கொத்து கொத்தா உதிருதா.. தலைமுடி ரொம்ப கொட்டுதா.. இதை செய்து பாருங்க..கருகரு முடிக்கு சூப்பர் டிப்ஸ்
சென்னை: இன்றைய சூழலில், தலைமுடி கொட்டுவது என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.. இதற்கென்று எளிய தீர்வுகள் நம்மிடமே உள்ளன. அந்தவகையில், சில டிப்ஸ்களை பார்ப்போம்.
ஹார்மோன்கள் குறைபாடுகள், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடுகள், ஹீமோகுளோபின் பிரச்சனைகள் இருந்தால், தலைமுடி கொட்டுவது அதிகரிக்கும்.. மன அழுத்தம் காரணமாகவும் முடி கொட்டலாம்.. பிசிஓடி எனப்படும், நீர்க்கட்டிகள் பிரச்சனைகள் இருந்தாலும், முடி கொட்டலாம். அதிகமாக உடலில் உஷ்ணம் ஏற்பட்டுவிட்டாலும், முடி கொட்டலாம்.

உணவுமுறைகள்: ஆரோக்கியமான உணவு + மகிழ்வான மனநிலை + போதுமான உறக்கம் போன்றவையே தலைமுடி வளர்ச்சியை தீர்மானிக்கின்றன. இதில், கீரைகள் முதலிடத்தை பிடிக்கின்றன.. அதிலும் முருங்கைக்கீரையையும், கறிவேப்பிலையையும் எந்த காரணம் கொண்டும் தவிர்க்க கூடாது.
முருங்கைக் கீரை ஒரு கைப்பிடி எடுத்து, ஒரு கப் தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ள வேண்டும்.. அதை வடிகட்டி, எலுமிச்சை பழச்சாறு, தேன் சேர்த்து கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். அல்லது இரவு உணவு சாப்பிட்ட அரை மணிநேரம் கழித்துக் குடிக்கலாம்.. அதேபோல, முருங்கை ஈர்க்குகளை அதாவது முருங்கை குச்சிகளை, முருங்கையின் பூக்களுடன் சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வரலாம்.
வெங்காய சாறு: வெங்காயத்தை நீரில் போட்டு வேகவைத்து, பிறகு அந்த நீரில் தலைமுடியை அலசிவர வேண்டும்.. அல்லது வெங்காயத்தை ஜூஸ் போல எடுத்து, தலைமுடிக்கு மசாஜ் செய்து ஊறவைத்து குளிர்ந்த நீரில் அலசி வந்தாலும் முடி கொட்டுவது நிற்கும்.. அல்லது மாதம் ஒருமுறை, ஒருகிளாஸ் பீரில் தலைமுடியை மசாஜ் செய்து அலசலாம்.. அல்லது வினிகரையும், தண்ணீரில் கலந்து தலைமுடிக்கு தடவி மசாஜ் செய்யலாம்.
கற்றாழை: கற்றாழை ஜெல்லை அரைத்து தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து குளித்தாலும் தலைமுடி உறுதியாகும். தேங்காய் பாலுடன், பச்சை கற்பூரவல்லி இலையை சேர்த்து, வெயிலில் காயவைத்து, தலைமுடியில் பூசிவந்தால், முடி அடர்த்தியாக வளரும்..
அதேபோல, கரிசலாங்கண்ணி, ஆவாரம்பூ இந்த இரண்டையும் அரைத்து உலர வைத்து, பிறகு, தேங்காய் எண்ணெயில் கலந்து, மிதமான சூட்டில் காய்ச்சி தலைக்கு தேய்த்து குளித்து வந்தாலும் மிகுந்த பலன் தரும..
வெள்ளை கரு: முட்டையின் வெள்ளைக்கரு, சிறுவால்மிளகு இரண்டையும் அரைத்து தலைக்கு தேய்த்து குளிக்கலாம்.. முட்டை + தேங்காய் எண்ணெய் + சிறிது வெந்தய பொடி போன்றவற்றை நன்றாக குழைத்து தலையில் வேர்க்கால்கள் வரை தேய்த்து மசாஜ் செய்து குளித்து விடலாம்.. அல்லது கற்றாழை ஜெல் + முட்டையின் வெள்ளை கரு + தேங்காய் எண்ணெய் போன்றவற்றை மிக்ஸ் செய்து தலைக்கு தடவி மசாஜ் செய்து குளிக்கலாம்.
வாரம் ஒருமுறை வெண்ணெய்யை தலைக்கு தடவி ஒரு மணி நேரம் கழித்து கழுவி வந்தாலும் முடி நன்றாக வளரும். கறிவேப்பிலை + சின்ன வெங்காயம் இரண்டையும் நன்றாக அரைத்து, தயிருடன் சேர்த்து, தலைக்கு குளித்து வரலாம்.
வெந்தயம்: அல்லது, இளநீர் + ரோஸ் வாட்டர் இவைகளை ஒன்றாக கலந்து, முடியின் வேர்களில் மசாஜ் செய்து, 30 நிமிடங்களுக்கு ஊறவைத்து அலசினால் போதும். மொத்தத்தில் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அதுவும் வெந்தயம் ஊற வைத்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மிகுந்த பலன் கிடைக்குமாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications