இட்லிக்கு ஊற வைக்கிறீங்களா? ஆரோக்கியம் கிடைக்க இதையும் சேருங்க.. இட்லியை "இவங்க" சாப்பிடக் கூடாதாமே?
சென்னை: அனைவராலும் உண்ணக்கூடிய உணவாக, அனைவருக்குமான உணவாக கருதப்படுகிறது இட்லி. ஆனால், இப்படிப்பட்ட இட்லியை, ஒருசிலர் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது என்றும் அறிவுறுத்துகிறார்கள். அந்தவகையில் யாரெல்லாம் இட்லியை தவிர்க்கலாம்? அதற்கான காரணங்கள் என்ன தெரியுமா?
இட்லியை பொறுத்தவரை கொழுப்புச்சத்து இல்லாதவை.. ஆவியில் வேகக்கூடியவை.. கலோரிகள் குறைவாக இருப்பவை.. ஒரே ஒரு இட்லியில் 90 - 100 கவோரி இருக்கிறதாம்.. அத்துடன், உளுத்தம்பருப்பு சேர்த்து அரைக்கப்படுவதால், புரோட்டீன்கள் நிறைய உள்ளன. நார்ச்சத்துக்களும் முழுமையாக நமக்கு கிடைக்கின்றன.

சர்க்கரை நோயாளி: நீரிழிவு நோயாளிகளுக்கும், உடல் எடையை ஒரே சீராக வைத்து கொள்பவர்களுக்கும், நார்ச்சத்து குறைவாக உள்ளவர்களுக்கும் இந்த இட்லி அருமையான உணவாகும். இதனால் இதய ஆரோக்கியம் சீராகிறது. அந்தவகையில் இட்லி ஆரோக்கியமான உணவாகவே கருதப்படுகிறது.
எனினும், அசிடிட்டி, நெஞ்செரிச்சல், குடல் சார்ந்த பிரச்சினைகள் இருப்பவர்கள் இட்லியை குறைவாக சாப்பிடலாம்.. ஏனென்றால், நொதித்தல் முறையில் இட்லி புளிக்க வைக்கப்படுவதால், அது செரிக்கும்போது, வெளியிடும் வாயுக்கள், குடல் உபாதைகளை அதிகரிக்க செய்யலாம்.
அதேபோல, கார்போஹைட்ரேட், ஸ்டார்ச் இரண்டுமே இட்லியில் உள்ளதால் உடல் எடையும் கூடும் என்பதால், இவர்கள் இட்லியை தவிர்க்கலாம்.. அதேபோல, மூட்டுவலி, ஆர்த்தரைடிஸ் பிரச்சினை உள்ளவர்கள் அரிசி உணவை அதிகமாக எடுக்கும்போது மூட்டுவலியும் அதிகரிக்கக்கூடும்..
சர்க்கரை நோயாளி: அதேபோல, சர்க்கரை நோயாளிகள் இதை கூடுமானவரை தவிர்க்கலாம் என்கிறார்கள். காரணம், கலோரி குறைவு மிக்க உணவு என்றாலும், நான்கைந்து இட்லிகளை சாப்பிட்டால் அது ஆரோக்கியமாக அமையாது.. கார்போஹைட்ரேட், கிளைசெமிக் குறியீடு இவைகள் உள்ளதால், சர்க்கரை நோயாளிகள் இட்லியை குறைத்து கொள்வது அல்லது தவிர்ப்பது நல்லது என்கிறார்கள்.
அல்லது அரிசியை குறைத்துவிட்டு பாசிப்பருப்பும் சேர்த்தும் ஊறவைத்து இட்லி மாவு அரைத்தால் கார்போஹைட்ரேட் குறைந்து புரதங்கள் அதிகரிக்கும். இந்த இட்லி மாவில் கேரட், பீன்ஸ், காலிஃபிளவர் போன்ற காய்கறிகள் சேர்த்து வெஜிடபிள் இட்லியாக செய்யலாம்.. எவ்வளவு சத்தான இட்லியாக இருந்தாலும் 2 இட்லி, 2 தோசை என்பதுதான் காலையில் எடுத்து கொள்ள வேண்டுமாம்.
பாசி பருப்பு: தேங்காய் சட்னிக்கு பதிலாக புரதம் நிறைந்த பருப்புகளை கொண்டு, சாம்பார் சேர்த்து கொள்ளலாம். அதுவும் பாசி பருப்பில் சாம்பார் செய்து சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது என்று அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள்.
பாசிப்பருப்புடன் சோம்பு சேர்த்து சாம்பார் சாப்பிடும்போது, ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்குமாம். அதேபோல, கேழ்வரகு, ஓட்ஸ், கொள்ளு உள்ளிட்ட சிறுதானியங்கள் போன்றவற்றை சேர்த்து மாவு அரைத்து இட்லி வார்க்கலாம்... கருப்பு உளுந்து பயன்படுத்தினால் அதிக நன்மை கிடைக்கும் என்கிறார்கள்.. சிலர் இட்லி அரைக்கும்போது, அவல் ஒரு கைப்பிடி சேர்த்து அரைப்பதுண்டு. அரிசிக்கு பதிலாக, சிறுதானியங்கள் நார்ச்சத்து அதிகமாக இருப்பதுடன், வயிறு நிரம்பிய உணர்வையும் கொடுக்கும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications