மளிகை பொருளை நோட் பண்ணுங்க.. கிச்சனில் கண்டிப்பாக இருக்க வேண்டிய 5 சூப்பர் கமகமக்கும் மசாலா
சென்னை: சில அத்தியாவசிய பொருட்கள் நம்முடைய சமையலறையில் எப்போதுமே குறைவின்றி இருக்க வேண்டுமாம்.. இவை அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தவையாகும். அதில் ஒருசிலவற்றை பார்ப்போம்.
மஞ்சள் - முதன்மையான மற்றும் முக்கியத்துவம் பெறுகிறது.. மசாலா பொருட்களின் அரசன் என்றே இதனை சொல்வார்கள்.. ஆண்டிபயாடிக் நிறைந்த பொருள்.. இதிலுள்ள குர்குமின் என்ற பொருள் அழற்சி எதிர்ப்பு விளைவுகளால் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்கிறது..

புற்றுநோய்: அனைத்து வகையான புற்றுநோய்களையும் எதிர்த்து போராடுகிறது. இறைச்சி முதல் எந்த சமையல் செய்தாலும், மஞ்சளை கட்டாயம் சேர்க்க வேண்டும். பசுவின் நெய்யில் இந்த மஞ்சளை சேர்த்து சாப்பிடும்போது, சுவாச கோளாறுகளும் தீர்கிறது.
அடுத்ததாக மிளகு சொல்லலாம்.. மிளகில் மக்னீசியம், இரும்பு, வைட்டமின் K, நார்ச்சத்துக்கள், ஆக்ஸிஜனேற்றிகள், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அதிகமாக காணப்படுகின்றன.. அஜீரணக்கோளாறுகளை தீர்ப்பதில் முதன்மையானது மிளகுதான். உடலை நச்சுக்களிலிருந்து காப்பாற்றி, புற்றுநோயிலிருந்தும் விடுவிக்க உதவுவதும் இந்த மிளகுதான்.
மிளகு: மிளகில் உள்ள பைப்பரின் என்ற சேர்மம், நம்முடைய உடலிலுள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க செய்கிறது. இந்த மிளகில் டீ போட்டு குடிப்பதால், கொழுப்புகள் குறைவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்..
சீரகம் தவிர்க்க முடியாத பொருளாகும்.. செரிமானத்திற்கு உதவுகிறது.. ரத்தத்தை சுத்திகரிக்கிறது. எல்லா உணவுகளிலும் சீரகம் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும். தினமும் சீரகத்தை உணவாக எடுத்து கொண்டோமானால், எடை அதிகரிப்பு தொடர்பான காரணிகளை நிர்வகிக்க அது உதவும்... உடலிலுள்ள கொழுப்புகளை விரைவாக கரைக்கும் தன்மை இந்த சீரகத்துக்கு அதிகம் உள்ளது..

சீரகம் தண்ணீர்: சீரகத்தை தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்துவிட்டு, மறுநாள் காலையில் அந்த தண்ணீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, 2 வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வந்தால், உடல் எடை குறைவதில் மாற்றம் தென்பட ஆரம்பிக்கும்.. சீரக தண்ணீர் மிக குறைந்த கலோரி உள்ள பானம் என்பதால், வெறும் வயிற்றில் குடிக்கும்போது, ஆரோக்கியமானதாக மாறுகிறது.
கடுகை உணவில் சேர்த்து கொள்வதால், செரிமானம் அதிகமாகிறது.. வயிற்றிலுள்ள பூச்சிகள் அழிக்கக்கூடியது.. இதயத்திற்கு கடுகு நல்லது என்கிறார்கள். மார்பகம், நுரையீரல், பெருங்குடல் ஆகிய பகுதிகளில் புற்றுநோய்களை ஏற்படாமல் தடுக்கிறது. கடுகை பயன்படுத்தினால், கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்துவதுடன், உடல் எடை குறைக்கவும் உதவுகிறது. இருமலை கட்டுப்படுத்தக்கூடியது.. ஒற்றை தலைவலியை போக்கக்கூடியது..
கடுகு விதைகள்: ரத்தத்தை சுத்தப்படுத்தக்கூடியது.. ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தக்கூடியது. மாதவிலக்கு பிரச்சனையை தீர்க்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், கழிவுகளை எளிதாக வெளியேற்ற உதவுகிறது.
வலுவான எலும்புகள் மற்றும் பற்களை பராமரிக்கிறது. கோடை காலங்களில் உடலில் ஏற்படும் கட்டிகள் வந்துவிட்டால், அதற்கு கடுகு அரைத்து பூசுவார்கள்.. விஷப்பூச்சிகள் கடித்துவிட்டால், அந்த விஷத்தை முறிக்கும் தன்மை இந்த கடுகுக்கு உண்டு.
மல்லி விதைகள்: கொத்தமல்லி விதைகள் என்று சொல்லக்கூடிய தனியாவில், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் மாங்கனீசு ஆகியவற்றின் நன்மைகள் ஆதாரமாக இருக்கின்றன.. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து, கொழுப்பு மற்றும் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது. பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்த்து போராடும் தன்மை கொண்டது கிராம்பு. இருமல் மற்றும் சளி குணப்படுத்தவும் உதவுகிறது. கிராம்பில் 'யூஜெனோல்' காணப்படுவதால், புற்றுநோய்க்கு எதிராக செயல்படுகிறது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications