அடுத்தடுத்து வாந்தி எடுத்த மக்கள்.. பூட்டப்பட்ட ஊர்.. எகிப்தில் பரவும் "மர்ம" வைரஸ்.. மறுபடியுமா?
நியூயார்க்: எகிப்தில் பரவி வரும் மர்ம காய்ச்சல் காரணமாக உலக நாடுகள் அச்சத்தில் ஆழ்ந்து உள்ளன.
கடந்த 2019 இறுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அதை தொடர்ந்து உலகம் முழுக்க பல நாடுகளில் கொரோனா வைரஸ் தாண்டவம் ஆடியது. இதனால் 2021 வரை உலகம் முழுக்க கடுமையான லாக் டவுன் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டது. உலகம் முழுக்க இதுவரை 691,684,315 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளன. இதில் மொத்தமாக 6,899,861 பேர் பலியாகி உள்ளனர். அதாவது பாதிக்கப்பட்ட மொத்த மக்களில் 1 சதவிகிதம் பேர் மரணம் அடைந்து உள்ளனர்.

கொரோனா பல உருமாற்றம் அடைந்து பரவியது. ஆல்பா வகை தொடங்கி ஓமிக்ரான் வரை பல வகையாக கொரோனா பரவியது. இந்தியாவில் மட்டும் 3 அலையாக கொரோனா பரவியது. இந்தியாவில் கொரோனா காரணமாக 531,915 பேர் அதிகாரபூர்வமாக பலியாகினர். அதேபோல் 44,994,921 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த கொரோனா பரவல் உலக நாடுகளையே உலுக்கி போட்டது. இந்த நிலையில் கொரோனா பரவல் தற்போது முடிவிற்கு வந்துள்ளது.
மிக வேகமாக உருவாக்கப்பட்ட வேக்சின்கள் மூலம் உலக நாடுகள் வேகமாக நோய்களில் இருந்து மீண்டன. பெரிய அளவில் உயிர் சேதங்கள் கட்டுப்படுத்தப்பட்டன. இந்த நிலையில்தான் தற்போது எகிப்தில் பரவி வரும் மர்ம காய்ச்சல் காரணமாக உலக நாடுகள் அச்சத்தில் ஆழ்ந்து உள்ளன. எகிப்த் நாட்டின் தெற்கில் உள்ள ஒரு கிராமத்தில் 67 பேர் பெயர் தெரியாத வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கேனா என்ற பகுதியில் உள்ள அல் குவாஸ் என்ற கிராமத்தில் இந்த நோய் பரவல் ஏற்பட்டு உள்ளது. இந்த நோய்த்தொற்றுகள் பெரும்பாலான சமயங்களில் லேசான மற்றும் மிதமான அறிகுறிகளை ஏற்படுத்தியுள்ளன. அதிக காய்ச்சல், எலும்பு வலி மற்றும் சோர்வு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டு உள்ளன.
இந்த அறிகுறிகள் மூன்று முதல் ஐந்து நாட்கள் தீவிரமாக நீடிக்கும் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. முக்கியமாக இந்த வைரஸால் பாதிக்கப்படும் பலரும் வாந்தி மற்றும் குமட்டல் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர். இது என்ன நோய், என்ன மாதிரியான வைரஸ் என்று தெரியவில்லை.
ஆனால் இது சாதாரண காய்ச்சல் இல்லை. ஒரு வகையான வைரஸ் காய்ச்சல். அது என்ன வைரஸ் என்று தெரியவில்லை. இது ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவுகிறது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. நோய்த்தொற்று இருப்பதாகக் கருதப்பட்டவர்களிடமிருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு உள்ளன. அதேபோல் உள்ளூர் நீர் ஆதாரங்களிலிருந்தும் மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன என்று அந்நாட்டு அரசு கூறியுள்ளது.
வரிசையாக அங்கே பலர் இந்த அறிகுறியோடு மருத்துவமனைக்கு வருவதால் அந்த பகுதிக்கு லாக்டவுன் போடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் எகிப்தில் இருந்து வரும் பயணிகளை முழுமையாக சோதனை செய்த பின்பே அனுமதிக்க வேண்டும் என்று ரஷ்யா முடிவு எடுத்துள்ளது. அதேபோல் ஐரோப்பாவும் கிப்தில் இருந்து வரும் பயணிகளை முழுமையாக சோதனை செய்த பின்பே அனுமதிக்க வேண்டும் என்ற முடிவை எடுக்க உள்ளது. மீண்டும் பெருந்தொற்று ஏற்படுவதை தவிர்க்க இந்த நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளன.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications