முளைக்கீரை.. அதாங்க தண்டுக்கீரை.. நோயை அலறியடித்து ஓடச்செய்யும் முளைக்கீரையின் ஆச்சரிய பலனை பாருங்க
சென்னை: கீரை என்றாலே நன்மைகளை வாரி வழங்கக்கூடியது.. இதில் எந்த கீரை பெஸ்ட் என்று சொல்வது? எல்லா கீரைகளுமே நமக்கு அவசியம்தான்.. அந்தவகையில் முளைக்கீரையும் ஒன்று.
அதிக மருத்துவ குணம் கொண்ட இந்த கீரை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தாராளமாக கிடைக்கிறது.. அதனாலோ என்னவோ, நம் வீடுகளில் இயல்பாக மட்டுமல்ல, அதிகமாகவும் சமைக்கப்படுகிறது முளைக்கீரை.

முளைக்கீரையில் வைட்டமின்கள், தாது உப்புக்கள் அதிகம் உள்ளன. குறிப்பாக, சுண்ணாம்புச்சத்து நிறைய இருக்கிறது.. 85.7 சதவீதம் நீர் நிறைந்துள்ளது.. முக்கியமாக, முளைக்கீரையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.. அதேபோல தாமிரச் சத்துக்களும் அதிகம் உள்ளன.. அதேபோல மணிச்சத்தும் அதிகம் உள்ளன.. இந்த சத்துக்கள் காரணமாக, மூளை வலுப்பெறுகிறது.. ரத்த விருத்தி அதிகமாகும்.
தண்டுக்கீரை: முளைக்கீரையை தண்டுக்கீரை என்பார்கள்.. காரணம், இந்த கீரையின் தண்டுகளிலும் ஏகப்பட்ட சத்துக்கள் அடங்கியுள்ளன.. அதனால், கீரை + தண்டு இரண்டையுமே சேர்த்து சமைக்க வேண்டும். அல்லது இரண்டையுமே வேகவைத்து, அந்த சாற்றினை சாப்பாட்டில் பயன்படுத்தி வரலாம். இந்த தண்டுக்கீரையின் தண்டை மட்டுமே, சிறு சிறு துண்டுகளாக வெட்டிப்போட்டு, கொதிக்க வைத்து, அந்த சாறை மட்டும் குடித்தால் உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும்.
அதாவது முளைக்கீரை வளர்ந்து பெரிதானால், அதுதான் தண்டுக்கீரை.. இந்த தண்டுக்கீரையில் 2 வகைகள் ஒன்று, ஒன்று பச்சையாக இருக்கும். மற்றொன்று சிவப்பு நிறமாக இருக்கும்.. சிவப்பு நிற கீரை தண்டு, இதில் சிவப்பு நிற தண்டுக்கீரை சத்தும், ருசியும் அதிகமுள்ளதாகும். பெண்களின் மாதவிடாய் கோளாறுகளை குணமாக்குகிறது.
குழந்தைகள்: குழந்தைகளுக்கு இந்த கீரையை கட்டாயம் தர வேண்டும்.. காரணம், உயரமாக வளரவைக்கக்கூடிய தன்மை இந்த கீரைக்கு உண்டு.. 40 நாட்களுக்கு வளரும் குழந்தைகளுக்கு இதை தந்தால், உயரமாக வளர்வார்கள்.. முளைக்கீரை சாப்பிட்டால், பித்தம் நீங்கும்.. வயிற்றில் அல்சர் இருப்பவர்களுக்கு இந்த கீரை மிகவும் நல்லது.. இதனால் குடல்களில் உள்ள புண்கள் சீக்கிரமாக ஆறிவிடும்..
முளைக்கீரையுடன் சீரகத்தை நெய்யில் வறுத்துச் சேர்த்து, சில மிளகாய் வற்றல் கிள்ளிப்போட்டு, தண்ணீர் ஊற்றி அவித்து அந்த சாற்றை வடித்து, சாப்பாட்டில் கலந்து சாப்பிட்டால் அனைத்து வகையான காய்ச்சல், ஜுரங்கள் போன்றவை குணமாகும். கண்ணுக்கு குளிர்ச்சி தரக்கூடியது.. காசநோயால் ஏற்படும் காய்ச்சலுக்கு இந்த கீரை மிகவும் நல்லது.. இருமல், தொண்டை புண் இருந்தாலும் அதனையும் இந்த கீரை சரிசெய்கிறது.
மூல வியாதிக்காரர்கள்: மூல வியாதிக்காரர்களுக்கு இந்த கிரை மிகவும் நல்லது.. முளைக்கீரையுடன் துத்திக்கீரையும் சேர்த்து, பாசி பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால், உள் மூலம், பௌத்திரக்கட்டி மூலம், ரத்த மூலம் போன்ற பலவகையான மூல நோய்களுக்கு நிவாரணம் கிடைக்கும். மலச்சிக்கலைப் போக்கும், அஜீரண கோளாறுகளையும் நீக்கும்.
பசியுணர்வு தெரியாதவர்கள், இந்த முளைக்கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம், சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் நன்றாக பசிக்கும்.. நாக்கில் ருசிப்புத்தன்மையையும் கூட்டும். சிலர் இந்த கீரையில் அடை செய்வார்கள்.. சிலர் இந்த கீரையை வைத்து, வடையும் செய்வார்கள்.
முளைக்கீரை: பெரும்பாலும், முளைக்கீரையுடன் சிறுபருப்பு சேர்த்துச் சமைத்து சமைப்பார்கள்.. இதனால், முகம் அழகு பெறும்.. பொலிவு பெறும்.. அழகு குறிப்பிலும் இந்த கீரை முக்கிய பங்கு வகிக்கிறது.. முளைக்கீரையில் சாறு எடுத்து, அதனுடன், முந்திரிப் பருப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் தடவிவந்தால் முகம் பளபளப்பாகிவிடும்.. தோலின் மேற்பகுதி பொலிவாகிவிடும்.. சரும பிரச்சனைகளும் நீங்கிவிடும்.












Click it and Unblock the Notifications