ஊறவெச்ச வெண்டைக்காயை சாப்பிட்டிருக்கீங்களா.. பொல பொல சதையை.. கடகடன்னு குறைக்கும் வெண்டக்காய் தண்ணீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெண்டைக்காயை வெறும் தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் மட்டும் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

வெண்டைக்காயை சாப்பிட்டால் அறிவு வளரும் என்பார்கள்.. அறிவுக்கும் வெண்டைக்காய்க்கும் தொடர்பு இருக்கிறதோ இல்லையோ, இந்த வெண்டைக்காயை சாப்பிடுவதால், இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரோட்டீன், வைட்டமின் A, E, K, போன்ற சத்துக்கள் நமக்கு நேரிடையாக கிடைக்கின்றன. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த வெண்டைக்காயை மட்டும் விட்டுவிடக்கூடாது.

Health Benefits of Ladies Finger Water and Super Uses of Ladyfinger soaked water

நீரிழிவு நோயாளிகள்: அதாவது 100 கிராம் வெண்டைக்காயில், வெறும் 35 கிலோ கலோரிகள் மட்டுமே இருக்கிறதாம்.போலிக் அமிலம் இந்த வெண்டைக்காய், கர்ப்பிணி பெண்களும், கருவில் உள்ள குழந்தைக்கும் இது மிகச்சிறந்த உணவாக திகழ்கிறது.

வெண்டைக்காயை, இரவு தூங்கும்போது, தண்ணீரில் ஊற வைத்துவிட்டு, மறுநாள் காலை அந்த நீரை குடிப்பது என்பது ஆயுதர்வேத முறையாகும்.. இந்த நீரானது, என்னென்ன மாயம் செய்கிறது பாருங்கள்.

இந்த தண்ணீரில், புரதம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், தாமிரம் போன்ற சத்துக்கள் உள்ளதால், அத்தனையும் நன்மை தருகிறது.

கொழுப்புகள்: உடல் எடை குறைகிறது.. சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால், இதய நோய் போன்ற பிரச்சனைகளுக்கு நன்மை பயக்கிறது.. நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் நிறைந்துள்ளதால், திரவ இழப்பை தடுத்து உடலை குளிர்ச்சியிக்குகிறது.. இந்த வெண்டைக்காய் தண்ணீரை குடிப்பதால், உடலில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் இருந்தாலும் குறைந்துவிடும். எலும்பு தொடர்பான நோய்கள், கை கால் மூட்டு வலி வராமல் தடுக்கப்படும்.. ஆரோக்கியமான சருமம் கிடைக்கும்.

Health Benefits of Ladies Finger Water and Super Uses of Ladyfinger soaked water

சர்க்கரை நோயாளிகள் இந்த நீரை குடித்து வந்தால், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம். கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்படுத்தப்பட்டு, இதய நோய்கள் தடுக்கப்படுகிறது..

வாய்ப்புண்: புற்றுநோய், வயிற்றுப்புண், பார்வைக்குறைபாடுகள் நீங்குகின்றன.. இதிலுள்ள கரையாத நார்ச்சத்துக்கள், குடல் புற்றுநோயின் அபாயத்தை தணிக்கின்றன. குடலியக்கத்தை சீராக்குகிறது.. மலச்சிக்கலை சீராக்குகிறது.. எலும்புகள் வலிமை பெறுகின்றன.. ஆஸ்துமா போன்ற சுவாசப்பிரச்சனைகள் தீர்கின்றன.. இதில், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது.. வைட்டமின் C உள்ளதால், பற்களுக்கும் எலும்புகளுக்கும் பலம் தருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+