கானா வாழை.. பெண்களை வதைக்கும் வெள்ளைப்படுதலுக்கு சூப்பர் கீரை.. அம்மான் பச்சரிசி இலைகளின் ஆச்சரியம்
சென்னை: பெண்களுக்கு துன்பத்தை தரும் வெள்ளைப்படுதல் பிரச்சனை ஏன் ஏற்படுகிறது? இதற்கான எளிய தீர்வு என்ன? உணவு முறை மூலம் இதனை சரிசெய்ய முடியுமா? வெள்ளைப்படுதல் நோயை கட்டுப்படுத்த உணவுவகைகள் இருந்தாலும், 3 வகையான கீரைகளை பற்றி இங்கே பார்ப்போம்.
பெண்களின் பாலுறுப்பிலிருந்து திரவம்போல வெளியேறுவதையே வெள்ளைப்படுதல் என்கிறோம். இது வெள்ளை, மஞ்சள், சாம்பல், பச்சை, பழுப்பு போன்ற நிறங்களிலும் காணப்படும். கெட்டியான வெள்ளைப்படுதல் காணப்பட்டால், பல்வேறு சிக்கலை உடலில் ஏற்படுத்திவிடும். துர்நாற்றமும் நோய்த்தொற்றும் அதிகமாகும்..

கர்ப்பிணி பெண்கள்:
கர்ப்பிணி பெண்களுக்கும், வெள்ளைப்போக்கு ஏற்படும். எனவே, வயிற்றுவலி, ரத்தப்போக்கு இவையெல்லாம் இருந்தால், மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். அதுமட்டுமல்ல, துர்நாற்றத்துடன் வெள்ளைப்படுவது, உடலுறவிற்கு பிறகு ரத்தப்போக்கு இவையெல்லாம் புற்றுநோயின் அறிகுறியாகவும் இருக்கலாம்.. எனவேதான், கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான, "பேப்ஸ்மியர்" பரிசோதனைகள் அறிவுறுத்தப்படுகின்றன.
சாதாரண தண்ணீர் போன்ற வெள்ளைப்படுதல் இருந்தால், சத்தான உணவு மூலமே தீர்வு காணலாம். அந்தவகையில், கானா வாழை இலைகள் உதவுகின்றன. மாதவிடாய், வெள்ளைப்படுதல் கோளாறுகளுக்கு கானா வாழை இலைகள் தீர்வை தரக்கூடியவை.
கீழாநெல்லி:
மாதவிடாய் சமயங்களில் அதிக உதிரப்போக்கு இருந்தால், இந்த கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிடலாம். இந்த இலைகளுடன் சம அளவு கீழாநெல்லி இலைகளையும் சேர்த்து விழுதாக அரைத்து, தினமும் நெல்லிக்காய் அளவு 3 வேளை தயிரில் கலந்து சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் பிரச்சனை நீங்கும். அதேபோல, பெண்களின் மார்பகத்தில் கட்டிகள், வீக்கம் ஏற்பட்டால், இந்த செடியை அரைத்து பற்று போட்டால் நிவாரணம் கிடைக்கும்.
காசினி கீரை மிக முக்கியமானது. காசினி கீரையை வாரம் 2 முறையாவது உணவில் சேர்த்து சாப்பிடுவதால், மாதவிடாய், வெள்ளைப்படுதல் தொந்தரவுகள் விலகும்.. அல்லது காசினி பொடியை அரை ஸ்பூன் தேனில் குழைத்து 21 நாட்கள் வெறும் வயிற்றில் குடித்தாலும், வெள்ளைப்படுதல் குணமாகும்.
நன்னாரி இலைகள்:
அதேபோல, நன்னாரியின் இலைகளையும், அதன் வேர்களுடன் சேர்த்து பயன்படுத்தலாம், நன்னாரியின் முழு தாவரத்தையும் சுத்தம் செய்து, நெய்யில் வதக்கி, மிளகு, இந்துப்பு, புளி சேர்த்து, துவையலாக அரைத்து சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் பிரச்சனை தீரும்.. கொய்யா இலைகளையும் சுத்தமாக கழுவி நீரில் கொதிக்க வைத்து ஆறவைத்து குடிப்பதாலும், வெள்ளைப்போக்கு குறையும்.. கொடிபசலைக்கீரையையும் உணவில் பயன்படுத்தலாம்.
அம்மான் பச்சரிசி கீரையை பற்றி பலரும் அறிவதில்லை.. துவர்ப்பும், இனிப்பும் கலந்த இந்த கீரை பார்ப்பதற்கு பச்சரிசி போலவே காணப்படும்.. இதன் விதைகள் தோற்றத்திலும், சுவையிலும் அரிசிகுருணை போலிருப்பதால், இதற்கு பச்சரிசி கீரை, அம்மான் பச்சரிசி கீரை என்று பெயர் வந்ததாம். பிரசவித்த பெண்களுக்கு தரப்படும் ஒரே கீரை இதுதான். ஏனென்றால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கச் செய்யும் தன்மை இந்த கீரைக்கு உள்ளது.. அத்துடன் தொற்றுக்கிருமிகளையும் நெருங்க விடாது.
மாதவிடாய் தொந்தரவு:
இந்த அம்மான் பச்சரிசி இலைகளை நன்றாக விழுதாக அரைத்து, மோருடன் கலந்து குடித்து வர பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்த் தொந்தரவுகள், வெள்ளைப்படுதல் நீங்கும். அம்மான் பச்சரிசியை அரைத்துத் தயிரில் கலந்து சாப்பிட்டாலும், பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் நோய் கட்டுப்படும். அல்லது அம்மான் பச்சரிசி இலையை அரைத்து அரை டீஸ்பூன் அளவு விழுதை தண்ணிரல் கலந்து குடிக்கலாம்.












Click it and Unblock the Notifications