முடக்குவாதத்தை முடக்கும் முள்ளங்கி இலை.. மூலத்தை விரட்டும் முள்ளங்கி கீரை.. முள்ளங்கியைவிட பெஸ்ட்

உடல் எடை: நார்ச்சத்துக்கள் மிகுந்தும், கலோரி குறைந்தும் உள்ளதால், உடல் எடை குறைப்பவர்களுக்கு பெஸ்ட் சாய்ஸ் இந்த முள்ளங்கி இலையாகும். எனவே, இந்த முள்ளங்கி இலையில் சூப் வைத்து குடித்தால் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும்.
முடக்குவாதம் இன்று பெரும்பிரச்சனையாக உருவெடுத்துள்ள நிலையில், இந்த முள்ளங்கி இலை இதற்கும் தீர்வு தருகிறது.. ஆர்த்தரைடிஸ், முடக்குவாதம் பிரச்சினை உள்ளவர்கள், முள்ளங்கி இலையை உணவில் தாராளமாக சேர்க்க வேண்டும்.. இதனால், மூட்டுவலி, மூட்டு எலும்புகளில் ஏற்படும் தொற்றுக்களையும் இந்த இலைகள் சரிசெய்துவிடும்.. எலும்பு மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தையும் இந்த இலைகள் குறைத்துவிடும்.
உள்ளுறுப்புகள்: உள்ளுறுப்புகளை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க இந்த இலைகள் உதவுகின்றன.. குறிப்பாக பெண்கள் அனைவருமே இந்த இலையை உணவில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டுமாம். காரணம், பெண்களை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்குவது ரத்த சோகைதான்.. இந்த இரும்புச்சத்து குறைப்பாட்டை முள்ளங்கி இலைகள் தீர்க்கின்றன..
மலச்சிக்கலையும் தீர்க்கின்றன.. சருமத்தின் ஆரோக்கியத்தையும் காக்கின்றன . முள்ளங்கி இலையை உணவில் அதிகம் சேர்த்து கொள்பவர்களுக்கு அலர்ஜி தொந்தரவுகள் வருவதில்லையாம். இதிலுள்ள ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் உடல் கழிவுகளை முழுமையாக வெளியேற்றுகிறது.
சிறுநீரகம்: சிறுநீரகத்தில் தொற்றுக்கள் பாதிக்காத வகையில், இந்த இலைகள் செயல்படுகின்றன.. அதனால்தான் சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கீரையாக இது உள்ளது.. இந்த கீரையில் சாறு எடுத்து, வெந்தயத்தை அதில் ஊறவைத்து உலர்த்தி தூள் செய்து, தினமும் 2 வேளை சாப்பிடுவதால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். அதுமட்டுமல்ல, இந்த இலையிலிருந்து 6 ஸ்பூன் அளவுக்கு சாறு எடுத்து குடிக்கும்போது, சிறுநீரக கற்களும் கரைந்துவிடுமாம்..
கல்லீரலுக்கு பலத்தை தருவதால், மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த இலையை தவறவிடக்கூடாது.. இதயம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்ற இலை இந்த முள்ளங்கி இலையாகும்.
மூலநோய்: அதேபோல, கடுமையான மூலத்தையும், இந்த இலைகள் கட்டுக்குள் கொண்டுவந்துவிடும்.. காரணம், இதிலுள்ள ஆன்டி - பாக்டீரியல் பண்புகள், மூலத்தால் ஏற்படும் வீக்கத்தையும், தொற்றையும் குறைப்பதில் பெரும்பங்காற்றுகிறதாம்.. எனவே, முள்ளங்கி இலையில் சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து, ஆசன வாய் பகுதியில் தடவிவரும்போது, மூலநோய் தீவிரம் குறையுமாம்.. எரிச்சலும் தணியும் என்கிறார்கள்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications