கெட்ட கெட்ட கொழுப்புகள் கரையணுமா.. வீட்டில் கறிவேப்பிலை இருக்கா.. அதைவிடுங்க.. இந்த டிப்ஸ்ஸை பாருங்க
சென்னை: கெட்ட கொழுப்புகளை, நம்முடைய உடலில் குறைத்து, நல்ல கொழுப்புக்களை எப்படி அதிகப்படுத்தி கொள்வது தெரியுமா?
நம்முடைய உடலில் 2 வகையான கொழுப்புகள் உள்ளன.. ஒன்று ஹெச்டிஎல் (High-Density Lipoprotein) எனப்படும் நல்ல கொழுப்பு... எல்டிஎல் ( Low-Desity Lipoprotein ) எனப்படும் கெட்ட கொழுப்பு...

இந்த கெட்ட கொழுப்புதான் ரத்த நாளங்களில் படிந்து ஆபத்தாக நமக்கு மாறுகிறது. ஆனால், நல்ல கொழுப்பு, நம்முடைய உடலில் அதிகம் இருக்கும்போது, இந்த கெட்ட கொழுப்பை அது குறைக்க உதவுகிறது. அதனால், நல்ல கொழுப்பை அதிகப்படுத்திக் கொண்டாலே, கெட்ட கொழுப்பின் ஆபத்து இருக்காது.
நல்ல கொழுப்பு: இந்த நல்ல கொழுப்பை எப்படி அதிகப்படுத்தி கொள்ள வேண்டும்.. உடலை வலிமையாக்கும் பயிற்சிகளை செய்யும்போது, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க செய்யலாம்.. மற்றொன்று, உணவுப்பழக்கத்தின்மூலம் கொண்டுவரலாம். குறிப்பாக நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.. காய்கறிகள், பழங்களில் நார்ச்சத்து அதிகம் இருக்கும்...
கோதுமை மாவு: அதேபோல, ஓட்ஸ், பார்லி, சோயா போன்றவைகளை உட்கொள்ளும்போது, கெட்ட கொழுப்பு குறையும்.. அதாவது, உப்புமா, கஞ்சி, சப்பாத்தி என ஏதாவது ஒரு ரூபத்தில் ஓட்ஸை உணவில் சேர்த்து கொண்டாலே போதும்.. பார்லியை வேகவைத்து, உப்பு நிறைய சேர்க்காமல் வெறும் நீராக குடிக்கலாம்... ஒரு கப் கோதுமை மாவுடன் கால் கப் சோயா மாவும் சேர்த்து, சப்பாத்தி செய்து சாப்பிடலாம். ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமுள்ள மீன், சியா சீட்ஸ் போன்றவற்றை சாப்பிடலாம்..
மீனை வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் சேர்ப்பதன் மூலம் உடலுக்குத் தேவையான நல்ல கொலஸ்ட்ரால் கிடைத்து விடுவதுடன், கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் சேர்வதும் தவிர்க்கப்பட்டு விடும்..
கொழுப்பு கட்டிகள்: பீன்ஸ், பட்டாணி, சிவப்பு ராஜ்மா போன்ற பருப்பு வகைகள் முழுக்க முழுக்க புரதம் வாய்ந்தவை... ரத்தக்கொழுப்பு கட்டிகளை இவைகள் குறைக்கும் தன்மை கொண்டவையும் என்பதால், இவைகளை உணவில் அதிகம் சேர்த்து கொள்ளலாம்.. பீன்ஸ் காய்களில் நிறைய நார்சத்து இருப்பதுடன், கொழுப்பின் அளவையும் உறிஞ்சிவிடுகிறது.. சிறுதானியங்களிலும் நிறைய நார்ச்சத்து உள்ளதால், கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை கொண்டுள்ளது.
பாதாம், வேர்க்கடலை இவையெல்லாம் நல்ல கொழுப்பை உற்பத்தி செய்யக்கூடியவை. நார்ச்சத்து, மினரல்களையும் அதிகம் உள்ளதால், தாராளமாக சாப்பிடலாம்.
இஞ்சி: அதேபோல இஞ்சியை எக்காரணம் கொண்டும் தவிர்க்க கூடாது.. அடிவயிற்றில் தங்கியுள்ள கொழுப்பினை கரைப்பதில் பெரும்பங்கு இந்த இஞ்சி-க்குதான் உண்டு.. இதில், ஆண்டிஆக்ஸிடண்ட் உள்ளதால், கெட்ட கொழுப்பினை கரைக்க உதவுகின்றது. அரை ஸ்பூன் இஞ்சிப்பொடியைச் சுடுநீரில் கலந்துதேன் கலந்து குடித்தாலே, ரத்தத்தில் உள்ள கொழுப்புகள் மெல்ல மெல்ல கரையும் என்கிறார்கள்..
அல்லிசின் என்ற வேதிப்பொருள் பூண்டுகளில் அதிகம் உண்டு.. அதனால், தினமும் சமையலில் பூண்டு அதிகம் சேர்த்து கொள்வதால், கெட்ட கொழுப்பு குறையக்கூடும்.. ரத்த அழுத்தம் உயர்வதைக் தடுக்கிறது.. மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளை குறைத்து, தமனிகள் சுவர்களில் தகடு படிவதைத் தவிர்க்கிறது.. பூண்டை பச்சையாக சாப்பிட்டால், இன்னும் நிறைய பலன் கிடைக்குமாம். ஆக மொத்தம், இஞ்சி - பூண்டு இவைகளை அதிகமாக சேர்த்து சமையல் செய்துவந்தாலே பல பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது.
கருவேப்பிலை: கருவேப்பிலையில் மிகவும் குறைந்த அளவு கலோரி உள்ளதால், கெட்ட கொழுப்பைக் கரைக்க உதவும். வெங்காயத்தில் உள்ள கியர்சிடின் என்ற வேதிப் பொருள் ரத்தக்குழாய்களில் சேர்ந்துள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் குணம் கொண்டவை... கொள்ளுவை ஏதாவது ஒருவகையில், சட்னியாக, துவையலாக, கஞ்சியாக செய்து சாப்பிட்டால், கெட்ட கொலஸ்ட்ராலை நீக்க உதவும்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications