கற்பூரவள்ளி பெஸ்ட்.. வாழையில் ஒளிந்துள்ள அதிசயம்.. ஒரு கொத்து திராட்சை போதும்.. ஹீமோகுளோபின் ஏறிடும்
சென்னை: அனைத்து பழங்களுமே, உடலுக்கு சக்தியை தருவதுடன், ரத்தவிருத்தியையும் அதிகரிக்க செய்கிறது என்றாலும், 2 வகையான பழங்களின் பயன்களை பார்ப்போம்.
முதலாவதாக, கற்பூரவள்ளி வாழைப்பழத்தை சொல்லலாம்.. தேன் வாழைப்பழம் என்று இதை சொல்வார்கள்... பார்ப்பதற்கு சிறிய பழமாக இருந்தாலும், அதிக சத்தும், அதிக ருசியும் கொண்ட பழமாகும்..
வாழைப்பழங்கள்: மற்ற வாழைப்பழங்களின் தோல், காற்று பட்டாலே எளிதில் கருத்துவிடும். ஆனால், கற்பூரவள்ளியில் அப்படியில்லை.. இந்த பழத்தின் தோல், கருத்துவிட்ட பிறகும்கூட, சாப்பிடக்கூடியது.. அதே ருசி, அதே சத்துக்களும் நிறைந்திருக்கும்.

விதைகள் இந்த பழத்தில் நிறைந்து காணப்படும்.. செரட்டோனின், நார் எபினெஃப்ரின் சத்துக்கள் அடங்கியிருப்பதால், அஜீரணத்தை போக்குகிறது.. பசியையும் தூண்டிவிடுகிறது.. இந்த பழத்தில், மாங்கனீசு, மெக்னீசியம் நிறைய உள்ளால், எலும்புகளுக்கும், பற்களுக்கும் வலுவை தருகிறது.
குளிர்ச்சி: உடல் உஷ்ணத்தை போக்கி, கண்களுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது இந்த வகை வாழை.. தோலில் சொறி, சிரங்குகள், புண்கள், அரிப்பு, தடிமன் போன்ற பிரச்சனைகள் இருந்தால் அவைகளை போக்கி, இந்த கற்பூரவள்ளியே போதும். முக்கியமாக, ரத்தசோகை பிரச்சனையில் இருப்பவர்களுக்கு, இது ஒரு சிறந்த டானிக் என்றே சொல்லலாம்.. தினமும் இந்த பழத்தை ஒன்றிரண்டு சாப்பிட்டு வந்தாலே, ரத்தவிருத்தி அதிகமாகும்.. ரத்த சோகையும் விலகிவிடும்..
இன்னொரு முக்கிய பலனையும் இங்கு சொல்ல வேண்டியுள்ளது.. ஆய்வு அறிக்கையின்படி, கற்பூரவள்ளி ரத்தக்குழாய்களின் மெல்லிழைவான தசைகளை ஓய்வெடுக்க வைத்து, ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறதாம்.. அத்துடன் இதய துடிப்புகளை வலிமைப்படுத்தி, அழுத்தத்தின் வேகத்தை குறைக்க உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இரும்புச்சத்து: அதேபோல, திராட்சைப்பழத்தை எடுத்துக் கொண்டால், வைட்டமின்கள் B1, B2, B6, B12, C போன்ற சத்துக்களும், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்களும் நிறைந்திருக்கின்றன..
பித்தத்தை தணிக்கக்கூடிய தன்மை இந்த பழத்துக்கு உண்டு.. உடலில் ரத்தம் குறைவாக இருந்தால், அதற்கு இந்த பழம், வரப்பிரசாதமாக கை கொடுத்து உதவுகிறது.. ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.. புதிய ரத்தத்தை ஊறவைக்கும் ஆற்றல் இதற்கு உள்ளது. இதனால் தமனிகள் சுத்தமாகின்றன..
இதய நலன்: இந்த பழத்திலிருக்கும் ரெஸ்வெராட்ரோல் என்ற கலவையானது, இதய செயல்பாட்டுக்கு உறுதுணையாகிறது.. திராட்சையில் உள்ள சேர்மங்கள் லிப்பிட்களைக் கட்டுப்படுத்தும் பண்புகளை கொண்டுள்ளதால், இதய நோய்களை நெருங்கவிடாமல் செய்கிறது. திராட்சை பழத்தை சாப்பிட்டு வருபவர்களுக்கு, சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதில்லையாம்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications