வலுவான உடலுக்கு.. கொடிய நோயையும் விரட்டும் பிறந்த குழந்தையின் "தொப்புள் கொடி" மருத்துவம்.. ஆச்சரியம்
சென்னை: பிறந்த குழந்தையின் தொப்புள் கொடி ஏன் முக்கியமானதாக கருதப்படுகிறது தெரியுமா? தொப்புள் கொடி தரும் மருத்துவ நன்மைகள் என்னென்ன? யார் வேண்டுமானாலும் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிவிட முடியுமா? இதுகுறித்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
நம்முடைய மூதாதையர்கள், பச்சிளம் குழந்தையின் தொப்புள் கொடி மகிமையை பற்றி நன்றாகவே அறிந்து வைத்திருந்தார்கள்.. அதனால்தான், "தொப்புள் கொடி தாயத்து" என்று குழந்தைகளுக்கு கட்டிவிடுவார்கள்..

தொப்புள் கொடி: அதாவது பிறந்த குழந்தையின் வயிற்றில் சிறிதளவு தொப்புள் கொடி இருக்கவே செய்யும். இது காலப்போக்கில் காய்ந்து விழுந்து விடும். அந்த காய்ந்த தொப்புள் கொடியைத்தான், தாயத்துக்குள் வைத்து, அந்த குழந்தைகளின் கழுத்து, கை, இடுப்பு பகுதிகளில் கட்டுவார்கள். ஒருசிலர் தொப்புள் கொடியை காயவைத்து அரைத்து பவுடராக்கியும் தாயத்துக்குள் வைப்பார்கள்.
இதற்கு காரணம், அந்த குழந்தை வளர்ந்த பிறகு, ஏதாவது கொடிய நோய் தாக்கிவிட்டால், தாயத்துக்குள்ளிருக்கும் தொப்புள் கொடி பவுடரை, நீரில் கரைத்து தருவார்களாம்.. இதனால் அந்த கொடிய நோய் நீங்கிவிடுமாம். இதனை பலரும் மூடநம்பிக்கை என்றே கருத்து சொன்னார்கள்.
நோய் எதிர்ப்பு சக்தி: ஆனால், அந்த குழந்தை வளர்ந்தபிறகு, புற்றுநோய் போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள் வந்தாலும், தொப்புள் கொடியில் உள்ள செல்களை வைத்து எந்த நோயையும் குணப்படுத்திவிடலாம் என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
குழந்தை பிறந்ததுமே அதன் தொப்புள் கொடியிலுள்ள, சுமார் 80 மி.லி ரத்தம் தொப்புள் கொடி ரத்தம் (Umblical cord blood) என்பார்கள்.. இந்த ரத்தத்தில் ஏராளமான ஆதார செல்கள் (ஸ்டெம் செல்கள்) உள்ளன. இந்த ஆதார செல்களிலிருந்து உடலின் உறுப்புக்களை உருவாக்கலாம்...
ஆதார செல்கள்: இந்த ரத்த ஆதார செல்களை குழந்தை பிறக்கும்போது தொப்புள் கொடியிலிருந்து பிரித்தெடுத்து, பத்திரமாக வைத்து கொண்டால், ரத்த சம்பந்தமாக ஏற்படும் 80-க்கும் மேற்பட்ட நோய்களை குணமாக்கலாம். இந்த சேமித்த ஆதார செல்களை பயன்படுத்தி அந்த குழந்தையையோ அல்லது இது பொருந்தக்கூடிய மற்ற குழந்தையையோ குணமாக்கிவிடலாம். எனவேதான், பல தனியார் மருத்துவமனைகளில், குழந்தையின் பெற்றோர்களிடம் அனுமதி கேட்கப்பட்டு, அதற்கான தொகையும் தரப்பட்டு, பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை சேமித்து வைக்கிறார்கள்.
ஆனால், குழந்தையின் தொப்புள் கொடியை யார் வேண்டுமானாலும் வெட்டிவிட முடியாது.. அதேபோல, எல்லா குழந்தைகளுக்குமே இப்படி தொப்புள் கொடியை வெட்டுவது கிடையாது..
இதயத்துடிப்பு: குழந்தையின் அழுகை, இதயத்துடிப்பு, ஸ்பரிசம் போன்ற அனைத்துமே நார்மலாக இருக்கும்பட்சத்தில், கடைசியாகத்தான் தாயிடமிருந்து குழந்தையின் தொப்புள்கொடியை டாக்டர்கள் பிரிக்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, தொப்புள் கொடியை வெட்டுவதற்கு முன்பு, குழந்தையின் இதயத்துடிப்பில் வித்தியாசமான சத்தம் கேட்கிறதா? குழந்தைக்கு வேறு ஏதாவது பிரச்சனை உள்ளதா? என்பதையெல்லாம் துல்லியமாக அறிந்து, உறுதி செய்த பிறகே வெட்டுவார்கள்.
ஒருவேளை, பிறக்கும்போதே குழந்தைக்கு மஞ்சள்காமாலை பாதிப்பு வந்தால், தொப்புள்கொடி மூலமாகத்தான் ரத்த மாற்றம் செய்ய முடியும்.. அப்படி ரத்த மாற்றம் செய்யாவிட்டால் குழந்தைக்கு மூளை பாதிப்பு, வலிப்பு நோய் வரலாம். அதேபோல, குழந்தைகளுக்கு நரம்பு கிடைக்காமல், தொப்புள்கொடி வழியேதான் ஆன்டிபயாடிக் மருந்துகளை செலுத்த வேண்டிவரும். எனவே, தொப்புள் கொடி இருந்தால் மட்டுமே, அதிலுள்ள குழாய்கள் வழியாக மேற்கண்ட பணிகள் நடைபெறும்.
கிளவுஸ்: அப்படியே தொப்புள் கொடியை வெட்டுவதானால், வெட்டும் நபர் கட்டாயம் முகத்தில் மாஸ்க், கைகளில் கிளவுஸ் அணிந்திருக்க வேண்டும். சுத்தம், சுகாதாரத்துடன் வெட்டாவிட்டால், குழந்தைக்கு தொற்று ஏற்பட்டுவிடும். இத்தனை விஷயங்கள் உள்ளதால், மகப்பேறு மருத்துவர்கள் மட்டுமே தொப்புள்கொடியை வெட்ட முடியுமே தவிர, குழந்தையின் அப்பாவே என்றாலும், தொப்புள் கொடியை வெட்டக்கூடாது.. அது சட்டப்படி தவறு என்கிறார்கள்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications