அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கால் மரத்து போவது ஏன்? பைபாஸ் செய்தால் இப்படி ஆகுமா?
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி தனக்கு கால் மரத்து போவதாக நீதிபதியிடம் குறிப்பிட்டுள்ள நிலையில் கால் ஏன் மரத்து போகுது என்பதை பார்ப்போம்.
சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து அவர் நேற்றைய தினம் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது அவரது நீதிமன்றக் காவல் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை நீடித்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார். மேலும் ஜாமீன் மனுவை விசாரிக்க அதிகார வரம்பு இல்லை என நீதிமன்றம் கூறிவிட்டது.
அப்போது நீதிபதியிடம் தனக்கு அடிக்கடி கால் மரத்து போவதாக செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார். இதய நோய் அறுவை சிகிச்சை செய்துள்ள செந்தில் பாலாஜிக்கு ஏன் கால் மரத்து போகிறது என்பதை பார்ப்போம். அடிக்கடி கால்கள் மரத்து போகிறது என்றால் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பதாலும் இது நிகழும்.
அது போல் இரும்புச் சத்துக் குறைபாட்டால் ஆண்களை காட்டிலும் பெண்கள் தான் கால் மரத்து போகும் விஷயத்தில் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் பெண்களின் ஹீமோகுளோபின் அளவு எப்போதும் குறைவாகவே காட்டுகிறது. எனவே கால் மரத்து போகிறது என்றால் இரும்பு சத்து உள்ள உணவை உட்கொள்ள வேண்டும். அது போல் உடல் சோர்வு ஏற்பட்டு சோம்பேறித்தனமாக இருக்கும்.
இதுவும் இரும்பு சத்து குறைபாட்டிற்கு முக்கிய அறிகுறியாகும். ரத்த ஓட்டம் இல்லாததால் உதடு, விரல், நகங்கள் நன்கு வெள்ளை நிறத்தில் இருக்கும். படிக்கட்டு ஏறினால் மூச்சு வாங்குவது, நடந்தால் மூச்சு வாங்குவது என இருந்தாலும் இரும்பு சத்து குறைபாட்டின் காரணமாகத்தான். அது போல் வழக்கத்திற்கு மாறாக இதய துடிப்பு வேகமாக இருந்தாலும் அதற்கு இரும்பு சத்து குறைபாடுதான் காரணம்.
ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருந்தால் இதயம் ஆக்ஸிஜனை வெளியிட கூடுதலாக வேலை செய்ய வேண்டும். இதனால்தான் இதயம் வேகமாக துடிக்கும். கால்களில் ஷாக் அடித்தது போல் மரத்த நிலையில் இருந்தால் அதுவும் இரும்புச் சத்து குறைபாடுதான் காரணம். இதற்காக பேரீச்சம் பழம், உலர் திராட்சை, வாழைப்பழம், பெர்ரி பழங்கள், வால்நட், பாதாம், முந்திரி, ஆளி விதைகள், வெண்ணெய், ஆலிவ், கேழ்வரகு உள்ளிட்டவற்றில் இரும்பு சத்து அதிகம் இருக்கிறது.
அது போல் கீரை, பச்சை மிளகாய், பிரக்கோலி, உருளைக் கிழக்கு, பயறு வகைகள், பீன்ஸ், பட்டாணி, ஆட்டு ஈரல், டார்க் சாக்லேட் உள்ளிட்டவைகளிலும் இரும்புச் சத்து அதிகமாக இருக்கிறது. இரும்பு சத்து குறைபாட்டிற்கு மருந்து மாத்திரைகளை உட்கொள்ளாமல் இது போல் இயற்கையான காய்கள், பழங்களை உட்கொள்ளலாம்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications