40 வயதிலும் அசால்ட்டாக தொப்பையை கரைத்த நபர்.. அவர் செய்தது 2 விஷயம் தான்.. ஆஹா நோட் பண்ணுங்க
மும்பை: இன்றைய பரபரப்பான சூழலில் உடல் எடை குறைப்பது கடினமான ஒன்றாக மாறியுள்ளது. அதிலும் குறிப்பாகத் தொப்பை ஒருமுறை வந்துவிட்டால் அதைக் கரைப்பது கிட்டதட்ட முடியாத ஒன்றாக மாறியிருக்கிறது. இதற்கிடையே 40 வயதான நபர் ஒருவர் ஒருவர் விடாமுயற்சியால் அசால்டாக தொப்பையைக் குறைத்துள்ளார். இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இன்றைய நவீன உலகில் ஒரு உடலைப் பராமரிப்பது சவாலானதாக மாறியுள்ளது. ஆபீஸ் சென்றாலும் பல மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்ய வேண்டி இருக்கிறது. இதனால் உடல் பருமன் என்பது தவிர்க்கவே முடியாத பிரச்சினையாக மாறி வருகிறது. இதன் ஆபத்தை உணரும் பலரும் எடையைக் குறைக்க பல்வேறு முயற்சிகளை எடுக்கிறார்கள். ஆனால், அனைவராலும் எடை குறைப்பு பயணத்தை வெற்றிகரமாக முடிக்க முடிவதில்லை.

சாதாரண விஷயம் இல்லை
அதிலும் குறிப்பாக வயிற்றில் ஏற்படும் கொழுப்பைக் குறைப்பது சாதாரண விஷயம் இல்லை. மற்ற கொழுப்புகளைக் காட்டிலும் வயிற்றில் ஏற்படும் தொப்பையைக் கரைப்பது தான் கடினமான செயல். ஆனால், இங்கு ஒருவர் அதையும் வெற்றிகரமாகச் செய்துள்ளார். விடா முயற்சியுடன் எடை இழப்பு பயணத்தை மேற்கொண்ட அந்த நபர் 13.5 கிலோ உடல் எடையை வெற்றிகரமாகக் குறைத்து சாதனை படைத்துள்ளார்.
இதில் விஷயம் என்னவென்றால் அந்த நபருக்கு 40 வயதுக்கு மேல் ஆகிறது. அந்த வயதில் அனைவரும் ரிலாக்ஸாக இருக்க வேண்டும் என்றே நினைப்பார்கள். ஆனால், ஃபிட்னஸின் முக்கியத்துவத்தை உணர்ந்த அந்த நபர் உடல் எடையை வெற்றிகரமாகக் குறைத்துள்ளது. அவருக்கு பிட்னஸ் கோச்சாக இருந்த பிரியங்கா லஹிரி என்பவர் இந்த எடை இழப்பு பயணம் குறித்த விவரங்களைப் பகிர்ந்துள்ளார்.
தொப்பையை குறைத்த 40 வயது நபர்
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தனது உடல் கொழுப்பைக் குறைக்கவும், வலிமையைப் பெறவும், உணவை மேம்படுத்தவும், ஓடக்கூடிய திறனை மேம்படுத்தவும் அவர் என்னை அணுகினார். தொடர்ந்து முயன்ற அவர் 13.5 கிலோ உடல் எடையையும் தொப்பையையும் குறைத்தார். ஆனால் அவரது உடல்நிலை இந்தளவுக்கு மோசமாக என்ன காரணம். அது குறித்தும் நாம் பார்க்கலாம்.
பிரச்சினைக்கு என்ன காரணம்
அவரது மிகப்பெரிய பிரச்சனையே அவர் வேலை செய்யும் இடம்தான். அவர் துரித உணவுகள் மற்றும் அதிக கலோரி உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள அவரது ஆபீஸ் தான் காரணமாக இருந்தது. மன அழுத்தம் நிறைந்த அவரது வேலை, அவரை அதிகம் சாப்பிட வைத்தது. மேலும், ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்ய வேண்டிய சூழலும் ஏற்பட்டது.
அவரது அலுவலகத்தில் உள்ள உணவகத்தில் நல்ல உணவும் மோசமான உணவும் இருந்துள்ளது. சாக்லேட்டுகள் முதல் அனைத்து வகையான அதிக கலோரி நிறைந்த உணவுகள் இருந்துள்ளன. அதை அவ்வப்போது அவர் சாப்பிட்டுள்ளார். அவரது உடலில் உடனடியாக மாற்றம் தெரியவில்லை என்ற போதிலும், சீக்கிரமே அவரது உடல்நிலையை மாற தொடங்கியுள்ளது. அப்போது தான் அவர் என்னை அணுகினார்.
எடையைக் குறைத்தது எப்படி
அவரது அலுவலகத்தில் உள்ள உணவகத்தில் கிடைக்கும் பொருட்களை வைத்து அவருக்கு ஒரு டயட் திட்டத்தைக் கொடுத்தேன். அவர் சரியான உணவை தேர்வு செய்ய வேண்டி இருந்தது. அதை அவர் அற்புதமாகச் செய்தார். 4 நாட்கள் வலிமைக்கான உடற்பயிற்சி, 1 நாள் சகிப்புத்தன்மைக்கான உடற்பயிற்சி, மன உறுதி மற்றும் சுறுசுறுப்புக்கு 2 நாட்கள் உடற்பயிற்சி என்று விரிவான திட்டத்தைப் போட்டுக்கொடுத்தேன். அதை அவர் சரியாகப் பின்பற்றினார். சாதித்தும் காட்டினார்" எனப் பதிவிட்டுள்ளார்.
உடல் எடையைக் குறைக்க எப்போதும் 2 விஷயங்கள் முக்கியம்- ஒன்று டயட்.. மற்றொன்று உடற்பயிற்சி. இந்த இரண்டையும் விடாமல் பின்பற்றினால் மட்டுமே உடல் எடையைக் குறைக்க முடியும். 40 வயதான இந்த நபரின் எடை இழப்பு பயணமும் கூட அதையே நமக்குக் காட்டுகிறது.
இது சாதாரண செய்தி மட்டுமே.. இதை நிச்சயம் மருத்துவ ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக்கூடாது. உங்களுக்கு உடல்நிலை பிரச்சினை ஏற்பட்டால்.. உடனடியாக அருகே உள்ள மருத்துவரை அணுகவும்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications