ஆடாதோடை இலை.. நுரையீரலின் "பாதுகாவலன்" ஆடாதொடை.. ஒரே இலைக்குள் பல ஆச்சரியங்களை தரும் ஆயுள் மூலிகை
சென்னை: பார்ப்பதற்கு, மாவிலை போலவே காணப்படும் இந்த ஆடாதோடையில் உள்ள மருத்துவம் வியக்கத்தக்கவை - போற்றத்தக்கவை - அப்படியென்ன மருத்துவம் உள்ளது இந்த மூலிகையில்?
இந்த ஆடாதோடை வளரும்போதே, சுற்றுசூழலுக்கு நன்மைதருபவை.. ஆம், எங்கு இந்த செடி வளர்கிறதோ, அங்கே கார்பன் டை ஆக்சைடை உள்வாங்கிக்கொண்டு, ஆக்சிஜனை அதிகளவில் வெளியிட்டு, மனித குலத்துக்கே நன்மையை தருகிறது. அதனால்தான், இதற்கு "ஆயுள் மூலிகை" என்று சிறப்பு பெயரே உண்டு.

பெயர்க்காரணம்: இந்த இலைகளை ஆடுகள் சாப்பிடாது.. ஆடு தொடாத இலை என்பதால்தான், "ஆடு தொடா" என்று பெயர் வந்திருக்கலாம் என்கிறார்கள். நம்முடைய கிராமப்புறங்களிலும் பாரம்பரிய வைத்தியத்தில் இந்த ஆடாதோடையை இன்றும் பயன்படுத்துகிறார்கள்.. சித்த மருத்துவத்தில் காய்ச்சல் நோய்களுக்காக செய்யப்படும் குடிநீர் வகைகளில், இந்த ஆடாதோடையை கட்டாயம் சேர்த்து வருகிறார்கள்.
சுவாசம் + நுரையீரல் என்றாலே இந்த ஆடாதோடையை தவிர்த்துவிட்டு யாராலும் பார்க்க முடியாது.. ரத்தத்தை சுத்திகரிப்பதில் இந்த மூலிகைக்கு நிறைய பங்கு உள்ளது. ஆஸ்துமா, இருமல் போன்ற பிரச்சனைகளை அண்டவிடாது.
அதிலும், நுரையீரலில் தேங்கியுள்ள சளியை அடியோடு நீக்கி விடும் இந்த ஆடாதோடை.. பார்ப்பதற்கு பசுமையாக இருந்தாலும், இந்த இலை கசப்பு தன்மை வாய்ந்தவை. இதன் இலை மட்டுமல்லாமல், பட்டை, வேர், பூக்கள் போல அனைத்து பாகங்களுமே மருத்துவ குணம் வாய்ந்தவை.
ஆடாதோடை: வயிற்றில் உள்ள புழுக்களை நீக்கி, வயிற்றை சுத்தப்படுத்துகிறது இந்த ஆடாதோடை.. இந்த ஆடாதோடை இலைகளை பொடியாக்கி, நீரில் கலந்து குடித்துவந்தால், தசை வலிகள் நீங்கிவிடும்.. எதிர்பாராதவிதமாக மார்பில் அடிபட்டுவிட்டால், இந்த ஆடாதோடை இலையுடன், 2 இரண்டு வெற்றிலைகளை மென்று சாப்பிட்டால், உடனே வலி குறையுமாம். அந்த நேரத்தில் கைகொடுத்து உதவக்கூடிய முதலுதவி இதுவாகும்.
ரத்த அழுத்தம்: ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இந்த ஆடாதோடை இலைகள் அருமருந்தாகும்.. இந்த இலையை நிழலில் உலர்த்தி பொடித்து, பிறகு, மெல்லிய வெள்ளை துணியில் சலித்து வைத்து கொள்ள வேண்டும்.. இந்த பவுடரை, 3 வேளையும், ஒரு ஸ்பூன் வீதம், 6 மாத காலம் சாப்பிட்டு, வெந்நீரை குடித்துவந்தால், நுரையீரல் பிரச்சனை, சைனஸ் பிரச்சனை, ஆஸ்துமா பிரச்சனை இப்படி அனைத்துமே நீங்கிவிடும்.

இந்த இலைகளை நன்றாக அலசி, தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால், ஜுரம், சளி, இருமல், உடல்வலி என எல்லாமே பறந்தோடிவிடும். காசநோயையும் விரட்டியடித்துவிடும் இந்த இலைகள்.. 48 நாட்களுக்கு இந்த ஆடாதோடா இலையை சாப்பிட்டால், T.B-யும் விலகிவிடும்..
அழியாத மருத்துவம்: ஆடாதோடை இலையில் இருந்து சாறு எடுத்து குடித்தால், எந்த அலர்ஜியும் நம்மை அண்டாது.. வயிற்றிலுள்ள பூச்சிகளும் அழிந்துவிடும்.. ஆடாதோடை இலைகள், காய்கள் போன்றவற்றை தண்ணீரில் சேர்த்து காய்ச்சி குடித்தால், சரும நோய்கள் பரவாது.. இந்த கொரோனா காலத்திலும், இந்த இலையை பயன்படுத்திக் கொண்டிருப்பதே இந்த மூலிகையின் மகத்துவத்துக்கு ஒரு சாட்சியாகும்..!!
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications