அடிக்கடி தலை முடி கொட்டுதா? வெயில் காலத்தில் முடியை பராமரிக்க இதோ, அருமையான டிப்ஸ்!
தலை முடி கொட்டுவதற்கான காரணம், மேலும் அடர்த்தியாக, நீண்ட முடி வளர, தலை முடியை எப்படி பராமரிப்பது என்பதை பற்றியதான பயனுள்ள தகவல்கள்
சென்னை: ஒவ்வொரு பெண்ணின் உடல் தன்மைக்கேற்பவும், உடலின் தட்பவெப்ப தன்மைக்கும், இருப்பிடத்திற்கேற்பவும், ஏற்றவாறு தான் முடி வளர்ச்சி, கருமை நிறம், அடர்த்தி, நீளமான கூந்தல், என அமைகிறது. பொதுவாகவே தலை முடி எப்போதும் அடிப்பகுதியிலேயே வளரும். எனவே முடியின் நுனிப்பகுதியை சரியான சம அளவில் வெட்டி, பராமரித்து வந்தால், முடி சீராகவும், நீளமாகவும் வளரும். முடி கபாலத்தை பாதுகாக்க உதவும், மேலும் இதை தோலுக்கு உற்ற நண்பன் என்று கூட சொல்லலாம். தோலில் உள்ள ஆயில் கிளான்ட் முடியை பராமரிக்க உதவி செய்கிறது. சில நேரங்களில் உடலில் ஏற்படும் உபாதை மற்றும் ஒவ்வாமை, வலி, புண் ஆகியவை முடி சிலிர்ப்பதன் மூலம் நாம் அறிந்துகொள்ளலாம்.
முதலில் பெண்களுக்கு உள்ள முடியின் தன்மைகள் பற்றி நன்கு தெரிந்துகொண்டு அதற்கேற்றவாறு பராமரிப்பது அவசியம். சிலருக்கு மிருதுவான தன்மையுடன், கருகருவென இருக்கும், திண்மையான (தடிமனாக) முடி, நெளிவு (குறைவாக இருந்தாலும் அடர்த்தியான) முடி, கோரை (முரட்டுத்தனமான அடங்காத) முடி, சில்கி (வெல்வெட்டு போல) முடி, வணங்கா முடி (மடங்காமல் குச்சி குச்சியான) முடி, சுருள் பார்ப்பதற்கு ஸ்ப்ரிங் போல் இருக்கும். செம்பட்டை, மற்றும் வெளிப்பு முடி அதிகம் வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு காணப்படும்.

தலை முடி உதிர முக்கிய காரணங்கள்
உப்பு தண்ணீரில் குளித்தல், பிளீச்சிங் கலந்த தண்ணீர் உபயோகித்தல், அதிக நேரம் தலை ஈரமாக இறுக்கமாக சுற்றி வைத்தல், தலையில் சிறு கட்டிகள் வருதல், எண்ணெய் பசை மற்றும் ஷாம்பூ வாசனை போகாமல் முடியை அலசுவது, பாலிஸ்டர் டவல்கள் பயன்படுத்துவது, மலசிக்கல், மாதவிடாய் நாட்களில் அதிகமாக உதிரும், இரத்த சோகை, இரத்த சம்பந்த வியாதி உள்ளவர்களுக்கு முடி அடிக்கடி கொட்டும், அதிக வெள்ளைப்போக்கு மற்றும் ஒழுங்கற்ற இரத்த போக்கு, மகப்பேறு காலங்களுக்கு பிறகு ஏற்படும் இரத்த இழப்பால் முடி உதிரும். பொதுவாகவே தலை முடி சுமார் ஒன்றரை மாதம் வரை உதிராமல் இருக்கும். பின் உதிர்ந்து மறுபடியும் புதிய முடி வளரும். இது எல்லா பெண்களுக்கும் இயல்பாகவே நடைபெற்று கொண்டே இருக்கும். பொடுகு தொல்லை, அதிக மன உளைச்சல், இரவில் அதிக நேரம் கண்விழித்தல், உடலில் சூடு அதிகமாகுதல், அடிக்கடி மாமிச உணவுகளை உட்கொள்வது, பிளாஸ்டிக் பாய் மேல் உறக்கம் போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளது.

தலை முடி பாதுகாக்க செய்யவேண்டியவை
எப்போதும் எண்ணெயை மிதமான சூட்டில் சூடு செய்து தலையில் தேய்த்து வந்தால், முடியின் வேர் உறுதியாகும், முடி உதிர்வை தடுக்கும். கெமிக்கல் மற்றும் தொழிற்சாலையில் வேலை செய்பவர்கள் தலைக்கு குளித்தவுடன் கட்டாயம் எண்ணெய் தேய்த்துக் கொள்ளவேண்டும். எந்த எண்ணெயை பயன்படுத்தினாலும் நன்கு தலையில் தேய்த்து, தொடர்ந்து இரண்டு வாரம் உபயோகித்தால் மட்டுமே பலன் தெரியும். வீட்டில் தயாரிக்கும் எண்ணெய் என்றால் மூடிய பாட்டிலில் போட்டு சூரிய ஒளியில் வைத்து பயன்படுத்தினால், எண்ணெய் நீண்ட நாள் கெடாமல் சுத்தமாக இருக்கும். தேங்காய்ப்பால் எடுத்து காயவைத்து வெட்டிவேர், வெள்ளைமிளகு இரண்டையும் கலந்து தலைக்கு தேய்த்து வந்தால் முடி கொட்டாது.

உணவு முறை
நாம் உண்ணும் உணவில் இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து குறைந்தால் முடி உதிர ஆரம்பிக்கும். இரும்பு சத்து சுண்ணாம்பு சத்துள்ள பழங்களை, தினமும் சேர்த்துக்கொள்ளவேண்டும். வாரம் 2 முறை எல்லா வகை கீரை, முளை கட்டிய பருப்புகள், சாலட், ஜூஸ், நல்ல அரோக்கியமான உணவை உண்டுவந்தால், உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதோடு முடி கொட்டாமல் காக்க உதவும். மேலும் வெயில் காலத்தில் அடிக்கடி தண்ணீர் குடிக்கவேண்டும், நீர்சத்து உள்ள தர்பூசணி, கிர்ணி, எலும்பிச்சை பழம் ஆகிய பழவகைகளை உட்கொள்வது சால சிறந்தது.

முடி உதிர்வை தடுக்க, அடர்த்தியாக வளர
சுத்தமான தேங்காய் எண்ணெயுடன், வைட்டமின் E ஆயில் 10/3 என்ற பங்கு அளவில் கலந்து, பூசிவர முடி வளர்ச்சி அடையும். தேங்காய் பாலுடன், பச்சையான கற்பூரவல்லி இலை சேர்த்து, வெயிலில் காயவைத்து, முடியில் பூசினால், முடி அடர்த்தியாக வளரும். கரிசலாங்கண்ணி, ஆவாரம்பூ இரண்டையும் அரைத்து உலர செய்து பிறகு, எண்ணெயில் கலந்து காயவைத்து, தலைக்கு தேய்த்து குளித்தால், உடல் சூட்டை தனித்து குளுமை அடையும், முடியும் உதிராது. முட்டையின் வெள்ளைக்கரு, சிறுவால்மிளகு இரண்டையும் அரைத்து தலைக்கு தேய்த்து குளித்தால், முடி வேருடன் கொட்டுவதை தடுக்கும். காய்ந்த செம்பருத்தி பூ, ஆவாரம்பூ, மருதாணி பூ, எல்லாவற்றையும் வெயில் படாமல் நிழலில் உலர்த்தி, சிறு துணியில் கட்டி தேங்காய் எண்ணெயில் போட்டு உபயோகித்துவந்தால், கடுமையான வெயில் காலத்தில் ஏற்படும் முடி உதிர்வை தடுத்து, மூல சூடு அடங்கும். வேப்பம்பூ, மருதாணி பூ, இரண்டையும் வெயில் படாமல் காயவைத்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து தலைக்கு தேய்த்துவர, வெப்பத்தால் தலையில் ஏற்படும் பருக்கள், மற்றும் கட்டிகள் மறையும்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications