கள்ளச்சாராயம் உயிரை கூட காப்பாத்திடலாம்.. ஆனால் கண்ணை முடியவே முடியாது.. டாக்டர் எச்சரிக்கை
சென்னை: 10 மில்லி கள்ளச்சாராயத்தை குடித்தாலே கண் பறிபோகும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதே வேளையில் இந்த சாராயத்தை 20 மில்லி குடித்தால் உயிரையே எடுத்துவிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
விழுப்புரம்: மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்துவிட்டு 3 பேர் பலியானதை அடுத்து கிழக்கு கடற்கரை சாலையில் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் கடற்கரை ஓரம் வம்பாமேடு என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர்கள் சங்கர் (50), தரணிவேல் (50), மண்ணாங்கட்டி (47), சந்திரன் (65), சுரேஷ் (65). மற்றொரு மண்ணாங்கட்டி (55) ஆகியோர் கள்ளச்சாராயம் குடித்தனர்.

சாராயம் குடித்துவிட்டு அவரவர் வீட்டிற்கு சென்ற அவர்கள் 6 பேரும் திடீரென மயங்கி விழுந்தனர். இவர்கள் மயங்கி விழுவதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவர்களை மீட்டு புதுவை ஜிப்மர் மருத்துவமனை, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதில் ஜிப்மர் மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட சங்கர் நேற்று முன் தினம் இரவு சிகிச்சை பலனின்றி பலியானார். இதையடுத்து எக்கியர்குப்பம் மீனவ கிராமத்திற்கு மரக்காணம் போலீஸார் விரைந்தனர். அங்கு கள்ளச்சாராயத்தை குடித்துவிட்டு மயக்க நிலையில் வாந்தி எடுத்த தெய்வமணி, செந்தமிழன், கிருத்திகை வாசன், ரமேஷ் , ராஜமூர்த்தி ஆகிய 5 பேரை மீட்ட போலீஸார் போலீஸார் வாகனத்திலேயே அவர்களை மரக்காணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்த விழுப்புரம் ஆட்சியர் பழனி, காவல் துறை எஸ்பி ஸ்ரீநாதா ஆகியோர் புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுபவர்களிடம் உடல் நலம் குறித்து விசாரித்தனர். இந்த நிலையில் ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த சுரேஷ், தரணிவேலே ஆகியோர் இன்று அதிகாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதனால் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. மேலும் நேற்று காலை டிஐஜி பகவலன், எஸ்பி ஸ்ரீநாதா உள்ளிட்டோர் எக்கியார்குப்பம் கிராமத்திற்கு விரைந்தனர். மரக்காணம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடும் நபர்களை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் நேற்று ராஜமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. தற்போது மேலும் சிலர் உயிரிழந்ததால் இன்று பலி எண்ணிக்கை 12- ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் ஏற்கெனவே கள்ளச்சாராய விவகாரத்தில் 4 பேரை முதல்வர் சஸ்பெண்ட் செய்திருந்த நிலையில் இன்றைய தினம் எஸ்பி ஸ்ரீநாதாவையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும் விழுப்புரம் சென்று கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இந்த நிலையில் கள்ளச்சாராயம் குடித்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து தந்தி டிவிக்கு மருத்துவர் ரவி பேட்டி அளித்திருந்தார். அவர் கூறுகையில் கள்ளச்சாராயத்தில் இருப்பது மெத்தனால். அது இன்டஸ்டிரியல் சால்வென்ட். அதை ஆன்டி ப்ரீஸ் ஏஜென்ட்டாக பயன்படுத்துகிறார்கள். மருத்துவ துறையில் மெத்தனாலை பயன்படுத்துவதில்லை.
கள்ளச்சாராயத்தை வெல்லம், அழுகிய பழங்கள், அரிசி கொண்டு தயார் செய்கிறார்கள். அதில் கொஞ்சம் மெத்தனாலையும் பயன்படுத்துகிறார்கள். மதுவில் இருப்பது எத்தனால். அது எப்படி போதையை கொடுக்கிறதோ அது போல் மெத்தனாலும் போதையை கொடுக்கும். இந்த மெத்தனால் விலை குறைவாக கிடைப்பதால் இதை கள்ளச்சாராயத்தில் சேர்த்துவிடுகிறார்கள். இது மிகவும் ஆபத்தானது.

10 மில்லி முதல் 15 மில்லி குடித்தாலே கண் பறிபோகும். 50 மில்லி முதல் 100 மில்லி வரை குடித்தால் ஒரு சில மணி நேரங்களிலேயே உயிர் போவதற்கு ஆபத்து உள்ளது. இது மருத்துவத்தில் பயன்படுத்தும் வேதிப்பொருள் கிடையாது. இந்த கள்ளச்சாராயத்தில் எத்தனால் கலந்திருக்கா இல்லை மெத்தனால் கலந்திருக்கா என்பது சாராயம் குடிப்போருக்கு தெரியாது.
இந்த சாராயம் குடித்ததுமே தலைச்சுற்றல் தொடங்கும். இதை அவர்கள் போதை என நினைத்துக் கொண்டு மருத்துவமனைகளுக்கு செல்ல மாட்டார்கள். இந்த சாராயம் குடித்து 1 மணி நேரத்தில் கண் பார்வை பாதிக்கும்போதுதான் இவர்களுக்கு அதன் பாதிப்பு தெரிகிறது. இதை குடிப்பவர்கள் எல்லாம் ஏழை மக்கள்தான். இவர்களுக்கு மருத்துவமனைக்கு செல்வதற்கு காலதாமதமாகும். அதற்குள் கண்பார்வை பறி போகும்.
ரத்தம் அசிட்டிக்காக மாறிவிடும். உயிரற்ற உடல்களை பதப்படுத்தும் பார்மாலிடிஹைட் இந்த மெத்தனாலில் இருக்கிறது. அது பார்மிக் அமிலமாக மாறி ரத்தத்தை அமிலத்தன்மையாக மாறும். இதனால் மூச்சு வாங்கும், கல்லீரல் பாதிக்கும். எனவே கள்ளச்சாராயம் குடிக்கக் கூடாது. அப்படியே குடித்தாலும் வழக்கத்திற்கு மாறாக உடல் உபாதை இருந்தால் உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். அங்கு வைத்தியம் பார்ப்பார்கள். உயிரை காப்பாற்றலாம், ஆனால் கண் பார்வையை திரும்ப வரவழைப்பது பெரும் சவாலாக இருக்கும் என்றார்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications