கானாவாழை கீரை.. பற்களின் ஆரோக்கியத்துக்கு சூப்பர் இலைகள்.. பளிச் பற்களுக்கு இந்த கீரைகள் போதுமே
சென்னை: பளிச்சென பற்கள் வேண்டுமென்பது பலருக்குமே பெரிய ஆசையாக இருக்கிறது.. எனினும், சில சமயம், கறைகள் பற்களில் தங்கிவிடும்.. வெண்மை பற்களை பெறுவதற்கு நாம் சில டிப்ஸ்களை வீட்டிலேயே முயற்சி செய்து பார்க்கலாம். அந்தவகையில், சில இலைகள் நமக்கு உதவுகின்றன. இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
பற்களில் கூச்சத்திற்கும், பற்களில் கறை படிவதற்கும் நிறைய காரணங்கள் இருக்கலாம்.. பல் கறைகளை எடுத்துக் கொண்டால், பற்களை சரியாக துலக்காவிட்டாலும், அல்லது சாப்பிட்ட பொருள்கள் பற்களில் தேங்குவதாலும், மஞ்சள் அல்லது பழுப்பு நிற கறைகள் ஏற்பட்டுவிடும்.

இந்த கறைகளை உடனடியாக நீக்காவிட்டால், பாக்டீரியாக்கள் உற்பத்தி அதிகமாகி, பற்கள் மற்றும் ஈறுகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை அதிகரித்து விடும் அபாயம் உண்டு. எனவேதான், கறை படிய துவங்கும்போதே, இதை சரிசெய்துவிட வேண்டும். இதற்கு வீட்டு மருத்துவம் கை கொடுக்கிறது.. உணவு முறையிலும், சில காய்கள், பழங்களை அதிகமாக சேர்த்து கொள்ள வேண்டும்.
இலைக்கீரைகள்: அதேபோல, கீரைகளையும் உணவில் சேர்த்து கொள்ளலாம். பெரும்பாலான இலை கீரைகளில் கால்சியம், ஃபோலேட் மற்றும் வைட்டமின்கள் A, C, K, போன்ற முக்கிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகம் உள்ளதால், உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ள வேண்டும்.
வேப்பிலைகளை எடுத்துக் கொண்டால், ஆன்டி பாக்டீரியல் குணம் நிறைந்துள்ளது. பற்களின் பாதுகாப்பிற்கும், ஈறுகளில் உண்டாகும் கோளாறுகளை குணப்படுத்தவும், வாய் சுகாதாரத்தை எந்நேரமும் பராமரிக்கவும் வேப்பிலைகள் உதவுகின்றன.. ஆலும், வேலும் பல்லுக்குறுதி என்பதுபோல, ஆலமரம், வேப்ப மரத்தின் குச்சிகளால் நம்முடைய முன்னோர்கள் பல் துலக்கி வந்தனர்.
வேப்பிலைகள்: 4 வேப்பிலை இருந்தாலே, மஞ்சள் பற்களே காணாமல் போய்விடும்.. வேப்பிலையில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அடங்கியுள்ளதால், பற்களில் தேங்கி கிடக்கும் பாக்டீரியாக்களை அழித்து பற்களை வெண்மை நிறமாக்கும். இதன்காரணமாகவே பெரும்பாலான டூத் பேஸ்ட்களில், வேப்பிலை மூலப்பொருட்களாக சேர்க்கப்படுகின்றன.
அடுத்ததாக, பற்களை ஆரோக்கியமாக வைக்க கொய்யா இலைகள் உதவுகின்றன. இந்த இலைகளில் நுண்ணுயிர் எதிர்ப்பு, வலி நிவாரணி, அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்திருக்கின்றன.. எனவே, கொய்யா இலையை நன்றாக மென்று வெந்நீரில் வாய் கொப்பளித்து வரலாம்.. பல்கூச்சத்தை போக்கவும் இந்த கொய்யா இலைகளை மென்று வரலாம்.கொய்யா இலைகள் 4 எடுத்து நன்றாக கழுவி பிறகு 1 முதல் 2 நிமிடங்கள் பற்களில் படும்படி மென்று உமிழ்ந்து வரலாம்.
ஆன்டி பாக்டீரியல் குணம் கொண்ட துளசியின் இலைகளை நசுக்கி பற்களிடையே வைத்துக்கொண்டால் பற்கள் இயற்கை முறையில் வெண்மை பெறும்.. துளசி இலைகளால் ஒட்டு மொத்த வாய்ப் பகுதியும் ஆரோக்கியமடையும்.
துளசி இலைகள்: துளசியில் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன.. இந்த இலையிலிருந்து சாறு எடுத்து, வாய் கழுவலாம்.. அல்லது இலைகளை மென்று சாப்பிட்டாலே போதும், பற்களில் படிந்திருக்கும் பாக்டீரியாக்கள் பறந்துவிடும்.. வாய் துர்நாற்றமும் நீங்கிவிடும்.
கானா வாழை இலைகளையும் பற்கள் ஆரோக்கியத்துக்கு உறுதுணையாகின்றன.. வெறுமனே இந்த இலைகளை பறித்து, தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து வாய் கொப்பளித்தாலே, வாய்ப்புண்கள் ஆறிவிடும்.. பற்களிலும், தொண்டையிலும் கிருமிகள் இருந்தாலும் அழிந்துவிடும்.. அல்லது வெறும் கானா வாழை இலைகளை பறித்து, கொதிக்க வைத்து குடித்தாலும் பலன்தரும்.
தூதுவளை: தூதுவளையின் இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன்கள் கொண்டவை.. ஏராளமான கால்சியம் சத்துக்கள் இந்த இலையில் உள்ளதால், எலும்புகள் மட்டுமல்லாமல, பற்களையும் சேர்த்தே பலப்படுத்துகிறது.. இதனால் பற்களின் ஆரோக்கியம் அதிகமாகிறது. வாரம் 2 முறையாவது தூதுவளையை உணவில் சேர்த்து கொண்டாலே தேவையான கால்சியம் உடலுக்கு கிடைத்துவிடும்.












Click it and Unblock the Notifications