நரம்பு வலுப்பெற உதவும் மருதாணி இலை.. மருந்தாகும் மருதாணியை கர்ப்பிணி வைக்கலாமா? ஆரோக்கிய மருத்துவம்
சென்னை: மருதாணி இலைகளினால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? கர்ப்பிணிகள் மருதாணி வைக்கலாமா? கர்ப்ப காலத்தில் மருதாணி வைப்பதால், குழந்தைக்கு ஏதாவது தொந்தரவு வருமா? டாக்டர்கள் சொல்வதென்ன? சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
நம்முடைய உடலிலுள்ள அனைத்து நரம்புகளின் பிரதிபலிப்பு புள்ளிகளும், உள்ளங்கையில்தான் குவிந்துள்ளன. எனவேதான், உள்ளங்கையில் மருதாணி வைக்கப்படுகிறது. இந்த இலைகளை அரைத்து கைகளில் பூசுவதால், நரம்புகள் வலுவடைவதுடன், நரம்புகளின் செயல்பாடுகளும் தூண்டப்படுகின்றன.. உடலில் ரத்த ஓட்டம் சீராக பாய்கின்றன..

ரத்த ஓட்டம்: பெரும்பாலும் நீரிழிவு நோயாளிகளுக்கு நரம்புகள் பலவீனமாக இருக்கும். இதனால், கை, சரியான ரத்த ஓட்டம் இல்லாமல், பாதங்களில் எரிச்சல், குடைச்சல் ஏற்படும். டீ, காபி குடிப்பதால் பித்தம் அதிகமாகிவிடும். பித்தம் அதிகமானால் மனநிலை சிதறல், மனநோய் போன்றவை ஏற்படாமல் இருக்க, நம்முடைய முன்னோர்கள் மருதாணி வைக்கும் பழக்கத்தை கொண்டுவந்துள்ளனர்.
வெறுமனே ஒரு கைப்பிடி மருதாணி எடுத்து, கழுவி சுத்தம் செய்து, தண்ணீரில் கொதிக்க வைத்து, இரவு உணவுக்கு பிறகு குடித்து வந்தால் ரத்தம் தூய்மையாகும். பெண்களுக்கு அதிகமான உதிரப்போக்கு இருந்தாலும் கட்டுப்படும்.. நகச்சுத்தி, சேற்றுப்புண், பாதஎரிச்சல், கால் ஆணிகளுக்கு மருதாணியே மருந்தாகின்றன. மருதாணியின் வேர் பட்டையை அரைத்து பாலில் கலந்து காலையில் குடிப்பதால, அதிக ரத்தப்போக்கு கட்டுப்படும்..
செயற்கை மருதாணி: அதேசமயம், கர்ப்ப காலத்தில், பெண்கள் மருதாணி வைக்கலாமா? என்ற சந்தேகம் எழும்.. அப்படி மருதாணி வைப்பது குழந்தையை பாதிக்கும் என்றும் தகவல்கள் உள்ளன.. ஆனால், மருதாணி வைப்பால், வயிற்றிலுள்ள குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை என்று சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.. அறிவியல் ரீதியாகவும் எதுவும் மெய்ப்பிக்கப்படவில்லையாம்.
செயற்கையாக விற்கப்படும், மருதாணியை பூசினாலும், சரும பிரச்சனைகள்தான் வருமே தவிர, ரத்த ஓட்டத்தை பாதிக்காது, தொப்புள் கொடியை கடந்து குழந்தையையும் பாதிக்காது. என்கிறார்கள்.
கர்ப்பகாலம்: எனினும், பாரா-ஃபெனிலினெடியமைன் (PPD) போன்ற ரசாயன சேர்க்கைகளுடன் மருதாணியை, கர்ப்பகாலத்தில் தவிர்த்துவிட்டு, முடிந்தவரை இயற்கையான மருதாணியை பயன்படுத்துவது நல்லது என்றும் அறிவுறுத்துகிறார்கள்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications