"அந்த" விஷயத்தில் ஆர்வமே இருக்காதாம்.! "மன அழுத்தம்" ரொம்பவே டேஞ்சர்.. அலர்ட்டா இருங்க மக்களே
வாஷிங்டன்: மன அழுத்தம் என்பது இப்போது மிகப் பெரிய பிரச்சினையாக மாறி உலகையே ஆட்டிப்படைக்கும் நிலையில், அதற்கான காரணம்.. அதில் இருந்து தப்பிக்க இருக்கும் வழிகள் குறித்துப் பார்க்கலாம்.
இந்த நவீனக் காலத்தில் நமது உடலில் பல்வேறு விதமாக மாற்றங்கள் நடந்துள்ளது. மனிதர்கள் வரலாற்றிலேயே இந்தளவுக்கு நமது உடல் உழைப்பு குறைந்ததே இல்லை. ஒரே இடத்தில் நாம் பல மணி நேரம் அமர்ந்து வேலை செய்து வருகிறது. இதுபோல பல மாற்றங்களைச் சொல்லலாம்.

இவை நமக்கு நமக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. அதில் முக்கியமானது மன அழுத்தம்.. பொதுவாக இந்த மன அழுத்தம் என்பது நமக்கு உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும்.
அழுத்தம்: மன அழுத்தம் என்பது சில நேரங்களில் பாசிட்டிவ் பாதிப்புகளையும் கூட தரும்.. ஆபத்தான சூழலில் இது நம்மை அதிக விழிப்புடன் இருக்கச் செய்யும். மேலும், சிக்கலான சூழ்நிலைகளில் சிறப்பாகச் செயல்பட உதவுகிறது. உதாரணமாக மனிதர்கள் காடுகளில் இருந்த போது வேட்டையாடும் சமயங்களில் இந்த அழுத்தமே சிறப்பாக வேட்டையாட உதவி இருக்கிறது. இந்த நவீனக் காலத்திலும் கூட இக்கட்டான சூழல்களில் நாம் சிக்கினால் இந்த மன அழுத்தம் நம்மைக் காக்கும்.
இருப்பினும், மன அழுத்தம் குறுகிய காலமாக இருந்தால் மட்டுமே அது பயனுள்ளதாக இருக்கும். அதிக காலம் மன அழுத்தம் இருந்தால் அதனால் இதய நோய் ஏற்படும். கவலை மற்றும் மனச்சோர்வு போன்ற மன நலப் பிரச்சினைகளும் கூட ஏற்படும். மன அழுத்தம் ஏற்படும் போது நீங்கள் நடந்து கொள்ளும் முறையே முற்றிலுமாக வேறாக இருக்கும். இது நமது அன்றாட பணிகளைக் கடுமையாகப் பாதிக்கும்.
அறிகுறி: மக்கள் மன அழுத்தம் ஏற்படும் போது அதை ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு மாதிரி கையாள்வார்கள். சில பொதுவான அறிகுறிகள் என்றால் தூங்குவதில் பிரச்சனை, அதீத வியர்வை அல்லது பசியின்மை ஆகியவை இருக்கும். மேலும், கவலை அல்லது பதற்றம் போன்ற உணர்வுகளும் அதிகம் ஏற்படும்.
கவனம் செலுத்துவதில் சிரமம், மனநிலை மாற்றம், எரிச்சல், அடிக்கடி ஏற்படும் கோபம், ரிலாக்ஸ் செய்ய முடியாமல் போவது ஆகியவையும் ஏற்படும். இதுபோன்ற நேரங்களில் தான் மது, புகைப் பழக்கத்திற்கு அடிமையாவோம். மேலும், பாலியல் உறவுகளிலும் நாட்டம் குறையும்.
காரணங்கள்: இந்த மன அழுத்தம் எதனால் ஏற்படுகிறது என்ற கேள்வி அனைவருக்கும் வரும். இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது. அதுவும் இந்த நவீனக் காலத்தில் மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள் கொட்டிக் கிடக்கிறது என்றே சொல்லலாம். அதீத வேலை, பண சிக்கல், குடும்பம் தொடங்கி பல்வேறு காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுகிறது. விவாகரத்து, வேலையின்மை கூட காரணம். இன்னும் சிலருக்கு வீடு மாறுவது, வேலை மாறுவது போன்ற சாதாரண நிகழ்வுகளும் கூட மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.
நமது நாட்டில் உண்மையில் மன ரீதியான பிரச்சினைகள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை என்பதே உண்மை. இதனால் மன அழுத்தத்தை எல்லாம் பொதுவாக ஒரு பிரச்சினையாகவே கருதமாட்டார்கள். ஆனால், இது மோசமான சிக்கலை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது. எனவே, இதைச் சரி செய்வது ரொம்பவே முக்கியம்..
தப்பிக்க என்ன செய்ய வேண்டும்: இதற்கு முதலில் நீங்கள் மன அழுத்தத்திற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும். காரணத்தைக் கண்டறிந்து அதைச் சரி செய்ய முயல வேண்டும். மேலும், உங்கள் பாட்னர் அல்லது நண்பர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். உடல் அழைப்பு அதிகம் இருக்கும் வேலைகளைச் செய்யுங்கள். தினமும் வாக்கிங் அல்லது ஜாக்கிங் செல்லாம். இவை எல்லாம் மன அழுத்தத்தைச் சமாளித்து நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ உங்களுக்கு உதவும்.
இது பொதுவான செய்தி மட்டுமே இதை யாரும் மருத்துவ ஆலோசனையாகக் கருதக்கூடாது. உடல்நல சிக்கல்கள் ஏற்பட்டால் உடனடியாக அது தொடர்பாகச் சிகிச்சை பெற மருத்துவரை அணுகவும்.












Click it and Unblock the Notifications