தமிழ் புத்தாண்டு..சித்திரை முதல்நாளும் அம்மா வைத்த வேப்பம்பூ ரசமும்..ருசியோடு ஆரோக்கியமும் இருக்கு!
சென்னை: நம்முடைய அம்மாவின் சமையல் ருசிக்காக மட்டுமல்ல ஆரோக்கியத்தோடும் தொடர்புடையது. பண்டிகை நாட்களில் அம்மா செய்யும் தனித்துவம் மிக்க சமையல், பலகாரங்கள் நமக்கு ஆரோக்கியத்தையும் தரக்கூடியது. அப்படித்தான் தமிழ் புத்தாண்டு நாளில் மாங்காய் பச்சடியும், வேப்பம்பூ ரசமும் செய்து அறுசுவையோடு சத்தான உடல் நலத்திற்கு ஏற்ற உணவையும் கொடுப்பார்கள். தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் இன்றைய நேரத்தில் வேப்பம்பூவின் பயன்களை அறியலாம்.
சித்திரை கனி காண்பது தமிழ் புத்தாண்டின் முக்கியமான வழிபாடாகும். இதை செய்பவர்கள் வீட்டில் செல்வம் பெருகும் என்பார்கள் நம்முடைய பெரியோர்கள். மா, பலா, வாழைப்பழம் ஆகிய முக்கனிகளுடன் மற்ற கனிகளையும், பணம் நகைகளை தட்டில் வைத்து கொள்ள வேண்டும். காலை எழுந்து கண்ணாடி பார்த்த பிறகு கனிகள் இருக்கும் தட்டை பார்க்க வேண்டும். இது மலையாள மக்களிடம் இருந்து தமிழ்நாட்டு மக்களுக்கு வந்தது என்றாலும் நல்லதை யார் கற்றுக்கொடுத்தாலும் நாம் அதை பின்பற்றுவதில் தவறில்லை.

அதிகாலை நேரத்திலோ, பகலிலோ இப்படி படைத்து வழிபட முடியாதவர்கள் மாலை 6 மணிக்கு பின்னர் விளக்கேற்றி வழிபடலாம். கிட்டத்தட்ட 8 மணி வரை தமிழ் புத்தாண்டின் வழிபாட்டை செய்யலாம். தமிழ் புத்தாண்டில் அரிசி, உப்பு, மஞ்சள், வெல்லம் ஆகியவற்றில் ஒன்றையாவது வாங்கி சுவாமி படங்களுக்கு முன்பாக வைத்து வழிபட வேண்டும் இப்படி வழிபட்டால் ஆண்டு முழுவதும் வீட்டில் செல்வமும் மகிழ்ச்சியும் தங்கும் என்பது நம்பிக்கை.
பண்டிகை நாட்களில் இறைவனை வழிபடுவதுடன் சுவையான உணவும் சமைத்து சாப்பிடுவது வழக்கம். அந்த உணவில் சத்துக்களும், ஆரோக்கியமும் நிறைந்திருக்குமாறு அம்மா பார்த்துக்கொள்வார்கள். முக்கியமாக தமிழ் புத்தாண்டு நாளில் வேப்பம்பூ ரசமும் மாங்காய் பச்சடியும் சமைப்பார்கள்.
சித்திரை மாதத்தில் வேப்பம்பூ பூத்து வசந்த காலத்தை உலகிற்கு அறிவிக்கும். வேப்பம்பூக்கள் காற்றில் ஒருவித நறுமணத்தை பரப்பிக் கொண்டிருக்கும். கிருமி நாசினியான வேப்பம்பூவில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. வேப்பம் பூ உடலில் உள்ள கெட்ட கிருமிகள் அனைத்தையும் அழித்து விடும் ஆற்றல் கொண்டதாகும்.
வேப்பம் பூவுக்கு ஜீரணத்தை அதிகரிக்கும் சக்தி உண்டு. எனவேதான் வேப்பம் பூக்களில் ரசம் வைத்து சாப்பிட கொடுக்கின்றனர். கொதிக்க வைத்த நீரில் வேப்பம் பூவை போட்டு ஆவி பிடித்தால் தலைவலி, காது வலி நீங்கும் அஜீரணக்கோளாறு, வயிறு சம்பந்தமான பிரச்சனை மற்றும் மலச்சிக்களால் அவதி படுபவர்களுக்கு வேம்பு தேநீர் வைத்து கொடுத்தால் அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வெயிலால் ஏற்படும் நாவறட்சி, தோல் வியாதி, அரிப்பு, வயிற்றுப்பிரட்டல் போன்ற பிரச்சினைகளுக்கு வேப்பம்பூ சிறந்த மருந்தாகின்றது. கபம், பித்தம் சம்பந்தப்பட்ட வியாதிகளை வேப்பம்பூ கட்டுப்படுத்தும். குடலில் தங்கியுள்ள கிருமிகளை அழிக்கும் ஆற்றல் வேப்பம்பூவுக்கு உண்டு.
வாயுத்தொல்லை, ஏப்பம் அதிகமாக வருதல், பசியின்மை போன்றவைகளுக்கு வேப்ப மரத்தின் பூக்களை மென்று தின்றால் நல்ல பலன் கிடைக்கும். வேப்பம் பூவை வெயிலில் காயவைத்துப் பொடி செய்து பருப்புப் பொடியுடன் சேர்த்து சாதத்துடன் கலந்து சாப்பிட்டால் வாந்தி, ஏப்பம், பித்தம் நீங்கும். வயிற்றுக்கோளாறு உள்ளவர்கள், மண், சாக்பீஸ், விபூதி சாப்பிடும் வழக்கமுள்ள குழந்தைகளுக்கு வேப்பம் பூ கஷாயம் கொடுத்தால் வயிறு சுத்தமாகும்
தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலில் வேப்பம்பூ முக்கிய பங்கு வகிக்கிறது. வாழ்வில் ஏற்றமும், இறக்கமும் தவிர்க்க முடியாதது. இனிப்பும், கசப்பும் சேர்ந்து வரும் என்பதை உணர்த்தும் விதமாகவே வேப்பம்பூ பச்சடி, வேப்பம்பூ ரசம் வைக்கப்படுகிறது. என்ன வாசகர்களே..இன்னைக்கு உங்க வீட்ல மறக்காமல் வேப்பம்பூ ரசம் வைத்து சாப்பிடுவீர்கள்தானே.
-
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்!












Click it and Unblock the Notifications