கருவாடு செய்றீங்களா.. கருவாட்டிலேயே பெஸ்ட் இதுதான்.. மூக்கை துளைக்கும் நெய்மீன்..அதென்ன "பிரியாணி"
சென்னை: அசைவ உணவுகளிலேயே, அதிக கொழுப்பு சத்து இல்லாத உணவு இந்த கருவாடுதான்... அதிலும் கருவாடுகளிலேயே அதிக சுவை கொண்டது எது தெரியுமா?
கிட்டத்தட்ட 80-85 சதவீதம் வரை புரதங்கள், கருவாடுகளில் காணப்படுகிறது.. எந்தவகையாக கருவாடாக இருந்தாலும், அதை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

கருவாடு: கருவாடுகளில் ஆண்டிஆக்ஸிடன்ட் அதிகமாக காணப்படுவதால், இருமல் மற்றும் சளி உள்ளவர்களுக்கு கருவாட்டு குழம்பு சிறந்த மருந்தாகும். உடல் நலம் குன்றியவர்கள் கருவாடை குழம்பு போல வைத்து சாப்பிடும்போது, உடல் நலம் தேறுவார்கள். சளித் தொல்லை, இருமல் பிரச்சினை உள்ளவர்கள் கருவாட்டுச் சாறு போல வைத்து குடிப்பார்கள்.
கருவாடு சாப்பிடுவதால், பூச்சிகளை அகற்றும்.. கருவாடு எலும்பு மற்றும் பற்களை உறுதிப்படுத்துகிறது. பெண்களுக்கு நீர்ப்பை, சினைப்பை, கருப்பை பிரச்சினைகளை சரி செய்ய கருவாடுகள் உதவுகின்றன.. இதெல்லாம் கருவாடுகளின் பொதுவான தன்மைகள் என்றாலும், அதிக ருசி தரும் கருவாடு நெய்மீன் என்று சொல்லப்படும் சீலா மீன் கருவாடுதானாம்.
மீன் வியாபாரிகள்: ராமேஸ்வரத்தில் இந்த மீனுக்கு படுகிராக்கி உண்டு.. இந்த கருவாடை வாங்குவதற்காகவே, பாம்பனுக்கு மீன்வியாபாரிகள் வருவார்களாம்.. இங்கிருந்து மீன் வாங்கி, ராமநாதபுரம், பரமக்குடி சந்தைகளில் கொண்டு போய் விற்பனை செய்வார்கள்.. அதேபோல, ராமேசுவரத்துக்கு சுற்றுலா வரும் பொதுமக்களும், நெய்மீன் கருவாட்டை கேட்டு வாங்கி செல்வார்களாம்.
அந்த அளவுக்கு நெய்மீன் கருவாடு ருசியை தரும்.. அதுமட்டுமல்ல, இந்த கருவாடு சமைத்தால், இதன் சதைப்பகுதிகள் கரைந்து, சுவையையும் வாசனையையும் அதிகப்படுத்திவிடுமாம். அதனால்தான், இதற்கு டிமாண்டும் கூடிவருகிறது..
வடதமிழகம்: தென் தமிழகத்தில் சீலா என்பதுபோல, வட தமிழகங்களில் வஞ்சரம், நெய் மீன் என்று இந்த மீனை சொல்வார்கள். இந்த பெயர் குழப்பத்தில், சீலா என்று நினைத்து வேறுவகையான மீன்களை வாங்கி நிறைய பேர் ஏமாந்துவிடுவதுமுண்டு. அதனால், ஒரிஜினல் சீலா மீன் கருவாடினை பார்த்து வாங்க வேண்டும்.
இந்த மீனின் தலைபகுதியிலும், வால்பகுதியிலும், தோலின் நிறம் வித்தியாசமாக இருக்குமாம். இந்த தோல் நிறத்தை வைத்தே, ஒரிஜினல் சீலாவை கண்டுபிடிக்க முடியும்.. வழக்கலாக, கருவாடுகளில் குழம்பு, தொக்கு, வறுவல் என செய்தாலும், கருவாடுகளை வைத்து பிரியாணியும் செய்யலாம்.
மீன் பிரியாணி: அரைகிலோ நெய்மீன் கருவாடுக்கு, ஒரு கிலோ அரிசி சேர்த்து, பிரியாணி செய்யலாம். நெய்மீன் கருவாடை சுத்தம் செய்து, நன்றாக கழுவி எண்ணெயில் பொரித்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்...
இப்போது, ஒரு வாணலில் நெய், எண்ணெய், பட்டை, ஏலம், கிராம்பு, பிரியாணி இலை, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், புதினா, கொத்தமல்லி, தயிர் சேர்த்து வதக்கி, பிறகு வறுத்த கருவாடையும் போட்டு வதக்க வேண்டும்.
உப்பு கவனம்: இப்போது, அரிசி, அதற்கு தேவையான தண்ணீரை ஊற்றி, உப்பின் அளவை பார்த்து கொள்ள வேண்டும். காரணம், கருவாடில் ஏற்கனவே உப்பு இருக்கும் என்பதால், கவனமாகவே சேர்க்க வேண்டும். இறுதியில், 20 நிமிடம் தம் போட்டு எடுத்தால் கருவாடு பிரியாணி ரெடி.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications