சர்க்கரை அளவை குறைக்கும் சிறுகுறிஞ்சான்.. ஆரோக்கியம் தரும் அருமை இலை.. அசத்தும் சிறு குறிஞ்சான் பொடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீரிழிவு நோயாளிகளின் வரப்பிரசாதம் என்று சிறுகுறிஞ்சான் இலைகளை ஏன் சொல்கிறார்கள் தெரியுமா? இன்சுலின் எடுப்பவர்கள் சிறுகுறிஞ்சான் மருந்தையும் சாப்பிடலாமா? இந்த இலைகளின் மருத்துவ நன்மைகள் என்னென்ன?

சிறுகுறிஞ்சான் என்ற மூலிகையை சர்க்கரை கொல்லி என்பார்கள்.. காரணம், இது சர்க்கரை சுவையை அடக்குவதால் சர்க்கரை நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் பேருதவி புரிகிறதாம்.. நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை குறைவதும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. உடலிலுள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பை உறிஞ்சுவதை இந்த இலைகள் தடுக்கின்றன..

sirukurinjan health

சர்க்கரை: இந்த மூலிகையிலுள்ள ஜிம்னிமிக் அமிலம்தான், ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இது பல்வேறு ஆய்வுகளின் மூலமும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதாவது, இலையிலுள்ள ஜிம்னிமிக் அமிலமானது, இனிப்பை அடக்க செய்கிறது... சர்க்கரை உணவுகளை சாப்பிடுவதற்கு முன்பு, இந்த இலையை சாப்பிடும்போது, நாவில் சுவை மொட்டுகளில் ஏற்பிகளை தடுக்க செய்கிறதாம்.. இதனால் இனிப்பு பொருட்களின் மீது சாப்பிடும் நாட்டம் குறைந்துவிடுமாம்.

சிறு குறிஞ்சான் இலைகளில், பிசின்கள், அல்புமின், குளோரோபில், கார்போஹைட்ரேட், டார்டாரிக் அமிலம், ஃபார்மிக் அமிலம், பியூட்ரிக் அமிலம் போன்ற எண்ணற்ற பண்புகள் உள்ளன..

கெட்ட கொழுப்புகள்: உடலிலுள்ள கெட்ட கொழுப்புகள் மற்றும் ட்ரைகிளிசரைடுகள் அளவுகளை குறைப்பதுடன், நல்ல கொழுப்பின் அளவையும் அதிகரிக்க இந்த சிறுகுறிஞ்சான் உதவுவது உறுதியாகி உள்ளது.

அதேபோல, வீட்டிலேயே சிறுகுறிஞ்சான் பொடி நாம் தயாரிக்கலாம்.. இந்த இலைகளுடன் சமஅளவு நாவல் கொட்டைகளை எடுத்து, இரண்டையுமே தனித்தனியாக நிழலில் உலர்த்தி, இடித்து, பவுடராக்கி, சலித்து கொள்ள வேண்டும். இறுதியில் இரண்டையுமே ஒன்றாக கலந்து கொள்ளவேண்டும்.. இதில், 1 ஸ்பூன் அளவு வெந்நீரில் கலந்து 40 நாட்களுக்கு குடித்து வந்தாலே சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும் என்கிறார்கள்.

பக்க விளைவுகள்:" அல்லது இந்த இலையை கழுவிவிட்டு அப்படியே மென்று தின்னலாம். அல்லது டீ போட்டும் குடிக்கலாம். மாத்திரை வடிவங்களிலும் கிடைக்கிறது.. ஆனாலும், இதை சாப்பிடும் நேரம், மற்றும் அளவு மிகவும் முக்கியம் என்பதால், டாக்டரின் ஆலோசனை இல்லாமல், சிறுகுறிஞ்சானை உட்கொள்ளவே கூடாது.

இன்சுலின் எடுத்து கொள்பவர்கள், சிறுகுறிஞ்சானையும் சாப்பிட்டால் அதிக ரத்த சர்க்கரை அளவை குறைக்கலாம் என்பார்கள்.. ஆனால், ரத்தச் சர்க்கரையை குறைக்கும் மருந்துகளுடன் சிறுகுறிஞ்சான் இணைக்கும்போது சர்க்கரை அளவுகளில் வித்தியாசம் தென்படும். இதனால், தலைவலி, குமட்டல், தலைச்சுற்றல், நடுக்கம் போன்ற பக்கவிளைவுகளும் வரலாம்..

எனவே, இன்சுலின் போடும்போது சிறுகுறிஞ்சானை மருந்தாக எடுப்பது, ரத்த சர்க்கரை அளவை குறைக்கலாம் என்பதால், மருத்துவர்களின் ஆலோசனையை பெறுவது முக்கியம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+