முந்நூறு நோயை போக்கும் முருங்கை எண்ணெய்.. முருங்கைக்கீரை பொடி.. யார் சாப்பிடலாம்? எப்படி தயாரிப்பது

Subscribe to Oneindia Tamil
சென்னை: முருங்கை இலையில் உள்ள சத்துக்களை அளவிட முடியாது.. முருங்கைக்கீரையை வாரம் 2 நாள் சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆரோக்கியம் பெருகுகிறது.. முருங்கையின் பூ, இலை, காய், பட்டை, வேர் என அத்தனை பாகமும் சத்துக்களை தரக்கூடியது.. இதில் முருங்கை எண்ணெய், முருங்கை இலை தூள் இவை இரண்டும் எந்த அளவுக்கு நமக்கு உதவுகின்றன? அதிலுள்ள சத்துக்கள் என்னென்ன? என்பதையெல்லாம் சுருக்கமாக பார்ப்போம்.
முருங்கை கீரையில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் A, C, E, B, B2, C, கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம் போன்ற பல சத்துக்கள் உள்ளன. இதனை தவிர புரதம், நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், குர்செடின், குளோரோஜெனிக் அமிலம், பீட்டா கரோட்டின் போன்றவையும் நிறைந்திருக்கின்றன.
முருங்கை கீரையை சுத்தம் செய்து சமைக்க நேரமில்லாதபோது, கைகொடுத்து உதவக்கூடியதுதான் முருங்கைக்கீரை பவுடர்.. இதற்கு இளசான முருங்கை கீரையை காம்பு இல்லாமல் சுத்தம்செய்ய வேண்டும். பிறகு நீரில் அலசி நன்றாக நிழலில் காய வைத்து, தூள் செய்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.. பிறகு ஒரு மெல்லிய வெள்ளை துணியில் சலித்து வைத்துக்கொண்டு, 3 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.
கேன்சர் செல்கள்
ஒரு டம்ளர் சுடுநீரில், அரை ஸ்பூன் முருங்கைக்கீரை பவுடரை கலந்து குடிக்கலாம்.. அல்லது சுடு சாதத்தில் இந்த தூளை கலந்து, நெய்விட்டு பிசைந்து சாப்பிடலாம். அல்லது குழம்பு, பொரியல் செய்யும்போது, இந்த பவுடரை தூவி இறக்கலாம். வளரும் பிள்ளைகளுக்கு அரை ஸ்பூன் தேன் கலந்து இந்த பவுடரை தரலாம்..
இந்த பவுடர் சாப்பிட்டு வருவதால், மார்பகம், கல்லீரல், பெருங்குடல், கணையம் போன்ற சில வகையான கேன்சர் செல்களை எதிர்த்து போராடுகிறது.. உடல் செல்களுக்கு ஏற்படும் சேதங்களை தடுக்கிறது, மன அழுத்தம், வீக்கத்தை கட்டுப்படுத்துகிறது..
நீரிழிவு நோயாளி, பெண்கள்
இந்த பவுடர் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.. ரத்த சர்க்கரை அளவையும், குளுக்கோஸ் லெவலையும் கன்ட்ரோல் செய்கிறது. உடலிலுள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து, நல்ல கொழுப்பினை பெருக்குகிறது.. முக்கியமாக கல்லீரலை சுற்றிலும் கொழுப்பு படிந்துவிடுவதை தடுக்கிறது.. ஆன்டி-ஆக்ஸிடன்ட் பீட்டா கரோட்டின் அதிகமாக உள்ளதால், கண்கள் சம்பந்தமான பாதிப்புகளும் நீங்குகின்றன.
பெண்களுக்கு மாதவிலக்கு தொந்தரவுகளை தீர்த்து, உடலை பலப்படுத்தவும், ரத்த விருத்தியை அதிகப்படுத்தவும் இந்த பவுடர் உதவுகிறது. வேறு பிரச்சனைகளுக்காக மருந்து சாப்பிடுபவர்கள், டாக்டர்களின் அனுமதியை பெற்று, இந்த பவுடரை சாப்பிடுவது நல்லது.
முருங்கை எண்ணெய் தயார்
முருங்கை காயிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் அதிமுக்கியமானது.. இந்த எண்ணெய்யை செய்வதற்கு தனி பக்குவம் தேவைப்படும்.. அதாவது, மரத்திலேயே காய்களை நன்றாக காயவிட்டு, பிறகு அந்த காய்களை உரித்து விதைகளை எடுக்க வேண்டும்.. அந்த விதையிலுள்ள பருப்புகளை வெயிலில் காயவைத்து செக்கில் ஆட்டும்போது, எண்ணெய் பிரிந்து வரும்.
இந்த முருங்கை எண்ணெய்யில் ஏகப்பட்ட ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், வைட்டமின் E, C, கொழுப்பு அமிலங்கள் உள்ளதால், உடலிலுள்ள ஃபிரீ ரேடிகல்களை எதிர்க்கிறது.. அதாவது, ரத்தம் மற்றும் திசுக்களில் பரவக்கூடிய நிலையற்ற மூலக்கூறுகள், நம்முடைய உடலிலுள்ள திசுக்கள், சருமம், முடிக்கு தீங்கு விளைவித்து வயதை துரிதப்படுத்துவதால் வயதான தோற்றத்தை அளிக்கிறது.. இதற்கு பெயர்தான் ஃப்ரீ ரேடிக்கல் என்பார்கள்.. இந்த முருங்கை எண்ணெய் ஃப்ரீ ரேடிகல்களை நடுநிலைப்படுத்துகிறது..
தோல் சுருக்கத்தை தடுக்கிறது
எனவே, திசுக்கள், சருமம், தலைமுடிக்கு ஆரோக்கியம் தருகிறது. முக்கியமாக, சரும சுருக்கத்தை முன்கூட்டியே தடுக்கிறது.. தலைமுடி அதிகமாக கொட்டும்போது, இந்த முருங்கை எண்ணெய்யை தாராளமாக பயன்படுத்தலாம். கண், கழுத்து பகுதிகளில் கருவளையம் இருந்தால் இந்த எண்ணெய் தடவலாம்..
தலைக்கு முருங்கை எண்ணெய் தடவும்போது, வறண்ட கூந்தலுக்கு ஈரப்பதம் கிடைக்கிறது.. இத்தனை நன்மையை தருவதால்தான், முருங்கை எண்ணெய் அழகு சாதன பொருட்களில் முக்கிய மூலப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+