"பச்ச வாழைப்பழம்" சாப்பிட்டால் நடக்கும் "அதிசயம்"..ஆமா, பச்சை வாழைப்பழம் சர்க்கரை நோயாளி சாப்பிடலாமா
சென்னை: பச்சை வாழைப்பழத்தை சாப்பிட்டால், உடல் எடை கூடுமா? சர்க்கரை நோயாளிகள் பச்சை வாழைப்பழம் சாப்பிடலாமா? என்று எத்தனையோ சந்தேகங்கள் வட்டமடிக்கின்றன. இதில் உள்ள சத்துக்கள் என்னென்னவென்று தெரிந்துகொண்டாலே, பச்சை வாழைப்பழத்தை தவிர்க்க மாட்டீர்கள்.
முதன்முதலாக, வடக்கு பசிபி பெருங்கடலில் உள்ள பப்புவா நியூ கினியில்தான் வாழைப்பழம் முதன்முதலாகத் தோன்றியதாம்.. ஆனால், நம் இந்தியாவில்தான் வாழைப்பழம் முதன்முதலில் தோன்றியது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்..
கி.பி.327-ல் அலெக்ஸாண்டரின் படைகள் நம்ம நாட்டுக்குள் நுழைந்தபோது, வாழைப்பழ டேஸ்ட்டில் மயங்கி விழுந்துவிட்டடார்கள்.. அதற்கு பிறகுதர்ன, ஐரோப்பிய நாடுகள், அடுத்தடுத்து உலக நாடுகள் என்று பரவியதாக வரலாறு சொல்கிறார்கள்... இன்று வாழைப்பழ ஏற்றுமதியில் உலகிலேயே நம்பர் 1 நாடு, நம்ம இந்தியாதான்.
பச்சை வாழைப்பழம்: இதில் பச்சை வாழைப்பழம் குறித்து நிறைய சந்தேகங்கள் உள்ளன.. பச்சை வாழைப்பழம், குடல் புண்களை ஆற்றி, அல்சர் போன்ற தொந்தரவுகளை அண்டவிடாமல் செய்கிறது. வாழைப்பழத்தை சாப்பிட்டால், உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.. இது ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்.. வாழைப்பழத்திலுள்ள பொட்டாசியம் ரத்த நாளங்களின் சுவர்களை ஆரோக்கியமாக வைக்கிறது...

அதேபோல், டயட்டில் இருப்பவர்கள், அல்லது உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், இந்த பச்சை வாழைப்பழத்தை சாப்பிடலாம் என்கிறார்கள்.. காரணம், இதில் ஆற்றல்கள் ஏராளமான இருக்கின்றன.. அதிக அளவு பொட்டாசியம் சத்து இருப்பதால், இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.. வைட்டமின் B6 உள்ளதால், நம்முடைய ஆக்ஸிஜனேற்றத்திற்கு பேருதவி புரிகிறது.. பற்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரிசெய்யவும் பச்சை வாழைப்பழமே முக்கிய உதவியாக இருக்கிறது.. அதனால்தான், குழந்தைகளுக்கும் பச்சை வாழைப்பழத்தை வாரத்திற்கு ஒருமுறையாவது தர வேண்டும் என்கிறார்கள்.
நோயாளிகள்: இதை சர்க்கரை நோயாளிகள், பச்சை வாழைப்பழம், செவ்வாழை, நேந்திரம் ஆகிய பழங்களை "குறைந்த அளவு" சாப்பிடலாம் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள்.. இதில் ஸ்டார்ச் சத்து அதிகமாக உள்ளதால், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, சர்க்கரையை கட்டுக்குள் கொண்டு வருகிறது..
இவை அனைத்திலும் உள்ள சிறப்பு என்னவென்றால், இதய ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை பயக்கும். குறிப்பாக பச்சை வாழைப்பழத்தை சாப்பிடுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால், அதிக கொலஸ்ட்ரால் இருப்பவர்களுக்கு மிகச்சிறந்த மருந்து இந்த பச்சை வாழைப்பழம்.. ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் அளவைக் குறைக்கிறது.
ரத்த நாளங்கள்: ரத்த நாளங்களில் படிந்திருக்கும் கொழுப்பு மூலக்கூறுகளை உருக்கி வெளியேற்ற உதவுகிறது. அதனால், கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள், பச்சை வாழைப்பழத்தை வேகவைத்து சாப்பிட்டால் பலன் கிடைக்கும் என்கிறார்கள். அதாவது, பச்சை வாழைப்பழத்தை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து, அதில் உப்பு, மிளகாய், கொத்தமல்லி தழை, வெங்காயம் சேர்த்து வதக்கி சாப்பிட்டு வந்தால், உடலில் அதிகரிக்கும் கொலஸ்ட்ராலை குறைக்க பேருதவி புரியுமாம்..
பச்சை வாழைப்பழத்திலேயே இவ்வளவு நன்மை என்றால், மஞ்சள் வாழைப்பழம், முதல் நேந்திரம் வாழைப்பழம் வரை அவ்வளவும் மருத்துவம்தான்.. முருங்கை மரம் எப்படி, வேர் முதல் இலை வரை நமக்கு, நன்மை புரிகிறதோ அதுபோலலே, வாழை மரத்தின் அனைத்து பாகங்களும் நமக்கு பேருதவி தந்து கொண்டிருக்கின்றன.
டாக்டர்கள் அட்வைஸ்: பொதுவான தகவல்களின் அடிப்படையில், எத்தனையோ மருத்துவ குறிப்புகள் இணையத்தில் சொல்லப்பட்டாலும், அவைகளை எல்லாம், மருத்துவ ஆலோசனையைப் பெற்றே, கடைப்பிடிக்க வேண்டும் என்பதே உண்மை. அதேசமயம், உணவுகளில் சில சந்தேகங்கள் எழுந்தாலும், அதையும் மருத்துவர்களின் ஆலோசனையை பெற வேண்டி உள்ளது. அந்தவகையில், பச்சை வாழைப்பழம் குறித்தும், டாக்டர்களை அணுகி, சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டால் நமக்கு நல்லது.
ஆனால், இயல்பாகவே வாழைப்பழங்களில் 60 விழுக்காடு நீர்ச்சத்து உள்ளதால் எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவாக இருக்கிறது.. இதைத்தவிர, கார்போஹைட்ரேட், புரதச்சத்து, புரதம், இரும்புச்சத்து, பொடாசியம், சோடியம், பாஸ்பரஸ் இப்படி எல்லா சத்துக்களும் வாழைப்பழத்தில் இருக்கின்றன.. 1 கிராம் பச்சை வாழைப்பழத்தில் 422 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளது. சுக்ரோஸ், பஃரக்டோஸ், குளுக்கோஸ் போன்ற சர்க்கரை சத்துக்களும் இதில் உள்ளதால், உடல் சுறுசுறுப்படைந்துவிடும்.
தள்ளுவண்டி: தினமும் ஒரு வாழைப்பழம் உண்டால் கர்ப்பிணி பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு நீங்கும். தினமும் நேந்திரம் பழம் சாப்பிட்டு வந்தால், உடல்பருமன் ஆகும் என்று, சித்த மருத்துவர் கு.சிவராமன் கூட அறிவுறுத்தியிருக்கிறார்.. ஆனால், ஏசி ரூமில் விற்கப்படும் பழங்களுக்கு தரும் முக்கியத்துவத்தை, தள்ளுவண்டியில் விற்கப்படும் இந்த வாழைப்பழத்துக்கு பலர் தருவதில்லை என்பது வேதனையான உண்மை..!!
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications