முளைகட்டிய பச்சை பயிறு ஹெல்த்தி உணவு.. கருப்பை கோளாறு, உடல் எடை இழப்பு வரை உதவும் பச்சை பயிறு பலன்
சென்னை: வைட்டமின் A, B, E, மெக்னீசியம், கால்சியம், இரும்பு சத்து போன்ற பல்வேறு சத்துக்களை கொண்டது பச்சை பயிறு.. நார்ச்சத்தும், புரோட்டீனும் நிறைந்த பச்சை பயிறானது, பல நன்மைகளை தரக்கூடியது.. அதிலும் ஊற வைத்து முளைகட்டிய பச்சை பயிறுகளை சாப்பிட்டு வருவதன் மூலம் இரட்டிப்பு நன்மையை பெறலாம்.. அந்தவகையில் பச்சை பயிறு யார் யார் சாப்பிடலாம்? முளை கட்டி சாப்பிடுவதால் பெறக்கூடிய நன்மைகள் என்னென்ன? அவைகளை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
பச்சை பயிறை சுத்தமாக கழுவி, 10 மணி நேரம் ஊறவைத்து, அதிலுள்ள நீரை வடிகட்டி, மெல்லிய துணியில் மறுபடியும் 10 நேரம் முடிச்சு போல கட்டி, காற்றோட்டம் உள்ள இடத்தில் வைத்துவிட வேண்டும்.

இந்த முடிச்சு மீது வெறும் நீரை மட்டும் சிறிது சிறிதாக தெளித்து வர வேண்டும்.. இப்போது முளை கட்டிய பச்சை பயிறு கிடைத்துவிடும். ஆனால், இதனை பச்சையாக சாப்பிடக்கூடாது.. செரிமான கோளாறுகள் வரலாம் .. எனவே, இட்லி அவிக்கும் சட்டியில் சிறிது நேரம் வேக வைத்து எடுத்தால், முழு ஊட்டச்சத்தும் வீணாகாமல் கிடைத்துவிடும்.
குறைந்த கலோரிகள்
இந்த முளைகட்டிய பயிறில் அமினோ அமிலங்கள், பாலிபினால்கள் இருப்பதால், கேன்சர் செல்கள் அபாயத்தை தடுக்கிறது. உயர் ரத்த அழுத்த பிரச்சனை தீர்கிறது. வயிறு உபாதைகளை போக்குகிறது.. குறைவான கொழுப்பு, குறைவான கலோரி உள்ளதால் உடல் எடை குறைக்க உதவுகிறது. எனவே, உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் காலையில் சாப்பிடுவது நல்லது.
எல்டிஎல் கொலஸ்ட்ராலுக்கு எதிராக இந்த பயிறுகள் செயல்படுகின்றன.. மேலும் இந்த பயிறு வகைகளில் ஃபோலேட் உள்ளது, இது உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் அபாயத்தை தடுக்கிறது.
அல்சர் புண்களை குணப்படுத்த
நரம்பு செயல்பாடு, மூளை திறன்பட செயல்பட, முளைகட்டிய பச்சை பயிறு உதவுகிறது.. சர்க்கரை நோய், இதய நோய், போன்ற அபாயத்தையும் குறைக்கிறது. அல்சர் புண்களை குணப்படுத்தும் தன்மை பாசிப்பயிறுக்கு உண்டு.. அனீமியா சிக்கல் இருந்தால் அல்லது பெண்களுக்கு அதிக ரத்தப்போக்கு இருந்தால் பாசிப்பருப்பு கை கொடுத்து உதவுகிறது..
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கக்கூடியது.. முளைகட்டிய பயிறுகளானது குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளன. இது ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களை எதிர்த்துப் போராடும் திறன் கொண்டதால், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உடல் பலவீனமாக இருப்பவர்கள் முளைகட்டிய பயிரை கட்டாயம் சாப்பிட்டு வரவேண்டும்.
சருமம், எலும்புகள் வலுப்பெற
முளைகட்டிய பயிறுகளில் உள்ள வைட்டமின் A, C உள்ளதால் தோல் பாதுகாப்புக்கு உதவுகிறது.. சருமத்தை பளபளப்பாக்கி, சுருக்கங்களை குறைத்து, இளமையான மற்றும் ஆரோக்கியமான சருமத்தை வழங்க செய்கிறது. நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்க முடிகிறது.. செரிமான செயல்முறையையும் மேம்படுத்த செய்கிறது..
முளைகட்டிய பச்சை பயிறில் நிறைந்துள்ள வைட்டமின் K வலுவான எலும்புகளை பெற உதவுகின்றன. இதில் நிறைந்துள்ள தாவர ஈஸ்ட்ரோஜன்கள் எலும்புகளின் வளர்ச்சிக்கும், அதன் அடர்த்தியை பராமரிப்பதற்கும் உதவியாக உள்ளன.. இதை தினசரி உணவில் சேர்த்து வர ஆஸ்டியோபோரோசிஸின் அபாயத்தை எளிதாக குறைக்க முடியும் என்கிறார்கள் நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications