Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் வாழைப்பழத்தை விட சத்து இருக்கா? நீரிழிவு நோயாளி சர்க்கரை வள்ளி சாப்பிடலாமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயற்கை நமக்கு வழங்கிய கொடைகளில் சர்க்கரைவள்ளிக் கிழங்கு மிக முக்கியமானது. சுவையும் ஆரோக்கியமும் ஒருங்கே அமைந்த இந்த கிழங்கு, பல நோய்களுக்கு மருந்தாகவும், உடல் ஆரோக்கியத்தைப் பேணும் அருமருந்தாகவும் திகழ்கிறது. இதன் இனிப்புச் சுவைக்குக் காரணம் இதில் நிறைந்துள்ள மாவுச்சத்தே ஆகும். இதில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள் மற்ற கிழங்கு வகைகளை விட மேலோங்கி நிற்கின்றன. அவைகளை பற்றி இங்கே பார்ப்போம்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் வைட்டமின் A, D, C மற்றும் பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து எனத் தாதுக்களின் சுரங்கமாக இது விளங்குகிறது. சுவாச பிரச்னை, மூட்டுவலி மற்றும் வயிற்றுப்புண் உள்ளவர்களுக்கு டாக்டர்கள் பெரும்பாலும் இந்தக் கிழங்கை பரிந்துரைக்கின்றனர். இதில் உள்ள வைட்டமின் B-6 செரிமான மண்டலத்தைச் சீர் செய்வதோடு, இதய நோய்களில் இருந்தும் நம்மைப் பாதுகாக்கிறது.

Sweet Potatoes

சர்க்கரை வள்ளிக்கிழங்கு

ரத்த அணுக்களின் உருவாக்கத்தில் சர்க்கரைவள்ளிக் கிழங்கு முக்கியப் பங்கு வகிக்கிறது. இதில் உள்ள வைட்டமின் D நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், எலும்புகள், பற்கள் மற்றும் நரம்புகளின் ஆரோக்கியத்தைப் பலப்படுத்துகிறது.

தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டிற்கும் இது துணைபுரிகிறது. சருமப் பராமரிப்பைப் பொறுத்தவரை, குளிர்காலங்களில் ஏற்படும் வறட்சியைப் போக்கிப் பொலிவைத் தருவதில் இது நிகரற்றது.

சூரிய ஒளியின் புற ஊதாக் கதிர்களால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுத்து, முதுமையைத் தள்ளிப்போடுகிறது. இதில் உள்ள வைட்டமின் A மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும் ஆற்றல் கொண்டவை. குறிப்பாக, மன அழுத்தத்தைக் குறைத்து மனநிலையைச் சீராக வைத்திருக்க இது உதவுகிறது.

உடல் எடை குறைக்கும் கிழங்கு

உடல் எடையை குறைக்க விரும்புவோருக்குச் சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஒரு மிகச்சிறந்த தேர்வாகும். இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஸ்டார்ச் எதிர்ப்பு பொருட்கள் உடலில் எளிதில் உறிஞ்சப்படுவதில்லை.

சாதாரண கார்போஹைட்ரேட்டுகளுக்குப் பதிலாக இத்தகைய உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது, உடலில் உள்ள கொழுப்பு எரிக்கப்படும் வேகம் அதிகரிக்கிறது. இது நீண்ட நேரம் பசியைக் கட்டுப்படுத்தி வயிற்றை நிறைவாக வைத்திருக்கச் செய்கிறது.

நீரிழிவு நோயாளிகளைப் பொறுத்தவரை, இந்தக் கிழங்கு ஒரு முரணான உணவாகவே பார்க்கப்படுகிறது. இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவை மெதுவாகவே உயர்த்துகிறது. இதன் கிளைசெமிக் குறியீடு குறைவாக இருப்பதால், "சர்க்கரை கொல்லிக் கிழங்கு" என்றும் இது அழைக்கப்படுகிறது. இருப்பினும், நீரிழிவு நோயாளிகள் மருத்துவர்களின் முறையான ஆலோசனையைப் பெற்று அளவோடு உண்பதே பாதுகாப்பானது.

பொட்டாசியம் அளவு

சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேகவைத்தோ அல்லது சுட்டோ சாப்பிடுவது அதன் முழுமையான சத்துக்களை பெற உதவும். வாழைப்பழத்தை விட இதில் பொட்டாசியம் அதிகம் என்பதால் ரத்த அழுத்தத்தைச் சீராக வைக்க உதவுகிறது. ஆனால், எதையும் அளவோடு உண்பதே சிறப்பு. பொட்டாசியம் அளவு உடலில் கூடினால் இதயச் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

அதேபோல, இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அளவுக்கு மீறினால் சிறுநீரகக் கற்களை உருவாக்கும் அபாயம் உண்டு. ஏற்கனவே சிறுநீரகம் அல்லது கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள் இதனைத் தவிர்ப்பது நல்லது. அதிகமாகச் சாப்பிடும்போது முடி உதிர்தல், உதடு வெடிப்பு மற்றும் சரும வறட்சி போன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம். எனவே, ஆரோக்கியமான வாழ்விற்குப் பெண்களுக்குத் தினசரி 700 மைக்ரோ கிராமும், ஆண்களுக்கு 900 மைக்ரோ கிராமும் பரிந்துரைக்கப்படுகிறது...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+