தாளிசபத்திரி இலை.. நோய்களை ஆட்டம் காண வைக்கும் நுரையீரலின் நண்பன்.. நலனை அள்ளி தரும் தாளிசாதி சூரணம்
சென்னை: சுவாச கோளாறுகள் முதல் ஆபத்தான புற்றுநோய் வரை விரட்டும், அற்புதமான மூலிகைதான் தாளிசபத்திரி.. இந்த இலைகளின் பயன்கள் என்ன? எந்தெந்த நோய்களை தீர்க்க இந்த இலைகள் பயன்படுகின்றன தெரியுமா? தாளிசாதி சூரணம் செய்வது எப்படி?
தாளிச மரத்திலிருந்து, கிடைக்கக்கூடியதுதான் தாளிசபத்திரி இலைகள்.. இந்த இலையில், மோனோடெர்பீன்கள், பிளேவனாய்டுகள், பைஃப்ளேவனாய்டு, கிளைகோசைடுகள், பைட்ரோ ஸ்டீரால்கள், அமினோ அமிலங்கள், சபோனின்கள், டானின்கள், ஆல்கலாயிடுகள், ட்ரைடர்பெனாய்டுகள் என ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளன.

வேதிப்பொருள்: இதில் பிரதானமாக உள்ளது பேக்லடாக்சால் என்ற வேதிப்பொருளாகும்.. இந்த வேதிப்பொருள்தான், மருந்தாக எண்ணற்றோருக்கு உதவி கொண்டிருக்கிறது. குறிப்பாக, நுரையீரலிலுள்ள சளி, கபத்தை வெளியேற்றும் தன்மை இந்த இலைக்கு உள்ளது..
பெரும்பாலும், நம்முடைய இயற்கை மூலிகைகள் நுரையீரலை காக்கக்கூடியவைதான்.. சளி, இருமல், மூக்கடைப்பு, தலைபாரம், போன்ற சுவாச பிரச்சனைகளுக்கு ஓமவள்ளி, கருந்துளசி, நொச்சி இலைகள் இப்படி ஏராளமான மூலிகைகள் உள்ளன. எனினும், தாளிசபத்திரி என்ற மூலிகையும், மருத்துவ உலகில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக விளங்குகிறது. தாளிசாதி என்றும் இதனை சொல்வார்கள்.
சளி, மூக்கடைப்பு: சளி, மூக்கடைப்பு, சைனஸ், தலைவலி, நீர்க்கோவை, தலைபாரம், கடுமையான காய்ச்சல் என மொத்த சுவாச கோளாறுகளையும், விரைந்து குணப்படுத்தக்கூடிய தன்மை இந்த தாளிசபத்திரி இலைகளுக்கு இருக்கிறது. எனவே, இந்த இலையில் கஷாயம் தயாரித்து குடிப்பது சிறந்த நிவாரணத்தை தரும்.
ஆபத்தான கேன்சரையும் விரட்ட, இந்த இலையிலுள்ள வேதிப்பொருட்கள் உதவுகின்றன. அதாவது புற்றுக்கட்டிகளை கரைக்கக்கூடிய தன்மை இந்த இலைகளுக்கு இருக்கிறதாம்.
இலைகள்: அதனால்தான், தாளிசபத்திரி இலைகளை உலர வைத்து, பவுடர் போல செய்து வைத்து கொண்டால், வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற தொந்தரவுகளுக்கு பயன்படுத்தலாம்.. அல்லது இலைகளை பறித்து நீரில் போட்டு கொதிக்க வைத்தும் குடிக்கலாம்.. அல்லது குளிக்கும் வெந்நீரிலும் யூக்கலிப்டஸ் இலைகளை போல பயன்படுத்தலாம். இதனால், தலைவலி, தலைபாரம், உடல்வலி, சோர்வு அனைத்தும் விலகும்.
இந்த இலைகள் பச்சையாக கிடைக்காவிட்டாலும், நாட்டு மருந்து கடைகளில், தாளிசாதி சூரணம், தாளிசாதி வடகம் என்ற பெயர்களில் என்ற பெயரில் விற்கிறார்கள்..
தாளிசபத்திரியுடன், மிளகு, சுக்கு, அரிசி, திப்பிலி, கற்கண்டு சேர்த்து தயார் செய்வதுதான் இந்த சூரணம்.. எப்பேர்ப்பட்ட காய்ச்சலையும் கட்டுக்குள் கொண்டுவருவதுடன், கட்டுக்கடங்காத சளி, இருமலையும், இந்த சூரணம் அடக்கிவிடும். இதனால், சுவாச உறுப்புகளும் உறுதிப்பெறும்.
மஞ்சள் காமாலை: காதுகளில் இரைச்சல், மூக்கிலிருந்து நீர் வடிவது, வயிறு எரிச்சல், அஜீரணம், வயிறு புண்கள் போன்றவற்றுக்கு இந்த சூரணம் சிறந்த மருந்தாகும்... மஞ்சள் காமாலையால் அவதிப்படுபவர்களும் இந்த சூரணத்தை பயன்படுத்தலாம்.. பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனை என்றாலும், இந்த சூரணத்தை பயன்படுத்தலாம்.
வீட்டிலேயேகூட இந்த சூரணத்தை தயார் செய்யலாம்.. தாளீசம் 10 கிராம், லவங்கப்பட்டை 10 கிராம் , இலவங்கப்பத்திரி 10 கிராம், ஏலக்காய் 10 கிராம், கிராம்பு 10 கிராம், தான்றிக்காய் 10 கிராம், நெலலிவற்றல் 10 கிராம், சாதிக்காய் 10 கிராம், சாதிபத்திரி 10 கிராம், சுக்கு 10 கிராம், மிளகு 10 கிராம், திப்பிலி 10 கிராம், கடுக்காய் 10 கிராம், ஓமம் 10 கிராம், சதகுப்பை 10 கிராம், கருஞ்சீரகம் 10 கிராம், கண்டத்திப்பிலி 10 கிராம், சீரகம் 10 கிராம், சிறுநாகப்பூ 10 கிராம், அதிமதுரம் 10 கிராம், கோஷ்டம் 10 கிராம், சடமஞ்சள் 10 கிராம், பெருங்காயம் 10 கிராம், தனியா 60 கிராம், சர்க்கரை 120 கிராம்
அபார மருந்து: இவை அனைத்தையும் லேசாக வறுத்து பொடி செய்து சலித்து வைத்து கொள்ள வேண்டும். இந்த சூரணத்தை 1 கிராம் எடுத்து தேனுடன் காலை மாலை 2 வேளை சாப்பிட்டு வரலாம். இதனால் வாதநோய், பித்தநோய் குணமாகும், நீர்ச்சுருக்கு நீர்க்கடுப்பு, குடல் சார்ந்த பிரச்சனைகள் தீரும்..
சரும நோய்களும் விலகும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு இந்த சூரணம் மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். எனவே, இந்த மூலிகையை, சித்த மருத்துவர்களின் முறையான ஆலோசனையை பெற்று பயன்படுத்தலாம்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications