சர்ரு சர்ருனு சுகர் குறையணுமா? இந்த 4 பொருள் போதுமே.. சர்க்கரை நோயாளியின் அருமருந்து.. சூப்பர் பயன்
சென்னை: சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க உதவும், இயற்கையான உணவுகள் என்னென்ன தெரியுமா?
கசப்பு நிறைந்த இலைகள், சிலவகை நோய்களுக்கு அருமருந்தாகின்றன.. குறிப்பாக, ரத்தத்தில் இன்சுலின் அளவை கட்டுப்படுத்தவும் இதுபோன்ற கசப்பு இலைகள் உதவுகின்றன..
உதாரணத்துக்கு முருங்கைக்கீரை, வேப்பிலை, கறிவேப்பிலை, அகத்திக்கீரையை சொல்லலாம். இதில், மாவிலையையும் சேர்த்து கொள்ளலாம். வெறும் வயிற்றில் நான்கைந்து இலைகளை மென்று விழுங்குவது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறதாம்..

இலைகள் : இதில் இன்னொரு இலைகளை குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், அமிர்தவல்லி இலையை சொல்லலாம்.. டீ போல தயாரித்து குடிக்கலாம், அல்லது ஜூஸ் தயாரித்தும் குடிக்கலாம் அல்லது கறிவேப்பிலையை போல, இந்த இலையையும் கழுவி, மென்று சாப்பிடலாம். ரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவை கட்டுப்படுத்த இந்த இலையும் உதவுகிறது.
இந்த அமிர்தவல்லி இலையை பவுடராக்கி, ஒரு கிளாஸ் தண்ணீரில், ஒரு ஸ்பூன் கலந்து இரவு தூங்கும் முன்பு ஊறவைத்து விடவேண்டும். மறுநாள் காலை எழுந்ததுமே குடித்து வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும். ஆனால், இதுபோன்று உள்ளுக்குள் மருந்தாக எடுத்து கொள்ளும்போது டாக்டர்களின் ஆலோசனையை பெறுவது கட்டாயமாகும்.
கொட்டைகள்: அதேபோல, நாவல் கொட்டைகளும் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச்சிறந்த மருந்தாகின்றன.. நாவல் கொட்டையை தூள் செய்து, சாப்பிட்டு வருபவர்களை பரிசோதனை செய்ததில் அவர்களது சர்க்கரை அளவும், சிறுநீரில் வெளியேறிய சர்க்கரை அளவும் குறைந்திருந்ததாம். இந்த நாவல் கொட்டை பவுடரை எப்படி தயார் செய்வது தெரியுமா?
நாவல் பழத்தின் கொட்டைகளை, 7 நாட்கள் நிழலில் காயவைத்து, அதை இரண்டாக உடைத்து வெயிலில் காய விட வேண்டும்.. இந்த கொட்டைக்குள் காணப்படும் பச்சை நிறம் முழுமையாக காய வேண்டும்.
வெந்நீர்: அதற்கு பிறகு, இந்த கொட்டைகளை மிக்ஸியில் அரைத்து, சலித்து கொள்ள வேண்டும். இதில், தினமும் 2 வேளை, ஒரு டீஸ்பூன் அளவு வெந்நீரில் கலந்து குடித்து வந்தால், ஒரு மாதத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வந்துவிடுமாம். இத்தனை பயன்தரும் நாவல் கொட்டை பவுடரை, மருத்துவரின் முறையான ஆலோசனையை பெற்று சாப்பிட்டு, பயனடையலாம்.
அதேபோல, சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க, கருஞ்சீரக விதைகளும் உதவுகின்றன.. இதற்கு முக்கிய காரணம், இந்த விதையிலுள்ள தைமோகுயினன் என்ற பொருள்தான்.. எனவே, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்துவிட்டால், எதிர்ப்பு சக்தி நிறைந்த இந்த கருஞ்சீரகத்தை பயன்படுத்தலாம்..
கருஞ்சீரகம் : இந்த கருஞ்சீரகத்தை அரைத்து, ஒரு டம்ளர் தண்ணீரில், கால் டீஸ்பூன் அளவு கலந்து சாப்பிட்டு வந்தாலும், ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும்.. ஆனால், சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பவர்கள், கருஞ்சீரகத்தை தொடர்ந்து எடுத்து கொள்ள கூடாது. இதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்துவிடும். எனவே, மருத்துவர்களின் ஆலோசனையை பெற்றே இதனை பயன்படுத்த வேண்டும்.












Click it and Unblock the Notifications