சப்பாத்தி மாவை பிசைந்து பிரிட்ஜில் வைக்கிறீங்களா.. ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதற்கு சமம்!
சென்னை: சப்பாத்தி மாவை பிசைந்து பிரிட்ஜில் வைத்தால் உடலுக்கு என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் தெரியுமா?
சர்க்கரை நோயாளிகள், உடல் எடையை குறைக்க விரும்புவோர் என அரிசிக்கு பதிலாக கோதுமையை எடுத்துக் கொள்கிறார்கள். அவ்வாறு அவர்கள் எடுத்துக் கொள்வது கோதுமை சப்பாத்திதான்.

அப்படிப்பட்ட சப்பாத்தியை மூன்று வேளையும் சாப்பிட சிலர் விரும்புகிறார்கள். சப்பாத்தி செய்வது பெரிய பிராசஸ். அதாவது மாவை பிசைந்து அதை ஊற வைத்து, பிறகு திரட்டி தோசைக் கல்லில் போட்டு இரு பக்கமும் திருப்பி போட்டு எடுக்க வேண்டும்.
சப்பாத்தியை 3 வேளையும் பிசைந்து வைப்பதற்கு பதில் குறிப்பிட்ட மாவை பிசைந்து பிரிட்ஜில் வைத்து சிலர் எப்போது தேவையோ அப்போது எடுத்து திரட்டி சப்பாத்தியாக போட்டு எடுக்கிறார்கள். இது போல் சப்பாத்தி மாவை பிரிட்ஜில் வைக்கக் கூடாது என்கிறார்கள். சாப்பாத்தி மாவை பிரிட்ஜில் வைத்தால் பாக்டீரியா வளரும்.
இதை நாம் சாப்பிடுவதால் உடலுக்கு உபாதை ஏற்படும் என்கிறார்கள். வயிற்றுக்கு பாதிப்பு ஏற்படும். பிசைந்த மாவை நீண்ட நேரம் பிரிட்ஜில் வைப்பதால் அதில் உள்ள ஊட்டச்சத்துகள், வைட்டமின்கள் கரைந்துவிடும். பிரிட்ஜில் மாவை வைக்கும் போது பிரிட்ஜில் இருந்து தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் மாவுக்குள் நுழைந்துவிடும்.
இதனால் வயிற்று வலி, மலச்சிக்கல், வாயு தொல்லை போன்ற பிரச்சினைகளை உண்டாக்கும். பிரிட்ஜில் வைத்த மாவில் சப்பாத்தி செய்வதால் மாவின் தன்மை கடினமானதாக மாறி சப்பாத்தி ரஃப்பாக இருக்கும். அதன் சுவையிலும் மாறுபாடு இருக்கும். சிலர் காற்று புகாத டப்பா, அலுமினியம் பாயில், ஜிப்லாக் கவர்களில் வைக்கிறார்கள்.
இது ஓரளவுக்கு செய்யலாம். ஆனால் இதுவும் மாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள். அந்த மாவில் மழைக்காலங்களில் லிஸ்ட்டீரியா மோனோசைட்டோஜென்ஸ் எனும் பாக்டீரியா உருவாக வாய்ப்புள்ளது. குறைந்த வெப்பநிலையில் உருவாகும் இந்த பாக்டீரியா உணவு பொருளுக்குள் நுழைந்து காய்ச்சல் , தலைவலி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகளை கொடுக்கும்.
சப்பாத்தி மாவை பிசைந்த அன்றே சாப்பிடுவது நல்லது. மீந்த மாவை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்துவது தவறு. இது என்றில்லை, சாம்பார், ரசம், சட்னி உள்ளிட்டவைகளை கூட அன்று அன்று செய்து அன்றே மீதமில்லாமல் சாப்பிட்டு விடுவதுதான் நல்லது. அதை விட்டுவிட்டு பிரிட்ஜில் வைத்து அதை சூடு செய்து சாப்பிடுவது உடலுக்கு கேடு விளைவிக்கும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications