மட்டனில் ரசம்.. ரத்த சோகையை ஓட்டும் பெஸ்ட் சூப்.. அவசியமான ஆட்டுக்கறி சத்து.. சூப்பர் உப்புக்கண்டம்
சர்க்கரை நோயாளிகள், வயதானவர்கள், உடல் எடை அதிகம் உள்ளவர்கள், இதய நோயாளிகள், ரத்த அழுத்தம் பிரச்சனை இருப்பவர்கள், ஆட்டுக்கறியை தொடவே கூடாது. அதேசமயம், உடல் ஆரோக்கியம் மிக்கவர்கள், குழந்தைகள், இளைஞர்கள் என உடலுழைப்பில் இருப்பவர்கள் மாதம் ஒருமுறையாவது மட்டனை சாப்பிடலாமாம் என்று உணவு நிபுணர்கள் கூறுகிறார்கள்.
சத்துக்கள்: இதற்கு காரணம், மட்டனில், வைட்டமின் B12, நியாசின், இரும்பு, செலினியம் சத்துக்கள் உள்ளன. அத்துடன், மற்ற இறைச்சி வகைகளோடு ஒப்பிடும்போது, ஆட்டிறைச்சியில் அதிக இரும்புச்சத்து உள்ளதால், மட்டனை தவிர்க்க கூடாது என்கிறார்கள்.

அதேசமயம், அதிக மசாலா, அதிக எண்ணெய் பயன்படுத்தி மட்டனை சமைப்பது, ஆபத்தை விலைக்கு வாங்குவதற்கு சமமாகிவிடும். எனவே, மட்டனை கிரில் செய்தோ அல்லது ஆவியில் வேகவைத்தோ சாப்பிடுவது நல்லது.. அல்லது மட்டனிலுள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்க வேண்டுமானால், ரசம், சூப் போல வைத்து குடிக்கலாம்... இல்லாவிட்டால், உப்புகண்டம் சமைத்து சாப்பிடலாம். இதனால், முழு சத்துக்கள் ஆரோக்கியமான முறையில் கிடைக்கும் என்கிறார்கள்.
மட்டன் ரசம்: மட்டன் ரசம் எப்படி வைப்பது தெரியுமா? ஒரு குக்கரில் சுத்தம் செய்த மட்டனில், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, 2 கப் தண்ணீரை ஊற்றி நன்றாக வேகவைத்து எடுத்து கொள்ள வேண்டும். இப்போது, மட்டனிலுள்ள சூப் மட்டும் தனியாக எடுத்து கொள்ள வேண்டும்.
இப்போது ஒரு மிக்சியில் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு, சீரகம் போன்றவற்றை விழுதாக அரைத்து கொள்ள வேண்டும். ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை, சோம்பு தாளித்து, தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்..
மட்டன் விழுது: பிறகு அரைத்து வைத்துள்ளதை விழுதையும் கொட்டி வதக்க வேண்டும்.. பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறிவிட்டு, மட்டன் சூப்பை இதில் கொட்டி கொதிக்க விட வேண்டும். தளதளவென சூப் கொதித்ததும், கொத்தமல்லியை தூவினால், மட்டன் ரசம் தயார்.. குக்கரில் வேகவைத்து எடுத்த மட்டனில், மசாலா குறைவாக வைத்து குழம்பு, அல்லது கிரேவி செய்து கொள்ளலாம்.
உப்புக்கண்டம் செய்வதற்கு, மட்டன் துண்டுகளை நன்றாக கழுவி கொள்ள வேண்டும். இதில், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மட்டனில் கொட்டி கலக்க வேண்டும்..
உப்புக்கண்டம்: இதை சிறிது நேரம் ஊறவைக்க வேண்டும். மசாலா நன்றாக இறங்கியதும், ஒரு சணலில் அல்லது தடித்த நூலில் கோர்த்து வெயிலில் காய வைக்க வேண்டும்.. நாட்கள் நாட்கள் கழித்து, உலர்ந்த இந்த கறியை ஒரு டப்பாவில் போட்டு வைத்து கொள்ளலாம். தேவைப்படும்போது, உப்புக்கண்டத்தை எடுத்து லேசாக தட்டி, எண்ணெய்யில் வறுத்து சாப்பிடலாம்.












Click it and Unblock the Notifications