூண்டு பற்களை தோலுரித்து கழுவி சுத்தம் செய்து, மிக்சியில் தண்ணீர் விட்டு நைசாக அரைத்து, வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
வெயிட் குறையும்: இப்போது, வாணலில் ஒரு பாத்திரத்தை வைத்து, இஞ்சி, பூண்டு சாறு தலா ஒருகப், ஆப்பிள் சிடார் வினிகர் ஒரு கப், எலுமிச்சை ஜூஸ் ஒரு கப் என்று இந்த 4 ஜூஸ்களையும் சேர்த்து கலக்கி, மிதமான தீயில், பாதியாக வரும்வரை சுண்ட வைக்க வேண்டும்.. இந்த சாறு 2 மாதம்வரை கெட்டுப்போகாது. ஒரு மாதம் சாப்பிட்டு இதை வந்தாலே உடல் எடையில் மாற்றம் தென்பட துவங்குமாம்.
அதேபோல, தாய்ப்பால் விருத்தி அடையவும், பூண்டு அதிகம் உணவில் சேர்க்கலாம். பாலூட்டும் தாய்மார்களுக்கு, சுறா புட்டு செய்யும்போது, இந்த பூண்டையும் சேர்த்து சமைத்து தருவார்கள். இதனால், தாய்ப்பால் அதிகம் சுரக்குமாம். ஆண்களும் பூண்டு நிறைய சாப்பிட்டு வந்தால், பாலியல் ஆரோக்கியம் மேம்படும்...
பூண்டு சாற: உணவில் ஓரளவுதான் பூண்டு சேர்க்க முடியும் என்பதால், பூண்டு ஜூஸ் என்றே தனியாக தயார் செய்து குடிக்கலாம். அதுவும் பச்சையாக பூண்டை ஜூஸ் செய்து குடிப்பதால், ஏகப்பட்ட நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன.
ஒரு டம்ளர் தண்ணீரில், கொஞ்சம் பூண்டு சாறு கலந்து குடிக்கும்போது, படை, மூட்டைப்பூச்சி கடியினால் ஏற்படும் அரிப்புகள் உடனடியாக நின்றுவிடுகிறது.. நோயெதிர்ப்பு மண்டலமும் வலுப்படுகிறது.. ஆனால், வெறுமனே பூண்டு ஜூஸ் குடிக்காமல், இதனுடன் மாதுளம்பழத்தையும் சேர்த்து ஜூஸ் தயாரித்து குடிப்பதால், அதன் பலன்கள் இரட்டிப்பாகிறது..
புற்றுநோய்: குறிப்பாக, ஆஸ்துமா போன்ற மூச்சுப்பிரச்சினையின் தீவிரம் குறைகிறது.. ரத்த குழாய்களை அடைக்கும் கொழுப்புகளும் கரைகிறது.. புற்று நோய்செல்கள் அழிக்கும் சக்தி இந்த பூண்டுகளுக்கு உண்டு.. அத்துடன் புற்றுநோய் செல்களின் பெருக்கமும் கட்டுப்படுத்துகிறது. தொண்டை புண், இருமல் போன்ற மழைக்கால தொந்தரவையும் நீக்குகிறது.












Click it and Unblock the Notifications