வாய்வுக் காய் வாழைக்காயா? ஹார்ட் அட்டாக்கை தடுக்கும் அருமருந்து.. எத்தனை நன்மைகள் தெரியுமா?
சென்னை: வாழைக்காயை சாப்பிட்டால் இத்தனை நன்மைகள் கிடைக்கின்றனவா? இது தெரியாமே வாயுக்காய்னு ஒதுக்கி வச்சிட்டாங்களே!
வாழை மரத்தின் தண்டு, பூ, காய், பழம் என அனைத்தும் உண்ணக் கூடியது. அது போல் அதன் இலையில் சாப்பிட்டால் உடல் நலனுக்கு நல்லது. எனவே வாழை இலையில் சுடு சாதம் போட்டு உண்ண வேண்டும் என பெரியவர்கள் கூறுவர்.

இன்று சில இடங்களில் வாழை இலையில் உண்ணும் கலாச்சாரம் இருக்கிறது. இதை தினந்தோறும் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். பொதுவாக வாழைக்காய் வாய்வு தொல்லை தரும் என்பார்கள். இந்த காய் முட்டி வலியை ஏற்படுத்தும் என சொல்வார்கள்.
இதனால் இந்த காயை பலர் சாப்பிடுவதை தவிர்த்து வருகிறார்கள். ஆனால் இதில் மருத்துவ குணங்கள் நிறைய இருக்கின்றன. வாழைக்காய் குடல் செயல்பாட்டை மீட்டெடுக்க உதவுகிறது. புற்றுநோய் வருவதை தடுக்கிறது. குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் அழிவதை தடுக்கிறது. வாழைக்காயில் இதயத்திற்கு உகந்த ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.

இந்த காய் சர்க்கரை அளவை பராமரிப்பதில் நன்மையை ஏற்படுத்தும். இதில் உள்ள பொட்டாசியம் தசைகளின் சுருக்கம் மற்றும் ரத்த அழுத்தத்தை ஒழுங்குப்படுத்த உதவுகிறது. அது போல் வாழைப் பழங்களுடன் ஒப்பிடும் போது வாழைக்காய்களில் குறைந்த சர்க்கரை உள்ளது. எனவே தான் இது ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உங்கள் உடலை ஃப்ரீ ரேடிக்கல்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன. வாழைக்காயில் வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் மற்றும் பல பைட்டோநியூட்ரியண்ட்களைக் கொண்டுள்ளன, அவை வீக்கத்தைக் குறைக்க உதவும்.
வாழைக்காய்களில் உள்ள உயர் எதிர்ப்பு ஸ்டார்ச் மற்றும் பெக்டின் பசியைக் கட்டுப்படுத்த உதவும். அதன் நார்ச்சத்து உணவுக்குப் பிறகு திருப்தியாக வயிறு நிறைந்தது போல் நீண்ட நேரத்திற்கு இருக்கும். இதனால் அது அதிகப்படியான கலோரிகளை நீக்கி, பயனுள்ள எடை இழப்புக்கு வழிவகுக்கும். இவை மாரடைப்பையும் தடுக்க வல்லது. இத்தனை நன்மைகள் கொண்ட இந்த காயை இனியும் பார்த்தால் விடாதீர்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications